மகப்பேறு மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல்; உயிரிழந்த தாய்-சேய் | நெஞ்சை ரணமாக்கும் புகைப்படங்கள்

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த மாதம் 24-ம் தேதி தொடங்கிய ராணுவ யுத்தம் 19-வது நாளாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. போர் நிறுத்தம் தொடர்பாக இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பலகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. ரஷ்ய ராணுவப் படையினர் பள்ளிகள், மருத்துவமனைகள் என பாராமல் கொடூர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என உக்ரைன் ரஷ்யா மீது குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகர மகப்பேறு மருத்துவமனை மீது ரஷ்யப் … Read more

சுருளி அருவி: அதிக கட்டண வசூல்; அதிகரிக்கும் சுற்றுச்சூழல் மாசுபாடு; நடவடிக்கை எடுக்குமா அரசு?

தேனி மாவட்டம் கம்பம் அருகே அமைந்துள்ளது சுருளி அருவி. சிறந்த வழிபாட்டுத் தலமாகவும், சுற்றுலாத் தளமாகவும் அமைந்துள்ளது இந்த அருவியின் சிறப்பு. கோடைக்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவார்கள். கடந்த 2015-ம் ஆண்டு வரை எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக அருவிக்குப் பொதுமக்கள் வந்து சென்றனர். அதன் பின்பு சுற்றுலாத் துறையினரால் குறைந்த கட்டணமாக 5 ரூபாய் வசூல் செய்யப்பட்டது. பின்னர், கட்டணம் படிப்படியாக உயர்ந்து 10 ரூபாய் ஆனது. சுருளி அருவி கட்டணம் உயர்வு: கொரோனாவுக்குப் … Read more

கம்யூனிஸ்ட் நிர்வாகி வேலுச்சாமி படுகொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள்!

வட்டி தவணைக்காக பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கந்துவட்டி கும்பலுக்கு எதிராகப் போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், 12 வருடங்களுக்குப் பிறகு குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி நாமக்கல் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பளித்துள்ளது. வேலுச்சாமி இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த 2010-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த விசைத்தறி பெண் தொழிலாளி கந்துவட்டிக்காரருக்கு கட்ட வேண்டிய தவணையை … Read more

`என் மனைவி பெண்ணே அல்ல, ஆண்!' – சுப்ரீம் கோர்ட்டில் விவாகரத்து கோரும் கணவர்

மத்திய பிரதேசத்தை சேர்ந்த சாந்தாராம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமான நாளில் இருந்து அவரின் மனைவி சில நாள்கள் மாதவிடாய் என்று கூறி தாம்பத்ய வாழ்க்கைக்கு சம்மதிக்கவில்லை. அதன் பிறகு தன் தந்தை ஊருக்குச் சென்றுவிட்டார். ஆறு நாள்கள் கழித்து மீண்டும் கணவன் வீட்டிற்குத் திரும்பினார். Marriage – Representational Image திருவிழா வீதியில் பழங்குடி பெண்ணுக்கு கூட்டு பாலியல் கொடுமை; ம.பி-யில் நடந்த கொடூரம்! பிறகு சாந்தாராம் தாம்பத்ய … Read more

"புரொடக்‌ஷன் கம்பெனி, வெப்சீரிஸ். இதான் சாரோட கனவு!"- எஸ்.பி.ஜனநாதன் நினைவுகள் பகிரும் காதல் சரண்யா

சமூக மாற்றத்துக்கான படங்களை எடுத்த இயக்குநர்களில் முக்கியமானவர் எஸ்.பி.ஜனநாதன். ‘இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ போன்ற படங்களை எடுத்தவர். ‘லாபம்’ படத்தின் எடிட்டிங் வேலைகளில் இருந்தவர் உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் கடந்த வருடம் இறந்தார். இன்று (மார்ச் 14) அவரது நினைவுதினம். அவரது நினைவலைகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் நடிகை ‘காதல்’ சரண்யா. இவர் எஸ்.பி.ஜனநாதனின் ‘பேராண்மை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். தவிர, ‘லாபம்’ படத்திலும் பணியாற்றியிருக்கிறார். எஸ்.பி.ஜனநாதன் எஸ்.பி.ஜனநாதன் சார் … Read more

