Sundar.C Press Meet: "மாளவிகாவால எனக்கும் குஷ்புவுக்கும் வந்த சண்டை; `கலகலப்பு 3' அப்டேட்…"

இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி ‘முறை மாமன்’ படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் சினிமாவின் கவனம் ஈர்த்தவர் சுந்தர்.சி. ஜெயராம், குஷ்பு, கவுண்டமணி எனக் கலகலப்பானக் கூட்டணியுடன் வெளியாகி மெகா ஹிட்டானது அப்படம். எப்போது பார்த்தாலும் விழுந்து விழுந்து சிரிக்கலாம். அதே கலகலப்புடன் இன்று ‘கலகலப்பு’ படத்தின் மூன்றாம் பாகத்திற்கு ரெடியாகியிருக்கிறார். விகடன் பிரஸ் மீட்டில் அவரது திரைப்பயணத்தில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள், கவுண்டமணியுடனான செட் அனுபவம், விமர்சனங்கள் குறித்து மனம் திறந்து பகிர்ந்து கொண்டார். … Read more

“எங்களை காப்பி அடிக்கிறாங்க…'' – இந்திய நிறுவனத்துக்கு எதிராக எலான் மஸ்க் நீதிமன்ற வழக்கு..!

எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா (Tesla) நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து வருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனம் இந்தியாவிலும் தனது எலெக்ட்ரிக் கார் ஆலையை அமைப்பதற்கு முயற்சித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு எதிராக டெஸ்லா வழக்கு தொடர்ந்துள்ளது. டெஸ்லா பவர் (Tesla Power) என்ற இந்திய நிறுவனம் லெட் ஆசிட் பேட்டரிகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிறுவனத்தி சர்வதேச தலைமையகம் அமெரிக்காவில் டெலாவரில் உள்ளது. இந்த நிலையில், … Read more

Cinema Roundup: `அரசியல் வேண்டாம்' – லாரன்ஸின் அம்மா சொன்ன அறிவுரை; இந்த வார டாப் சினிமா தகவல்கள்!

ராகவா லாரன்ஸுக்கு அவரின் தாயார் கொடுத்த அறிவுரை, இயக்குநர் நெல்சன் தயாரிக்கும் திரைப்படம் என்பதிலிருந்து தொடங்கி இந்த வாரத்தின் சில டாப் சினிமா தகவல்களை இங்கே பார்க்கலாம். நடிகர் ராகவா லாரன்ஸுக்கு அவரின் அம்மா கொடுத்த அட்வைஸ்! நடிகர் ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளிகள் உட்படப் பலருக்கு தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில்கூட மல்லர் கம்பம் விளையாட்டில் ஈடுபடும் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிப்பதற்கும் அவர்களுக்கு மேலும் பல உதவிகள் கிடைத்திடவும் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். … Read more

T20 World Cup: "ரிங்கு முதலிலிருந்து தொடங்குங்கள்!" – ரிங்கு சிங் அணியில் இல்லாதது குறித்து கங்குலி!

2024 ஆம் ஆண்டிற்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 2 ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. ஜூன் 29 ஆம் தேதி வரை இத்தொடர் நடைபெற இருக்கிறது. சமீபத்தில் உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது. ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், … Read more

"12 வயது சிறுவன்தான் என் இன்ஸ்பிரேஷன்!" – கடலோர இடங்களைச் சுத்தம் செய்யும் ரெஜினா கஸான்ட்ரா

செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ மூலம் தமிழில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியவர் ரெஜினா கஸான்ட்ரா. சமீபத்திய அவரது ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’, ‘ஃபார்சி’, ‘ராக்கெட் பாய்ஸ்’ ஆகியவற்றில் ரெஜினாவின் நடிப்பு கவனம் ஈர்த்தது. அடுத்தும் அசத்தலான லைன் அப்களை கைவசம் வைத்துள்ளார். அஜித்துடன் ‘விடாமுயற்சி’, பிரபுதேவாவுடன் ‘ஃப்ளாஷ்பேக்’, அருண் விஜய்யுடன் ‘பார்டர்’ தவிர தெலுங்கிலும் பிஸியாக நடித்து வருகிறார். ரெஜினா இதில் ‘ஃப்ளாஷ் பேக்’ மற்றும் ‘பார்டர்’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டன. அஜித்துடன் நடித்து வரும் ‘விடா முயற்சி’க்காக … Read more

