94 குடும்பம்; 94 வீடுகள்! – முடிவுக்கு வந்த, 'சர்க்கஸ்' கலைஞர்களின் 50 வருட வாழ்வாதாரப் பிரச்னை

கரூர் மாவட்டத்தில் உள்ள வேட்டமங்கலம் ஊராட்சியில் இருக்கும் குந்தாணிப்பாளையத்தில் கூடாரம் அமைத்து குடியிருந்து கொண்டு, வெளியூர்களுக்கு சென்று சர்க்கஸ் நடத்துவது, கயிறு மேல் நடப்பது, சர்க்கஸூக்கு வாய்ப்பில்லாதபோது, கிடைத்த கூலி வேலைகளை செய்வது என்று 94 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குந்தாணிப்பாளையத்தில் உள்ள கூடாரங்கள் ‘சொந்தமாக இடமில்லை. வீட்டுக்கு வழியில்லை’ என்று கடந்த 50 வருடங்களாக அல்லாடி வந்த அந்த மக்களின் துயர், துடைக்கப்பட்டிருக்கிறது. அந்த 94 குடும்பங்களுக்கும் இலவச வீட்டுமனை வழங்கப்பட்டிருப்பதோடு, அவர்களுக்கு அரசு சார்பில் … Read more

மைக்ரோவேவ் ஓவனில் சமைக்கிறீங்களா? இந்த எச்சரிக்கை உங்களுக்குத்தான்!

நவீன வீட்டு உபயோக சாதனங்களைப் பயன்படுத்துகையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டுமென்பதற்கு கீழேயுள்ள சம்பவமே ஓர் உதாரணம். அந்த நபருக்கு வயது 26. காபி குடிக்க விரும்பிய அவர் ஒரு கப்பில் நீர் ஊற்றி அதை மைக்ரோவேவ் ஓவனுக்குள் (microwave oven) வைத்துச் சூடு செய்திருக்கிறார். இது காபி தயாரிக்க அவர் வழக்கமாகச் செய்கிற முறைதான். அன்றைக்கும் அதேபோல ஓவனுக்குள் நீரை வைத்தவர், சிறிது நேரம் கழித்து ஓவனை ஆஃப் செய்துவிட்டு கப்பை வெளியே எடுத்திருக்கிறார். நீர் … Read more

கோலிவுட் ஸ்பைடர்: அஜித் vs ரஜினி தீபாவளி; விஷாலின் `சுயம்வரம் 2' ஐடியா; தனுஷ் – ரஜினி சந்திப்பு?

* நெல்சன் திலீப்குமார் – ரஜினி கூட்டணியில் உருவாகும் ‘ரஜினி 169’ படத்தின் ஷூட்டிங்கை மே மாதம் துவங்கி, ஒரே மூச்சில் முடிக்கிறார்கள். படத்தை தீபாவளிக்குக் கொண்டு வருகிறார்கள். இதனிடையே ‘அஜித் 61’ அடுத்த படத்தின் படப்பிடிப்பும் மார்ச் 9-ல் துவங்கி, ஒரே ஷெட்யூலாக முடிக்க திட்டமிட்டுள்ளனர். அதையும் தீபாவளிக்கு கொண்டு வர முடிவுசெய்துள்ளனர். ஆக, இப்போதைய நிலவரப்படி வரும் தீபாவளிக்கு செம விருந்து காத்திருக்கிறது. நெல்சன் vs வினோத்! நெல்சன் – ரஜினி * ஹீரோ … Read more

“இனி கோவை எப்போதும் முதல்வர் ஸ்டாலின் கோட்டை!" – செந்தில் பாலாஜி சுளீர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தில் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி உரையாடினார். அப்போது, “வாக்களித்த மக்களை வீடுவீடாக சென்று பார்த்து நன்றி கூற வேண்டும். செந்தில் பாலாஜி கவுன்சிலர்கள் கூட்டம் சஸ்பென்ஸ் வைக்கும் செந்தில் பாலாஜி – கோவை மேயர் தேர்வில் புதிய ட்விஸ்ட்! அந்த நேரத்தில் அவர்கள் இல்லாவிட்டால் கூட, அவர்கள் வீட்டில் இருக்கும்போது சென்று சந்திக்க வேண்டும். நன்றிகளை வார்த்தைகளாக … Read more

தமிழகத்தில் தாமரை மலரத் தொடங்கிவிட்டதா?! – சதவிகித கணக்குகள் சொல்வதென்ன?!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர்தலில் 1,374 மாநகராட்சி கவுன்சிலர்கள், 3,843 நகராட்சி கவுன்சிலர்கள், 7,621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 12,838 இடங்களுக்கு, 57,778 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலுக்காக, தமிழகம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தல் பணியில் 1.33 லட்சம் அலுவலர்களும், பாதுகாப்புப் பணியில் … Read more

உக்ரைனை கைவிட்ட நேட்டோ நாடுகள்… இந்தப் போரில் ரஷ்ய அதிபர் புதினின் உள்நோக்க அரசியல் என்ன?!

