சரமாரி கத்திக்குத்து… பெட்ரோல் ஊற்றி எரிப்பு – பள்ளி மாணவி தந்தையை திட்டம் தீட்டிக் கொன்ற இளைஞர்!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நத்தப்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (45). இவர் வேடசந்தூரில் ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர் மகள் பள்ளபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஒட்டன்சத்திரம் தாலுகா சின்னகுளிப்பட்டியைச் சேர்ந்த விமல்ராஜ் என்பவருக்கும் ஒராண்டாக பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது சிறுமியின் தந்தைக்கு தெரிய வந்ததை … Read more

இருநாட்டு பக்தர்கள் கூட்டு திருப்பலி; அமைச்சரிடம் பேச்சுவார்த்தை – கச்சத்தீவு திருவிழா ஹைலைட்ஸ்!

கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா வருடந்தோறும் மார்ச் மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழா இலங்கை, தமிழக பக்தர்கள் கலந்துகொண்டு இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் நிகழ்வாகக் கருதப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிலுவைப் பாதையும், அதைத்தொடர்ந்து சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. சிலுவைப்பாதை நடைபெற்ற காட்சி பின்னர், நேற்று மீண்டும் சிலுவைப் பாதை நடத்தி, இருநாட்டு மீனவர்களுக்கு இடையிலான … Read more

`பிறந்த தருணத்தைவிட அதிகமாக மகிழ்ந்தோம்!' – திருநங்கை மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்திய பெற்றோர்

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்த கொளஞ்சி – அமுதா தம்பதியின் மகன் நிஷாந்த். இவர் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது தன்னை பெண்ணாக உணர ஆரம்பித்திருக் கிறார். மனதளவில் பெண்ணாக வாழ்ந்த நிஷாந்த் பேச்சு, நடை, உடை, பாவனை என அனைத்திலும் தன்னைப் பெண்ணாக அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பினார். ஆனால், அதற்கு அவரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் நிஷாந்த். ஒரு கட்டத்தில் தான் பெண் அல்லள், திருநங்கை என்பதை உணர்ந்துகொண்ட அவர், கடலூரில் … Read more

கூடை கூடையாகப் பதுக்கப்பட்டிருந்த பச்சைக் கிளி, முனியாஸ் குருவி குஞ்சுகள்; மீட்ட திருச்சி வனத்துறை!

திருச்சி, கீழப்புதூர் குருவிக்காரன் தெருவிலுள்ள சில வீடுகளில், பச்சைக் கிளிகள் விற்பனைக்காக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதையடுத்து வனப் பாதுகாப்புப் படையின் உதவி வனப் பாதுகாவலர் நாகையா தலைமையிலான குழுவினர் நேற்று சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று சோதனையிட்டுள்ளனர். அப்போது 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் 500-க்கும் மேற்பட்ட பச்சைக் கிளிகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட முனியாஸ் எனச் சொல்லப்படும் குருவிகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்திருக்கின்றன. அவற்றை வன பாதுகாப்புப் படையினர் மீட்டு, திருச்சி கோர்ட் வளாகத்திலுள்ள … Read more

`2 இடங்களில் ஓட்டு போட்ட திமுக பெண் கவுன்சிலர்?' – நீதிமன்றம் வரை சென்ற சுயேச்சை – திருச்சி சர்ச்சை

பிப்ரவரி 19-ம் தேதி தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. திருச்சி மாநகராட்சி 56-வது வார்டுக்கு உட்பட்ட முத்துலட்சுமி என்பவர், கருமண்டபம் பகுதியிலுள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள 647-வது வாக்குச் சாவடிக்கு தனது வாக்கினை செலுத்த வந்தார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள், “உங்க ஓட்டு ஏற்கனவே போட்டாச்சே!” எனச் சொல்ல, “நான் இப்ப தானேங்க வரேன். என்னோட ஓட்டை யார் போட்டது!” என முத்துலட்சுமி கேட்க பெரும் பரபரப்பு உண்டானது. உடனே, அந்த … Read more

IND vs SL: ஒரே நாளில் 16 விக்கெட்டுகள்… இன்றே முடிந்துவிடுமா பிங்க் பால் டெஸ்ட்?

