Doctor Vikatan: இர்ரெகுலர் பீரியட்ஸால் கருத்தரிப்பதில் பிரச்னை வருமா?

என் வயது 27. எனக்கு எப்போதுமே இர்ரெகுலர் பீரியட்ஸ்தான். திருமணமாகி 2 வருடங்களாகியும் கருத்தரிக்கவில்லை. இர்ரெகுலர் பீரியட்ஸுக்கும் கருத்தரிக்காததற்கும் ஏதேனும் தொடர்புண்டா? – ஸ்வேதா (விகடன் இணையத்திலிருந்து) மருத்துவர் ஸ்ரீதேவி பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி. “முறையற்ற மாதவிடாய் சுழற்சி எனப்படும் இர்ரெகுலர் பீரியட்ஸுக்கும் கர்ப்பம் தரிக்காததற்கும் தொடர்பு உண்டா என்று கேட்டிருக்கிறீர்கள். இர்ரெகுலர் என்றால் எத்தனை நாள்களுக்கு ஒருமுறை உங்களுக்கு பீரியட்ஸ் வருகிறது என்ற விவரம் … Read more

காங்கிரஸ்: “எத்தகைய தியாகத்துக்கும் தயார்” -சோனியா காந்தி.. காரிய கமிட்டி கூட்டத்தில் நடந்தது என்ன?

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் கடந்த 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கையோடிநடந்து முடிந்தது. இதில், காங்கிரஸ் கட்சியானது ஒரு மாநிலத்தில் கூட ஆட்சியைப் பிடிக்கமுடியாமல் தோல்வியடைந்துள்ளது. அதிலும் முக்கியமான மாநிலமாக பார்க்கப்பட்ட உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் வெறும் 2 இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வியைச் சந்தித்தது. மேலும் பஞ்சாப்பில் ஏற்கெனவே இருந்த ஆட்சியைக் கூட தக்கவைத்துக்கொள்ளவில்லை. இதில் பா.ஜ.க, பஞ்சாப்பை தவிர்த்து மற்ற 4 மாநிலங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் … Read more

இன்றைய ராசி பலன் | 14/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ராகு – கேது புத்தாண்டு பலன்கள் 2022 : Source link

எப்போதெல்லாம் தாம்பத்தியத்திற்கு `நோ' சொல்லவேண்டும்? – காமத்துக்கு மரியாதை – S2 E11

“விருப்பமிருந்தால் வாழ்நாளின் இறுதிவரை தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளலாம். ஏன் மாதவிலக்கு நாள்களில், கர்ப்ப காலத்தில்கூட தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளலாம் என்று பல கட்டுரைகளிலும் காணொளிகளிலும் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். அதே நேரம், எப்போது செக்ஸ் கூடாது; யாருடன் செக்ஸ் கூடாது; எந்தச் சூழ்நிலைகளில் செக்ஸ் கூடாது என்பது பற்றியும் சொல்ல வேண்டியது அவசியம்” என்ற பாலியல் மருத்துவர் காமராஜ், அவை பற்றி விளக்க ஆரம்பித்தார். பாலியல் மருத்துவர் காமராஜ் இதுவே பாதுகாப்பு! ஒரு பார்ட்னருடன் மட்டும் … Read more

“காங்கிரஸூடன் இடதுசாரிகள் இணைந்து பணியாற்றவேண்டும் என்ற கருத்து வரவேற்கத்தக்கது!" – கே.எஸ்.அழகிரி

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பஸ் நிலையம் அருகே புதியதாக கட்டப்பட்ட பாரதி கிளினிக் மற்றும் கொள்ளிடம் மெடிக்கல்ஸ் ஆகிய இரு கட்டடங்களின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு புதிதாக கட்டப்பட்டுள்ள பாரத் கிளினிக் மற்றும் கொள்ளிடம் மெடிக்கல்ஸ் ஆகிய  இரண்டையும் திறந்து துவக்கி வைத்துப் பேசினார். கே.எஸ்.அழகிரி அப்போது, “ஜனநாயகத்தின் வெற்றியோ தோல்வியோ ஒரு நாட்டினுடைய அல்லது ஒரு இயக்கத்தினுடைய போக்கை மாற்றி விட முடியாது. 100 ஆண்டுகள் … Read more