சித்ரா ராமகிருஷ்ணா: “அவங்களும் கைதி தான்..!" – வீட்டுச் சாப்பாடுக்கு `நோ' சொன்ன நீதிபதி

தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் 2013 முதல் 2016 வரை சித்ரா ராமகிருஷ்ணா இருந்தார். அந்த காலகட்டத்தில், பல ஊழல்கள் தேசிய பங்குச்சந்தையில் நடைபெற்றுள்ளன. நிர்வாகம் சார்ந்த மிக முக்கியமான தகவல்களை `இமயமலை யோகி’ என்று சொல்லப்படும் ஒரு நபருக்கு மின்னஞ்சல் மூலமாக சித்ரா ராமகிருஷ்ணா தெரிவித்துவந்துள்ளார். இதையடுத்து அவர் மீது சி.பி.ஐ வழக்குத் தொடர்ந்தது. அதற்குப் பின்னர் சித்ரா கைதும் செய்யப்பட்டார். நீதிமன்றம் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. சிறையில் … Read more

பிள்ளை வரம் அளிக்கும் பொன்னூசல் பதிகம்… திருவாசக முற்றோதல் செய்யும் அற்புதங்களில் இதுவும் ஒன்று!

‘எங்கெல்லாம் திருவாக முற்றோதல் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் பொன்னூசல் பதிகம் பாடும்போது, பிள்ளை வரம் கிடைக்காத இது போன்ற தம்பதிகள் இவ்வாறும் தொட்டில் கட்டி கூடவே பதிகம் பாடுவது வழக்கம். இப்படி பாடினால் அவர்களுக்கு விரைவிலேயே பிள்ளை வரம் கிடைத்துவிடுவதும் அதிசயம்!’ என்றார் அங்கிருந்த பெரியவர். சென்ற சிவராத்திரி (மார்ச் 1, 2022) அன்று திண்டிவனம் இறையானூரில் வட உத்திரகோசமங்கை எனப்படும் ஸ்ரீமங்களேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பான வழிபாடுகள் நடைபெற்று வந்தன. அதில் முத்தாய்ப்பாக புதுச்சேரி திருமதி.கீதா முத்தையன் குழுவினரால் … Read more

நாக்பூர்: குடும்பத்தில் அடிக்கடி சண்டை; மனைவி, மகளை கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்

மகாராஷ்டிரா மாநிலத்தின் இரண்டாவது தலைநகரமான நாக்பூர் ராஜீவ் நகரில் வசித்து வந்தவர் விலாஸ் காவ்டே(51). இவரின் மனைவி ரஞ்சனா. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள். இதில் மூத்த பெண்ணை திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். இது தவிர ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். விலாஸ் காவ்டேயிக்கு வேலை இல்லை. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுக்கொண்டே இருந்தது. இதனால் விரக்தி அடைந்த விலாஸ் இரவு மனைவியும், மகளும் உறங்கிய பிறகு தலையணையால் முகத்தை மூடி இருவரையும் கழுத்தை … Read more

"என் தங்கச்சி எப்பவும் சந்தோஷமா இருக்கணும்!"- ஐஸ்வர்யாவுடனான சந்திப்பு குறித்து ராகவா லாரன்ஸ்

நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். நடிகர் தனுஷை மணந்த இவர், சில வாரங்களுக்கு முன்பு அவரைப் பிரிவதாக அறிவித்தார். இருவரும் மனப்பூர்வமாகப் பிரிவதாக தங்களின் சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்புக்குப் பிறகு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்களுடைய பட வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். முக்கியமாக, ஐஸ்வர்யா தனுஷ் தன்னுடைய டைரக்‌ஷன் வேலைகளில் தன்னை பிஸியாக ஈடுபடுத்தி கொண்டுள்ளார். பல வருடங்களுக்கு முன்பாக ஐஸ்வர்யா ‘மூணு’ படத்தை தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் … Read more