இந்தியா இலங்கை இடையில் பயணிகள் படகு சேவை! உயர்நிலை பேச்சுவார்த்தை

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக கலந்தாலோனை நடத்தினார்கள். காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான சரக்கு கப்பல் போக்குவரத்து காங்கேசன் துறைக்கும் இராமேஸ்வரம் மற்றும் பண்டிச்சேரி இடையிலான பயணிகள் படகு சேவை தொடர்பாக இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் கலந்தாலோசனை நடத்தினார்கள்.  இலங்கையின் பருத்தித்துறை மற்றும் பால்சேனை உட்பட வடக்கு, கிழக்கு பகுதிகளில் மீன்பிடித் துறைமுகங்களை அமைத்து தருவதற்கு ஏற்கனவே … Read more

இம்ரான்கானிற்கு வலுக்கும் சிக்கல், கீழவையில் இம்ரானில் அரசு பெரும்பான்மையை இழந்தது..!!

பாகிஸ்தானில், ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் முக்கிய கூட்டணியான பாகிஸ்தான்  முட்டாடிடா குவாமி இயக்கம் (MQM-P) எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன்  உடன்பாடு ஒன்றை எட்டியுள்ளதால்  ​​பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றொரு பின்னடைவைச் சந்தித்தார். மார்ச் 31 ஆம் தேதி இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முன்னதாக  இம்ரான் அரசாங்கம் நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் பெரும்பான்மையை இழந்தது குறிப்பிடத்தக்கது. புதன்கிழமை அதிகாலை ட்வீட் செய்த PPP தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி, ஒன்றிணைந்த … Read more

அமெரிக்காவில் 7 இந்திய வம்சாவளி தொழில்நுட்ப வல்லுநர்கள் மீது புகார்

புதுடெல்லி: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஏழு பேர், ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேல் சட்டவிரோதமாக லாபம் ஈட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பணிபுரிந்த நிறுவனத்தின் கொள்கைக்கு மாறாக, தகவலை கசியவிட்டு மோசடி செய்ததாக 7 இந்திய வம்சாவளி தொழில்நுட்ப வல்லுநர்கள் மீது அமெரிக்க பெடரல் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.  ஹரி பிரசாத் சுரே, 34, லோகேஷ் லகுடு, 31 மற்றும் சோட்டு பிரபு தேஜ் புலகம், 29, நண்பர்கள் மற்றும் சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட கிளவுட் கம்ப்யூட்டிங் … Read more

இஸ்ரேல் பிரதமரின் இந்தியப் பயணம் ஒத்தி வைப்பு

இந்தியா-இஸ்ரேல் இடையேயான தூதரக ரீதியான உறவு ஏற்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், இஸ்ரேல் பிரதமர்  நஃப்தலி பென்னட்  ஏப்ரல் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை 3 நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகை தரவிருந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் பிரதமாராக பதவியேற்ற நஃப்தலி பென்னட்டை, கடந்த அக்டோபரில் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் சந்தித்த பிரதமர் மோடி இந்தியாவிற்கு அழைப்பு விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து அரசு … Read more

சேவல் சண்டையில் தொடங்கிய மோதல்- 20 பேர் சுட்டுக் கொலை!

மெக்ஸிகோ நாட்டில் வன்முறை, திருட்டு, போதை பொருள் கடத்தல் என பல்வேறு சட்டவிரோத செயல்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இரு குழுவினருக்குள் சண்டை என்பது அங்கு மிகச் சாதாரணமாக நடைபெறும் ஒன்று என கருதப்படுகிறது. பல்வேறு படங்களில் மெக்ஸிகோவின் உண்மை முகம் காட்டப்பட்டு வருகிறது. எனினும் அதன் வன்முறைகள் குறைந்தபடி இல்லை. கடந்த 2006ம் ஆண்டு முதல் இதுவரை, சட்டவிரோதமான கடத்தல் செயலில் ஈடுபடும் கும்பல்களிடையே ஏற்பட்ட மோதல்களால் 3.4 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.  மெக்ஸிகோ … Read more

