பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட அமெரிக்க முதியவர் மரணம்; மருத்துவ நிர்வாகத்தின் பதில் என்ன?

அமெரிக்காவின் மேரிலேண்டைச் சேர்ந்த இதய நோயாளியான முதியவர் டேவிட் பென்னட்டுக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது மருத்துவ அறிவியலின் சாதனையாகக் கருதப்பட்டது. இந்நிலையில், அறுவை சிகிச்சை முடிந்து இரு மாதங்களுக்குப் பின் அவர் நேற்று உயிரிழந்துள்ளது ஆராய்ச்சியாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் பால்டிமோர் மாகாணத்தின் மேரிலேண்ட் பகுதியைச் சேர்ந்த 57 வயது முதியவர் டேவிட் பென்னட். இதய நோயாளியான பென்னட், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உயிருக்குப் போராடிய நிலையில், மேரிலேண்ட் மருத்துவமனையில் உயிர் … Read more

உ.பி தேர்தல்: “இந்துவோ, முஸ்லிமோ…. எங்களின் திட்டங்கள் அனைவருக்குமானது!" – பாஜக அமைச்சர்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகளில் 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் பெரும்பான்மைக்கு 202 இடங்கள் தேவை என்ற நிலையில், ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களைத் தாண்டி அங்கு பா.ஜ.க முன்னிலை வகித்து வருகிறது. அமித் ஷா, யோகி, மோடி இந்த நிலையில், உத்தரப்பிரதேச அமைச்சர் சதீஷ் மஹானா தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாகப் பேசிய … Read more

உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைக்க காரணம் யோகி ஆட்சியா… மோடி அலையா?

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்றுவருகிறது. இதில், பா.ஜ.க பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் 2017-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மொத்த தொகுதிகளான 403-ல், 312 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிபெற்றது. அப்போது முதல்வர் வேட்பாளராக யாரையும் பா.ஜ.க முன்னிறுத்தவில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு காரணமாகவே அந்த வெற்றியை பா.ஜ.க பெற்றது. யோகி அந்த வெற்றிக்குப் பிறகுதான், கொரக்பூர் தொகுதி நாடாமன்ற உறுப்பினராக இருந்த யோகி ஆதித்யநாத்தை முதல்வர் நாற்காலியில் பா.ஜ.க … Read more

தாயை இழந்த குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டும் மருத்துவர் மனைவி; வேலூர் நெகிழ்ச்சி!

வேலூர் அருகேயுள்ள கீழ் அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மனைவி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரசவத்துக்காக சத்துவாச்சாரியிலிருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஆரோக்கியமான ஆண் குழந்தைப் பிறந்தது. ஆனால், பிரசவித்த சில மணி நேரங்களிலேயே தாய் பரிதாபமாக இறந்துவிட்டார். இதனால், தாய்ப்பாலும், தாய்ப்பாசமும் அந்தப் பச்சிளம் குழந்தைக்குக் கிடைக்கவில்லை. தாய் முகத்தை பார்க்காமல், தந்தையின் அரவணைப்பிலேயே குழந்தை வளர்கிறது. அந்த விவசாயி, தனது கால்நடைகளை வேலூரிலிருக்கும் அரசு பன்முக கால்நடை மருத்துவமனைக்கு … Read more

காமெடி நடிகர்; `மது’ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி! -இனி பஞ்சாப் முதல்வர்… யாரிந்த பக்வந்த் மான்?

வாக்கெடுப்பு மூலம் தேர்வு: பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது நாட்டிலேயே முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி முதல்வர் வேட்பாளரை சற்று வித்தியாசமான முறையில் தேர்வு செய்தது. பொதுமக்களிடம் மொபைல் நம்பரை கொடுத்து அதன் மூலம் வாக்கெடுப்பு நடத்தி பக்வந்த் மான் என்பவரை பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். பஞ்சாப்: மக்களிடம் கருத்து… ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பக்வந்த் மான்! – அறிவித்தார் கெஜ்ரிவால் “வாக்கெடுப்பு நடத்தாமலேயே … Read more

எதற்கும் துணிந்தவன் விமர்சனம்: சூர்யாவுக்கும், பாண்டிராஜுக்கும் ஹாட்ரிக்… ஆனா பிரச்னை என்னன்னா?!

