மயிலாடுதுறை: ரேஷன் கடைகளில் சர்வர் பிரச்னை – பொருள்கள் பெறமுடியாமல் பொதுமக்கள் அவதி!

மயிலாடுதுறை  முழுவதும் பிப்ரவரி 22 செவ்வாய்க்கிழமை முதல் ரேஷன் கடைகளில் சர்வர் பிரச்னை காரணத்தினால் பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்கள் கொடுக்க முடியாமல் ரேஷன் கடை விற்பனையாளர்கள் திணறி வருகிறார்கள். மாதக்கடைசி என்பதாலும், இந்த மாதம் 28 தேதிகள் மட்டுமே என்பதாலும், பொதுமக்கள் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை வாங்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர். ரேஷன் கடை ஊழியர்களும், பொருள்கள் இருந்தும் அவற்றை பதிவு செய்து விநியோகிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். ரேஷன் கடை இதுகுறித்து மயிலாடுதுறை … Read more

டூ இன் ஒன் ஃபார்முலா… ஸ்டாலினிடம் சென்ற பஞ்சாயத்து! – வேலூர் மாநகர மேயர் ரேஸில் முந்துவது யார்?

வேலூர் மாநகராட்சியைத் தி.மு.க கைப்பற்றியுள்ளது. இந்த மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் இருக்கின்றன. இதில், 45 வார்டுகளைத் தி.மு.க கூட்டணி கைப்பற்றியுள்ளது. 7 வார்டுகளில் அ.தி.மு.க-வும், 6 வார்டுகளில் சுயேட்சைகளும், பா.ஜ.க மற்றும் பா.ம.க தலா ஒரு வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் மேயர், துணை மேயர், நான்கு மண்டலக் குழுக்களின் தலைவர்கள் பதவிகளைக் குறிவைத்து, ஆளுங்கட்சிப் புள்ளிகள் பலரும் காய்நகர்த்துகிறார்கள். இதற்காக நடத்தப்படும் பேரம் தலையைக் கிறுகிறுக்க வைக்கிறதாம். பெண்கள் பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் … Read more

`அவரது பணமல்ல அறிவுதான்…'- எலான் மஸ்க்கின் காதலி; யார் இந்த நடாஷா பெஸட்?

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலானின் சொத்து மதிப்பு 233 பில்லியன் டாலர்களுக்கு மேல் இருக்கும். அடிக்கடி தலைப்பு செய்திகளில் அடிபடும் இவரின் பெயர் இப்போது உச்சரிக்கப்படுவதற்கு காரணம் இவரின் புதிய கேர்ள் ப்ரண்ட், ஆஸ்திரேலிய நடிகை நடாஷா பெஸட். எலான் செப்டம்பர் 2021-ல் பாடகி கீரிம்ஸ் உடனான உறவில் இருந்து விலகினார். இருவருக்கும் X AE A-Xii என்கிற ஒரு வயது மகன் உள்ளார். 50 வயதான எலான் இதுவரை பல முறை திருமணம் செய்தும் பிறகு … Read more

Doctor Vikatan: சமைக்காத அவல் சாப்பிட்டால் எடை குறையுமா?

அவல் சாப்பிடுவது வெயிட்லாஸுக்கு உதவுமா? இன்று ராகி அவல், கம்பு அவல் என விதம்விதமான அவல் கிடைக்கிறது. அதைச் சமைக்காமல் சாப்பிடுவது பலன் தருமா? – ஷீதல் (விகடன் இணையத்திலிருந்து) ஸ்ரீமதி வெங்கட்ராமன் பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த, கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன். “அவல் சாப்பிடுவது எடைக்குறைப்புக்கு நிச்சயம் உதவாது. ஏனென்றால் 100 கிராம் சாதாரண அவலில் 77 சதவிகிதம் முதல் 85 சதவிகிதம் வரை கார்போஹைட்ரேட் மட்டும்தான் உள்ளது. சிவப்பு … Read more