பிரபல அமெரிக்க நிறுவனத்தின் சிஇஓ ஆகும் இந்தியர்..இந்தியர்களின் திறமைக்கு மற்றுமோர் மணிமகுடம்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல கூரியர் நிறுவனமான ஃபெடெக்ஸ் நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான ஃபிரடெரிக் ஸ்மித் பதவி விலகியதைத் தொடர்ந்து, கேரளாவை பூர்வீகமாக கொண்ட ராஜ் சுப்ரமணியம் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஜூன் 1-ம் தேதி முதல் பொறுப்பேற்க உள்ளார். ஃபெடெக்ஸ் குழுமத்தில் ஃபெடெக்ஸ் எக்ஸ்ப்ரஸ், ஃபெடெக்ஸ் க்ரவுண்ட், ஃபெடெக்ஸ் ஃப்ரெய்ட், ஃபெடெக்ஸ் லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.  இந்நிறுவனத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் … Read more

உக்ரைன் போரை நிறுத்துவதில் பிரதமர் மோடி முக்கிய பங்காற்றலாம்: ஐநா தலைமை செயலர்

கீவ்: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே ஒரு மாதமாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முக்கிய பங்கு வகிக்க முடியும் என்றும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான  மத்தியஸ்த முயற்சிகள் தொடர்பாக, இந்தியா உட்பட பல நாடுகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி … Read more

ஆயுத குவிப்புக்கு காரணம் ஏகாதிபத்தியங்களே! கிம் ஜாங் உன் குற்றச்சாட்டு

அச்சுறுத்தல்களை சமாளிக்க சக்திவாய்ந்த ஆயுதங்கள் தேவை என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளது சர்வதேச நாடுகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏகாதிபத்தியவாதிகளின் அனைத்து அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் கட்டுக்குள் வைத்திருக்க சக்திவாய்ந்த ஆயுதங்கள் உதவுவதாக வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் கூறியதாக அந்நாட்டின் அரச ஊடகமான KCNA இன்று (திங்கள்கிழமை, 2022, மார்ச் 28) தெரிவித்தது. பண்டமாற்று அல்லது எதற்கும் விற்க முடியாத “வலிமையான தடுப்பாற்றல் திறன்களை” நாடு தொடர்ந்து மேம்படுத்தும் என்றும் … Read more

இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா..இந்தியப் பயணம் ரத்தாகுமா?

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் இஸ்ரேல் தொடக்கத்தில் இருந்தே மிகத்தீவிரம் காட்டி வருகிறது. தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்தியதோடு, உலகிலேயே இஸ்ரேல் தான் முதல் நாடாக 4-வது டோஸ் தடுப்பூசி செலுத்தியது. இந்த நிலையில், ஒமைக்ரான் வைரசின் திரிபான பிஏ1 மற்றும் பிஏ2 ஆகியவை ஒன்றிணைந்து உருவான புதிய உருமாறிய கொரோனா அண்மையில் இஸ்ரேலில் கண்டறியப்பட்டது. தற்போது இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட்டிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி ப்ளிங்கனுடன்  நஃப்தலி … Read more

சீனாவின் மீண்டும் தலை தூக்கும் கொரோனா; ஷாங்காய் நகரில் தீவிர லாக்டவுன் அமல்..!!

கொரோனா நான்காவது அலை இந்தியாவைத் தாக்கக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில், 26 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட அதன் மிகப்பெரிய நகரமான ஷாங்காயில், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் காரணமாக லாக்டவுனை அமல்படுத்த சீனா முடிவு செய்துள்ளது. லாக்டவுன்  பகுதிகளில்  பொது போக்குவரத்தையும் நிறுத்துவதாக நகர அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை கூறியது. பொதுச் சேவைகளை வழங்குபவர்கள் அல்லது உணவு வழங்குபவர்கள் தவிர, நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணியை நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும்  என … Read more