எல்லோரும் நிம்மதியாக வடநாட்டிலும் தென்னாட்டிலும் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு பெண்ணின் மரணம் இரு ஊர்களுக்கும் இருக்கும் சுமூக உறவை அசைத்துப் பார்த்துவிடுகிறது. தொடர் தற்கொலைகள், விபத்துகள், காணாமல் போனவர்கள் எனப் பாதிக்கப்பட்ட பெண்களின் லிஸ்ட் நீண்டுக்கொண்டே போக, ஊரின் நல்லது கெட்டதில் கலந்துகொள்ளும் வக்கில் கண்ணபிரான் இதற்கான காரணத்தை கண்டறிகிறார். இவற்றைச் செய்யும் கும்பலைத் தடுத்தி நிறுத்த அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதுதான் இந்த ‘எதற்கும் துணிந்தவன்’. எதற்கும் துணிந்தவன் கண்ணபிரானாக சூர்யா. கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்குப் பிறகு … Read more

“ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த தயார்..!" – இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த நாங்கள் தயார்” என கூறியுள்ளார். இந்தியத் தேர்தல் ஆணையம் இது தொடர்பாகப் பேசிய சுஷில் சந்திரா, “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நல்ல பரிந்துரைதான். … Read more

விழுப்புரம்: திமுக எம்.பி என்.ஆர்.இளங்கோ மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு; உடன் சென்றவர் படுகாயம்!

மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் தி.மு.க-வைச் சேர்ந்த என்.ஆர்.இளங்கோ. இவர் மகன் ராகேஷ், பணி நிமித்தமாக நண்பர் வேத விகாஸ் என்பவருடன் கார் மூலம் சென்னையில் இருந்து புதுச்சேரிக்குச் சென்றுள்ளார். விழுப்புரம் மாவட்டம், கோட்டகுப்பம் அடுத்த கீழ்புத்துபட்டு அருகே சென்று கொண்டிருந்த போது, அதிகாலை சுமார் 3:30 மணியளவில் எதிர்பாராத விதமாக சாலை மத்தியில் இருக்கும் தடுப்புச் சுவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர் இளங்கோ மகன் ராகேஷ் … Read more

சிரஞ்சீவி, பாலையா, பிரபாஸ் படங்களின் நாயகி… டோலிவுட்டில் ஸ்ருதி ஹாசன் இப்போ ரொம்ப பிஸி!

நடிகை ஸ்ருதி ஹாசன் எப்போதும் தெலுங்கு சினிமாவுக்கு லக்கி சார்ம் என்றே சொல்லலாம். இவர் தெலுங்கில் நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட். உதாரணத்திற்கு, பவன் கல்யாணுடன் நடித்த ‘கப்பர் சிங்’, ரவிதேஜாவுடன் ‘பலுபு’, ராம் சரணுடன் ‘எவடு’, மகேஷ்பாபுவுடன் ‘ஶ்ரீமந்துடு’, அல்லு அர்ஜுனுடன் ‘ரேஸுகுர்ரம்’ ஆகியவை. சமீபத்தில், கோபிசந்த் இயக்கத்தில் ரவி தேஜாவுடன் இவர் நடித்த ‘க்ராக்’ படமும் நல்ல ஹிட். ஏற்கெனவே, பவன் – ஸ்ருதி ஜோடி ஹிட்டடித்ததால், ‘வக்கீல் சாப்’ படத்தில் … Read more

Uttar Pradesh State Election Result: லக்கிம்பூர் தொகுதியில் பாஜக முன்னிலை! | Live Updates

உ.பி-யில் பாஜக முன்னிலை! உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே பா.ஜ.க முன்னிலை வகித்து வருகிறது. உபி லக்கிம்பூர் தொகுதியில் பாஜக முன்னிலை! லக்கிம்பூர் கேரி சம்பவம் விவசாயிகள் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட லக்கிம்பூர் தொகுதியில் பா.ஜ.க முன்னிலை வகித்து வருகிறது. Uttar Pradesh Election Result 2022: தொடங்கியது விறுவிறு வாக்கு எண்ணிக்கை! உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கான வாக்கு எண்ணிக்கையானது தற்போது தொடங்கியிருக்கிறது. இன்னும் … Read more