`எப்படி இருக்கீங்க சங்கர்?' – அஜீத்தின் விசாரிப்பு; `அம்பானி' சங்கர் நெகிழ்ந்ததன் பின்னனி இதுதான்!

அஜித்துடன் நடிகர் அம்பானி சங்கர் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் திடீரென வைரலாகியது. ‘அஜித்-61’க்கான லுக்கில் அவர் இருந்ததாலும் with ji after ji என நடிகர் சங்கர் குறிப்பிட்டிருந்ததாலும் இது படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படமாக இருக்கும் என்ற பேச்சும் எழுந்தது. வடிவேலுவின் காமெடி டீமில் ஒருவராக அறியப்பட்டவர் சங்கர். ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ படத்தில் சாம்ஸ் ஓட்டி வரும் பைக்கின் முன் ஒரு பையன் விழுவான். அதை வைத்து வடிவேலு பஞ்சாயத்து செய்வார். அந்த பையன்தான் இந்த சங்கர். … Read more

“இன்று நிதிநிலை அறிக்கை மட்டும்தான் என்பது உங்களுக்கு தெரியாதா?" -அதிமுக-வினரிடம் அப்பாவு காட்டம்

முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் முதல் முழுமையான பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட் உரையை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வாசிக்க தொடங்கிய நிலையில், சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். பட்ஜெட் தாக்கல் செய்வதற்க்கு முன்பு பேச வாய்ப்பு அளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி மற்றும் அதிமுகவினர் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது, எஸ் பி வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்தியதை கண்டித்த அதிமுகவினர், அது குறித்து அவையில் பேச … Read more

"அப்பு இறந்ததைத் தாங்க முடியாது" – புனித் ராஜ்குமார் இறப்பை அவரின் அத்தையிடம் மறைத்த குடும்பம்!

அக்டோபர் 29 ,2021 கன்னட திரையுலகை மட்டுமின்றி இந்திய திரையுலகையே கலங்க வைத்த தினம். தனது 46 வயதினில், கன்னட பவர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட புனித் ராஜ்குமார் இயற்கை எய்தினார். இவரின் இழப்பு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. புனித் ராஜ்குமார் மறைவிற்குத் தமிழ் திரையுலகினர் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். புனித் ராஜ்குமார் மறைந்து ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால், புனித் ராஜ்குமாரின் மறைவினை அவரின் அத்தை, நாகம்மாவிடமிருந்து அவரின் குடும்பம் … Read more

“மாநிலம் வாரியாக பாஜக-வை எதிர்த்துப் போராடினால், தோற்கடிக்க முடியும்!” – ப.சிதம்பரம்

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததால் பல அதிரடி முடிவுகள் கட்சிக்குள் எடுக்கப்பட்டு வருகிறது. முதலில், தோல்வி காரணமாக சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கட்சியிலிருந்து தங்களது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக செய்திகள் உலா வந்தன. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் அவர்கள் தங்களது பதவி ராஜினாமா செய்ய முன்வந்ததாகவும், காங்கிரஸ் நிர்வாகிகள் அதனை ஏற்றுக்கொள்ளாததால் அத்தகைய முடிவு எடுக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டன. … Read more

ஜேம்ஸ் விமர்சனம்: கர்நாடக ரத்தினம் புனித் ராஜ்குமாரின் கடைசி படம் – நிறைய சண்டை, நிறையவே நெகிழ்ச்சி!

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நடித்த கடைசி படமான ‘ஜேம்ஸ்’ வெளியாகியிருக்கிறது. மார்கெட்டை ஓப்பன் மார்கெட், டீப் மார்கெட், டார்க் மார்கெட் என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அதில் இந்த டார்க் மார்கெட் என்பது எங்கு நடக்கிறது, எப்படி நடக்கிறது ஆகிய தகவல்களைத் திரட்டுவதே மிகப்பெரிய கஷ்டம் என்ற வாய்ஸ் ஓவரில் படம் தொடங்குகிறது. அப்படியான டார்க் மார்கெட்டில் கொடிகட்டிப் பறக்கும் அண்டர் வேர்ல்டு மாஃபியாக்களை அழிக்கும் அண்டர் கவர் ஆபரேஷன்தான் இந்த ‘ஜேம்ஸ்’. ஜேம்ஸ் … Read more

Doctor Vikatan: நான் HIV நோயாளி; திடீரென குறைந்த உடல் எடை; என்ன செய்வது?

நான் ஒரு HIV நோயாளி. தினமும் ஏஆர்டி மாத்திரை உட்கொள்கிறேன். எனது சராசரி எடை 59 கிலோ. தற்போது 43 கிலோவாக குறைந்திருக்கிறேன். மிகவும் கவலையாக உள்ளது. எனது எடைகூடவும் உடல் பலம் பெறவும் ஏதாவது வழி சொல்லுங்கள். என்னை நம்பி ஒரு குடும்பம் உள்ளது. – பெயர் குறிப்பிடவிரும்பாத வாசகர் (விகடன் இணையத்திலிருந்து) டாக்டர் குமாரசாமி பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி. “நீங்கள் Antiretroviral எனப்படும் ஏஆர்டி மருந்துகளைச் … Read more

“பியூட்டி பார்லர் வேலையை விட்டுடு..!” – மனைவி முகத்தில் பெட்ரோலை ஊற்றி கொளுத்திய கணவன்

புதுச்சேரி, வில்லியனுாரை அடுத்த கொம்பாக்கத்தை சேர்ந்தவர்கள் கணேசன் – அழகுமீனா தம்பதியினர். கணேசன் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த நிலையில், அவரின் மனைவி அழகுமீனா சின்னவாய்க்கால் தெருவில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் அழகு கலை நிபுணராக வேலை செய்து வந்தார். ஆனால் அந்த வேலை ஏனோ கணேசனுக்குப் பிடிக்கவில்லை. அதனால் அந்த வேலைக்குப் போகக் கூடாது என்று அழகுமீனாவிடம் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறார் கணேசன். இந்த விவகாரத்தில் இருவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும் பியூட்டி … Read more

சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்குக் கட்டணம்! – புதுச்சேரி நகராட்சி குறிப்பிடும் இடங்கள் எவை?

புதுச்சேரியில் வீடுகள், காலிமனைகள், சொத்துகள், வணிக உரிமம், குடிநீர் போன்றவற்றுக்கு வரிகளை வசூலித்துவரும் புதுச்சேரி நகராட்சி, தற்போது வருவாயைப் பெருக்க புதிய புதிய வரி விதிப்புகளிலும் ஈடுபட்டுவருகிறது. அந்த வகையில், புதுச்சேரியின் நகர்ப்புறச் சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்குக் கட்டணம் வசூலிக்க முடிவெடுத்திருக்கும் நகராட்சி, அதற்காக டெண்டர் கோரியிருக்கிறது. அதனடிப்படையில் இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படவிருக்கிறது. அதற்காக ஒவ்வொரு வீதிக்கும் டெண்டர் ஆரம்பத் தொகையை நிர்ணயித்து, அதற்குச் செலுத்தவேண்டிய முன்வைப்பு … Read more

நட்சத்திர பலன்கள்: மார்ச் 18 முதல் 24 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

இன்றைய ராசி பலன் | 18/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ராகு – கேது புத்தாண்டு பலன்கள் 2022 Source link