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி ஆல்-அவுட், அடுத்த களமிறங்கிய இலங்கை பேட்டர்களில் பாதி பேர் பெவிலியனில். இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான பிங்க்-பால் டெஸ்ட் போட்டி முதல் நாளின் முடிவிலேயே மூன்றாவது நாள் போல மாறியிருக்கிறது. Shreyas Iyer முதல் ஓவரின் ஐந்தாவது பந்தை அகர்வாலுக்கு ஃபுல்லராக அவுட்சைட் ஆஃபில் வீசினார் லக்மல். பந்து பிட்சான இடத்தில் புழுதி நன்றாக எழும்பியது. அந்த ஒற்றை பந்தே ஆட்டத்தின் மொத்த போக்கையும் தெளிவாகக் கூறிவிட்டது. … Read more

"`ஐ லவ் யூ' என்ற வாக்கியத்தின் பின்னால் ஐம்பது அறுபது பக்க உணர்வுகள் இருக்கின்றன!"- விஜய் சேதுபதி

ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்காக பேச்சாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட பேராசிரியை, பல்துறை ஆளுமைகளைச் சந்தித்து உரையாடி வருகிறார். ‘கதைப்போமா with பர்வீன் சுல்தானா’ என்ற பெயரிலான அந்த நிகழ்வில் தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான விஜய் சேதுபதியை சந்தித்து அண்மையில் உரையாடினார். நீண்ட அந்த உரையாடலில் இருந்து சில துளிகள். “விஜய் நினைத்திருந்தால் மாஸ்டர் படத்தில் என் காட்சிகள் வெட்டப்பட்டிருக்கும்!”- `பவானி’ விஜய் சேதுபதி “உங்களுடனான கலந்துரையாடல் மிக ஆழமாகவும், தத்துவார்த்த … Read more

கண்கலங்கிய ஜெயக்குமார் முதல் உதயநிதியிடம் உரிமை கொண்டாடிய காந்தி மகன் வரை..! – கழுகார் அப்டேட்ஸ்

முன்னாள் ஐ.ஏ.எஸ் மீது புகார்…“நாயைக் காட்டி குழந்தையை பயமுறுத்தினார்!” முன்னாள் ஐ.பி.எஸ் பெண் அதிகாரி ஒருவரின் பேத்தியை, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் மிரட்டியதாக அண்ணாநகர் துணை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் மகன் கொடுத்துள்ள அந்தப் புகாரில், ‘என் 12 வயது மகள் லிஃப்டில் செல்லும்போது, அதே லிஃப்டில் நாயுடன் வந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி, நாயைக் காட்டி என் குழந்தையை பயமுறுத்தினார். அதோடு குடியிருப்போர் நலச் சங்கத்தின் வாட்ஸ் அப் குரூப்பிலும், … Read more

மதுரை: 65 வயதில் நடந்த ரீ-யூனியன்; 50 வருடங்களுக்குப்பின் நண்பர்களை ஒன்றிணைத்த நடிகர் கஜராஜ்!

பிரபல திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ் மதுரையில் தொழில் செய்து கொண்டிருந்தாலும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். பள்ளி வளாக தேவாலயம் முன் நண்பர்கள் இப்படி பிஸியான நிலையிலும், 50 வருடங்களுக்கு முன்பு மதுரை தூய மரியன்னை பள்ளியில் தன்னுடன் 10-ம் வகுப்பு படித்தவர்களை தேடிப்பிடித்து, நண்பர்களுடன் சேர்ந்து ஒருங்கிணைத்து விழா நடத்தி அசத்தியுள்ளார். புதிய வகை திரைமொழி, காட்சிபடுத்தல், சமூகத்தை பிரதிபலிக்கும் அழுத்தமான கதைகள் மூலம் படங்களை இயக்கி அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறார் கார்த்திக் … Read more

கருத்து வேறுபாடு; இளம்பெண்ணைக் கொன்று புதைத்த ராணுவ வீரர்; நிர்க்கதியான கைக்குழந்தை – என்ன நடந்தது?

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி கீழ ரத வீதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். ராணுவத்தில் பணியாற்றி வரும் இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த பிரேமா என்பவரும் கடந்த 2016 முதல் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவரின் குடும்பத்திலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராணுவ வீரர் மாரியப்பன் இந்த நிலையில், கடந்த 2018-ல் இரு குடும்பத்தினரும் கூடிப் பேசி இருவரும் இனிமேல் சந்திக்கக் கூடாது என ஒப்பந்தம் செய்துள்ளனர். அதற்கு இருவருமே சம்மதித்துப் பிரிந்திருக்கிறார்கள். அதன் பின்னர் … Read more