Prajwal Revanna: `வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டி…' – பஞ்சாயத்து பெண் உறுப்பினர் பகீர் புகார்

தற்போது நடந்துகொண்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 26-ம் தேதி நடந்து முடிந்தது. இதில், கர்நாடகாவில் பா.ஜ.க கூட்டணியில் ஹாசன் தொகுதியில் போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சிட்டிங் எம்.பி-யும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான 2,800 பாலியல் வீடியோக்கள் சரியாக வாக்குப் பதிவுக்கு முந்தைய நாள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. கர்நாடக அரசும் உடனடியாக சிறப்பு விசாரணை … Read more

குடும்பப் பெருமை பேசி சண்டை போடும் தம்பதிகளும், தாம்பத்யத்தில் கரைந்துபோகும் ப்ரியமும்!

ஹேமாவை தயாராக இருக்கச் சொல்லிவிட்டு வண்டியில் பெட்ரோலை நிரப்பிக் கொண்டு வந்தான் ப்ரகாஷ். ஐந்து வருடங்கள் கழித்து இப்போதுதான் சொந்த ஊருக்குத் தன் குடும்பத்துடன் கிளம்புகிறான். ஹேமாவுக்கும், ப்ரகாஷின் குடும்பத்துக்கும் இதுவரை ஒத்துப் போனதில்லை. வேலைபார்க்க வந்த இடத்தில் இருவருக்கும் காதல் ஏற்பட்டு ப்ரகாஷின் குடும்பத்தார் சம்மதிக்காமலே இருவரின் திருமணமும் நடந்து முடிந்திருந்தது. ஹேமா வீட்டில், பெரிய அளவில் எதிர்ப்புகள் எதுவுமின்றி காதலுக்குப் பச்சைக் கொடி காட்டிவிட்டனர். “உங்க வீட்டு ஆளுங்க வராட்டியும் பரவால்ல… அதான் எங்க … Read more

Matheesha Pathirana: "தோனி என் அப்பா மாதிரி…' – நெகிழும் பதிரனா

சென்னை அணியின் இளம் வீரரான மதிஷா பதிரனா, “அவர் என் அப்பா மாதிரி…” என தோனி குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார். ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிஎஸ்கே அணியின் செல்லப் பிள்ளையாகவே மாறியிருப்பவர் மதிஷா பதிரனா. தோனி உட்படப் பல முன்னணி வீரர்களும் ரசிகர்களும் பதிரனாவைப் பாராட்டி வருகின்றனர். பதிரனாவுக்கு மலிங்காவின் பௌலிங் ஸ்டைல் இருப்பதால் எல்லோரும் அவரை ‘குட்டி மலிங்கா’ என்று அழைக்கின்றனர். தனது அபார பந்துவீச்சு திறனை ஐபிஎல்-லில் அவர் வெளிப்படுத்தி … Read more

திருமணத்துக்குமுன் கர்ப்பம்; பிறந்த குழந்தையை 5வது மாடியில் இருந்து வீசிய தாய் – கேரளாவில் அதிர்ச்சி

கேரள மாநிலம் கொச்சியின் பனம்பிள்ளி நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், 23 வயது இளம் பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த இளம் பெண்ணுக்கு திருச்சூரில் உள்ள தனது சமூக வலைதள ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அவர்களுக்குள் ஏற்பட்ட இந்த நெருக்கத்தால், இந்த பெண் கர்ப்பம் தரித்திருக்கிறார். எனவே பெண் தனது  குடும்பத்திற்கு தெரியாமல் தன் கர்ப்பத்தை மறைத்து வந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இப்பெண் … Read more