நட்சத்திரப் பலன்கள் – பிப்ரவரி 25 முதல் மார்ச் 3 வரை! #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

இன்றைய ராசி பலன் | 25/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs Source link

“தேர்தல் முக்கியமல்ல… மாணவர்களை மீட்க முன்னுரிமை கொடுங்கள்!" – பிரதமரை வலியுறுத்தும் சசி தரூர்

இன்றுகாலை உக்ரைன் மீது ரஷ்யா போர்த் தொடுக்கத் தொடங்கியது. விமான தளங்களை கைப்பற்றியது, உக்ரைன் வீரர்களை கொன்றது என தொடர்ந்து முன்னேறி தற்போது உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட இடங்களில் ரஷ்ய படைகள் தீவிர தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன. இந்த பதற்றமான சூழலால், அங்கு விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக, உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேற முடியாமல் இந்தியாவைச் சேர்ந்த 20,000 மாணவர்கள் அங்குச் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எம்.பி … Read more

“புதினின் நடவடிக்கைக்கு எதிராகப் போராடினால்…!" – ரஷ்ய மக்களை எச்சரிக்கும் அதிகாரிகள்

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த போர் விவகாரத்தில் மற்ற நாடுகள் தலையிட்டால் அவர்களும் அதன் விளைவைச் சந்திக்க நேரிடும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரித்துள்ளார். இந்த நிலையில், உக்ரைன் நாட்டில் நுழைந்த ரஷ்ய ராணுவ வீரர்கள் பல இடங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இந்த போர் காரணமாக விமானப் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. புதினுக்கு எதிராக போராடும் உக்ரைன் மக்கள் இந்த நிலையில், உலக நாடுகள் … Read more

"`முகவரி' படத்தோட கிளைமாக்ஸை தியேட்டர் ஆபரேட்டர்கள் மாத்திட்டாங்க!"- ரகசியம் உடைக்கும் வி.இசட்.துரை

அஜித்தின் திரைப்பயணத்தில் ‘முகவரி’ முக்கியமான படம். ஜோதிகா, ரகுவரன், கே.விஸ்வநாத், சித்தாரா, விவேக் என பர்ஃபாமென்ஸில் பிச்சு உதறுபவர்களுடன் அஜித்தும் அசத்தியிருப்பார். பாலகுமாரனின் வசனம், பி.சி.ஶ்ரீராமின் ஒளிப்பதிவு, தேவாவின் இசை என பல மேஜிக்குகள் இந்தப் படத்தில் உண்டு. 22 ஆண்டுகள் காணும் ‘முகவரி’க்காக அதன் இயக்குநர் வி.இசட்.துரையிடம் பேசினேன். “இந்தப் படத்தை இத்தனை வருஷத்துக்கு பிறகும் கொண்டாடுவாங்கன்னு நினைச்சதில்ல. அப்ப எனக்கு 22 வயசுதான். யார்கிட்டேயும் ஒர்க் பண்ணினதில்ல. சினிமா அனுபவமும் பக்குவமும் இல்லாத ஒரு … Read more

`நாட்டை காக்க தயாராக இருங்கள்… யார் வந்தாலும் ஆயுதம் வழங்கப்படும்!' – உக்ரைன் அதிபர் ட்வீட்

உக்ரைன் மீது ரஷ்யா இன்று காலை முதல் போர் தொடுத்து வரும் நிலையில், உக்ரைனில் பல நகரங்களில் குண்டு மழை பொழிந்து வருகிறது. `மக்கள் அனைவரும் பயப்படாமல் இருங்கள். நாட்டை காப்பதற்கான அனைத்து பணிகளையும் நாங்கள் செய்து வருகிறோம்’ என உக்ரைன் அரசாங்கம் தெரிவித்து வருகிறது. Russia treacherously attacked our state in the morning, as Nazi Germany did in #2WW years. As of today, our countries are on … Read more