இன்றைய ராசி பலன் | 20/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ராகு – கேது புத்தாண்டு பலன்கள் 2022 Source link

திருப்பதி போகலாம்னு இருக்கீங்களா?! அடுத்த 3 மாதங்களுக்கான டிக்கெட் விவரங்கள் இதோ!

கொரோனா பரவல் குறைந்துவருவதன் காரணமாக திருமலை திருப்பதிக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த வாரம் சராசரியாக தினமும் அறுபத்தைந்தாயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்த நிலையில் வரும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான முந்நூறு ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்களை விநியோகிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலை திருப்பதி இதன்படி ஏப்ரல் ஒன்றாம் தேதிமுதல் முந்நூறு ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்கள் நாள் ஒன்றுக்கு முப்பதாயிரமும் (30,000) சர்வ … Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் – ரங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம்… திரளான பக்தர்கள் பங்கேற்பு!

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயில் ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த தலமாகும். இது 108 திவ்யதேசங்களில் ஒன்றான வைணவக் கோயிலாகக் கருதப்படுகிறது. இங்கு கோயில் கொண்டுள்ள ஸ்ரீஆண்டாள், வடபத்ர சயனப் பெருமாள் மீது தீராத அன்பு கொண்டு மார்கழி நோன்பிருந்து பங்குனி உத்தர நன்நாளில் ஸ்ரீரங்க அரங்கனைக் கைத்தலம் பற்றினாள் என்பது வரலாறு. எனவே ஆண்டுதோறும் பங்குனி உத்திர நாளில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் – ரங்கமன்னார் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்-ரங்கமன்னார் … Read more

பழநி: பங்குனி உத்திர தேரோட்டம்; 5 ஆண்டுக்கு ஒருமுறை வரும் வத்தலகுண்டு பக்தர்கள்!

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முக்கியமானது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநி. இங்கு நடைபெறும் மிகவும் பிரசித்தி பெற்ற பங்குனி உத்திரத் திருவிழா, மூன்றாம் படைவீடானமான திருஆவினன்குடிக் கோயிலில் மார்ச் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி தந்தப் பல்லக்கில் எழுந்தருளத் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. மாலையில் வெள்ளி யானை, ஆட்டுக்கிடா, காமதேனு, தங்கமயில் வாகனங்களில் சுவாமி எழுந்தருளுகிறார். ஏராளமான பக்தர்கள் தீர்த்தக் காவடி உள்ளிட்ட நேர்த்தி கடன்களைச் செலுத்தினர். பழநி பக்தர்கள் பங்குனி … Read more

பாகிஸ்தான்: பிரதமர் பதவி விலக வேண்டும்… இம்ரான்கானுக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு!

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் , நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். இந்தநிலையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த 24 எம்.பி.க்களும் ஆளும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது, வருகிற 28-ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. பாகிஸ்தான் கடந்த சில வருடங்களாகவே கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இந்தநிலையில், இம்ரான்கான் சரியாக அரசை வழிநடத்தவில்லை. அதனால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என சொந்த கட்சியினர் உட்பட பலரும் … Read more

"சோனியா காந்தியை யாரும் ராஜினாமா செய்ய சொல்லவில்லை!" – குலாம் நபி ஆசாத்

சமீபத்தில் நடைபெற்ற உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டம் மார்ச் 13-ம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தேர்தல் நடைபெற்ற ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்களைப் பதவி விலகுமாறு கட்சியின் இடைக்காலத் தலைவரான சோனியா காந்தி உத்தரவிட்டார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் அமைப்புரீதியாகச் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று ஜி-23 காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து … Read more

“வேளாண் பட்ஜெட் என்ற மாயையை ஏற்படுத்தியுள்ளனர்” – எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று காலை 10 மணிக்கு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். வேளாண் பட்ஜெட்டை வாசிக்கும் அமைச்சர் இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில், “இது வேளாண் பட்ஜெட் அல்ல. வேளாண் மானியக் கோரிக்கையின்போது தரக்கூடிய கொள்கை விளக்கக் குறிப்புதான். வேளாண் பட்ஜெட்டுக்கான தனி … Read more

Jolly O Gymkhana: "விஜய் `செம கூல்'; `ராதே ஷ்யாம்' தோல்வி ஏன்னா…"- மனம் திறந்த பூஜா ஹெக்டே!

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பீஸ்ட்’ படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. அனிருத் இசையில் வெளியான படத்தின் முதல் சிங்கிள் ‘அரபிக் குத்து’ பாடல் வைரலானது. இதனையடுத்து அதன் இரண்டாவது சிங்கிளான ‘ஜாலியோ ஜிம்கானா’ (Jolly O Gymkhana) பாடல் இன்று வெளியாக இருக்கிறது. இதே பூஜா ஹெக்டே, ‘பாகுபலி’ பிரபாஸுடன் நடித்த பிரமாண்ட படமான ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் எதிர்பார்த்தளவுக்கு வெற்றியைப் பெறவில்லை. பூஜா ஹெக்டே சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “ஒவ்வொரு படத்திற்கும் அதற்கேற்ற … Read more