“உக்ரைனை இந்தியா ஆதரிக்கலைனு அடிச்சு துன்புறுத்துனாங்க!" – தமிழகம் திரும்பிய மாணவர் வேதனை

உக்ரைனுக்கு இந்தியா ஆதரவு தரவில்லை என்று ஆத்திரத்தால் ரயிலில் ஏற்றும் போது இந்திய மாணவர்களை உக்ரைன் போலீஸார் துப்பாக்கியால் சுட்டு மிரட்டியும், லத்தியால் அடித்து துன்புறுத்தியதாகவும் தமிழகம் திரும்பிய வேதனையுடன் தெரிவித்தார். இந்திய மாணவர் ரஷ்யா உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், மேற்படிப்பிற்காக உக்ரைன் நாட்டிற்குச் சென்ற இந்திய மாணவர்கள் மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் ஊர் திரும்பி வருகின்றனர். அந்த வகையில், மருத்துவப் படிப்பிற்காக உக்ரைன் நாட்டிற்குச் சென்ற காரைக்கால் கிளிஞ்சல்மேட்டைச்  சேர்ந்த மாணவர் … Read more

The Adam Project: ரியான் ரெனால்ட்ஸ், மார்க் ரஃபலோ கூட்டணியில் ஒரு ஃபீல் குட் டைம் டிராவல் சினிமா!

டைம் டிராவல் செய்து காணாமல்போன தன் மனைவியைத் தேடி தன்னுடைய இறந்த காலத்துக்குச் செல்லும் நாயகன், தன் 12 வயது வெர்ஷனுடன் இணைந்து செய்யும் சாகசங்கள்தான் இந்த ‘தி ஆடம் பிராஜக்ட்’. டைம் டிராவல் என்பது சாதாரணமாகிவிட்ட 2050 காலகட்டத்திலிருந்து இறந்த காலத்துக்குப் பயணம் செய்கிறார் ஆடம் ரீட். அவருக்கு முன்னரே 2018-க்குப் பயணப்பட்டு இன்னமும் திரும்பிடாத அவரின் மனைவியைத் தேடி, விதிகளை மீறியே இந்தக் காலப்பயணத்தை அவர் செய்கிறார். ஆனால், தவறுதலாக, 2018-க்கு பதில் 2022-ல் … Read more

“பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்!" – பிரதமர் மோடி

உக்ரைனில் நடந்து வரும் போர் பின்னணியில் நிலவும் உலகளாவிய சூழ்நிலை மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு தயார்நிலை குறித்து விவாதிப்பதற்கான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் மூன்று தலைவர்கள் உட்பட முக்கிய அரசு அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்குபெற்றனர். மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இதில் பேசிய … Read more

`சரத்பவாருக்கு தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பிருக்கிறது' – மத்திய அமைச்சர் மகன்கள் மீது வழக்கு பதிவு!

மகாராஷ்டிராவில் மாநில அமைச்சர் நவாப் மாலிக் மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராஹிம் சகோதரியுடன் சொத்து பரிவர்த்தனை தொடர்பு வைத்துக்கொண்டதாகக் கூறி அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சியான பா.ஜ.க, நவாப் மாலிக் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தி வருகின்றது. இந்த நிலையில், சரத்பவாருக்கு தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்த மத்திய அமைச்சர் நாராயண் ரானே மகன்கள் நிலேஷ், நிதேஷ் ரானே ஆகியோர் மீது … Read more

கொடைக்கானல் காட்டுத்தீ பரவல்: கோடை வெப்பமா? மனிதர்களின் அத்துமீறலா? வனத்துறை விசாரணை

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப்பகுதிகள் கோடை வெப்பத்தின் காரணமாக வனத்தில் கடந்த ஒரு வாரமாக காட்டுத்தீ பரவி வருகிறது. கொடைக்கானல் பெருமாள்மலை, மச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுத்தீ பரவல் அதிகமாக உள்ளது. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத்தீயால் தோகைவரை, மச்சூர், பெருமாள்ம‌லை உள்ளிட்ட பகுதிகளும், பழநி அடிவாரப் பகுதியான கலையமுத்தூர், வ‌த்த‌ல‌க்குண்டு பிர‌தான‌ ம‌லைச்சாலையும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. தீயணைக்கும் பணி உலகம் முழுக்கப் பற்றியெறியும் … Read more