நீண்ட நாள்களாக உக்ரைன் எல்லையில் காத்திருந்த ரஷ்யப் படைகள், நேற்றுமுந்தினம் முதல் ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவுப்படி உக்ரைனுக்குள் நுழைந்துவிட்டன. வான்வழித் தாக்குதல்களையும், தரைவழித் தாக்குதல்களையும் நிகழ்த்தி உக்ரைனின் முக்கியப் பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக அறிவித்திருக்கிறது ரஷ்யா. `போரை நிறுத்திக்கொள்ளுமாறு’ ஐ.நாவும், உலக நாடுகளும் முன்வைத்த கோரிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு, இரண்டாவது நாளாக உக்ரைனில் தாக்குதல்களை நிகழ்த்தியது ரஷ்யா. ஜெலன்ஸ்கி, உக்ரைன் அதிபர்ரஷ்யா படையெடுத்து வந்த முதல் நாளில் உக்ரைன் நாட்டின் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என … Read more

இன்றைய ராசி பலன் | 26/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs Source link

திருச்சி – ஊறும் வரலாறு 33: சதங்கையின் ஜதிகளும் `சரிகமபதநி’யும் – கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி!

கலைக்காவிரியின் கதவுகள் திறக்கப்பட்டு அழைத்துச் செல்ல வந்திருக்கும் ஆட்டோக்களை நோக்கியும் பெற்றோர்களை நோக்கியும் குழந்தைகள் ஓடி வருகிறார்கள். அந்தக் கதவுதான் எல்லோருக்குமாகத் திறக்கப்பட்ட கலையின் கதவு என்பதை ஒருநாள் அவர்கள் தெரிந்துகொள்வார்கள். சற்று வயது கூடிய இளையவர்களும் சங்கீதம் வழிய ஹாய் சொல்கிறார்கள். அங்கேயே பரதத்திலும் கர்னாடக இசையிலும் பட்டம் மற்றும் பட்டயம் படிக்கும் இளைஞர்களையும் பார்க்க முடிகிறது. பரத உடையோடு கல்லூரி வளாகத்துக்குள் வளையவரும் பெண்களையும் பலவிதமான இசைக்கருவிகளின் சங்கீத ஒலிகளையும் கேட்கும்போது நம்மையும் அறியாமலேயே … Read more

“ரஷ்ய அதிபருடன் மீண்டும் ஒருமுறை பேச விரும்புகிறேன்!" – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விருப்பம்

ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவின் பேரில் ரஷ்ய ராணுவம் நேற்றுமுதல் உக்ரைனில் போர் செய்து வருகிறது. இதனால் உக்ரைனில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்ட வண்ணமாக இருக்கின்றன. உலக நாடுகள் பலவும் ரஷ்யாவுக்கு எதிராக விடுத்தது வந்தாலும், வெளிப்படையாக எந்த நாடும் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்காததால், உக்ரைன் தனது படைகளுடன் ரஷ்யாவை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறது. ரஷ்ய அதிபர் புதின் இந்த நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, “ரஷ்ய அதிபர் புதினுடன் மீண்டும் ஒருமுறை பேச விரும்புகிறேன். … Read more

போரால் அதிகரிக்கும் செர்னோபில் கதிரியக்க அளவு; என்ன சொல்கிறது உக்ரைன் அரசு?

செர்னோபில் அணுமின் நிலையத்தில் 1986-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி அணு உலை விபத்து நிகழ்ந்தது. இந்தக் கதிரியக்க தளம் உக்ரைனின் தலைநகரான கியேவிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. உக்ரைன் போர் உக்ரைன் போர்: காண்போரை கண்கலங்க வைக்கும் தந்தை – மகள் பாசப்போராட்டம் – இணையத்தில் வைரலாகும் வீடியோ! இந்நிலையில், செர்னோபில் அணுமின் நிலையப் பகுதியில் கதிர்வீச்சின் அளவு அதிகரித்துள்ளதாக உக்ரைனின் அணுசக்தி நிறுவனம் மற்றும் உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. ஆனால், அங்கிருந்து … Read more