நேட்டோவை நம்பி ஏமாந்த உக்ரைன்? ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகள் எடுத்த நவடிக்கை என்ன?

ரஷ்யா-உக்ரைன் மோதல்: இரண்டாவது நாளாக ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கிடையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் உணர்ச்சிகரமான அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் இந்தப் போரில் ரஷ்யாவை எதிர்த்துப் போராடுவதற்கு நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். எங்களுடன் சேர்ந்து சண்டையிட யார் தயாராக இருக்கிறார்கள்? எங்களுக்காக நிற்க இதுவரை நான் யாரையும் பார்க்கவில்லை. நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்த்துக்கொள்ள யார் தயாராக உள்ளனர்? எல்லோரும் பயப்படுகிறார்கள் என வேதனையுடன் கூறியுள்ளார். இதன்மூலம் உக்ரைன் … Read more

உக்ரைனில் பரிதாபம்: பிரியும் மகள், கதறும் தந்தை, உலகத்தை உருக வைத்த வீடியோ

பல வாரங்களாக தொடர்ந்துகொண்டிருந்த ரஷ்யா உக்ரைன் இடையிலான உச்சக்கட்ட பதற்றம் நேற்று அடுத்த கட்டத்தை எட்டியது. வியாழனன்று, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் மீது தேவையற்ற ஒரு தாக்குதலைத் தொடங்கினார். அதிகாலை துவங்கிய இந்த தாக்குதலால் பலர் தங்கள் வீடுகளை விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. சிலர் தங்கள் குடும்பங்களை பிரிய வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டனர்.  உக்ரைனிலிருந்து வெளிவரும் புகைப்படங்களிலிருந்தும், அந்த புகைப்படங்களில் இருக்கும் மக்களின் கண்களில் காணப்படும் அச்சத்திலிருந்தும் அங்குள்ள சூழலை நன்றாக … Read more

Malaysia Earthquake updates: மலேசியாவின் சுனாமி எச்சரிக்கை இல்லை

Earthquake: இன்று காலை, மலேசியாவின் கோலாலம்பூர் அருகே 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் கடற்கரையில் இன்று காலை ஏற்பட்ட வலுவான மற்றும் ஆழமற்ற நிலநடுக்கம் மக்களை பீதிக்குள்ளாக்கியது, காயங்கள் அல்லது கடுமையான சேதம் உடனடியாக அறிவிக்கப்படவில்லை. மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மலைப்பாங்கான நகரமான புக்கிட்டிங்கிக்கு வடமேற்கே 66 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.   இந்த நிலநடுக்கம், பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் அடியில் ஏற்பட்டது. மலேசியாவின் கோலாலம்பூர் … Read more

Earthquake: மலேசியாவில் நிலநடுக்கம்! பீதியில் மக்கள்

Earthquake: மலேசியாவின்  6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  மலேசியாவின் கோலாலம்பூர் அருகே 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மலேசியாவின் கோலாலம்பூர் அருகே வெள்ளிக்கிழமை காலை 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 07:09 மணியளவில் இந்தோனேசியாவின் புக்கிட்டிங்கியில் இருந்து வடமேற்கே 66 கிமீ தொலைவில் ரிக்டர் அளவுகோலில் 6.2 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்ட்டதாக: அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. An … Read more

விளாடிமிர் புடினுடன் பேசி உக்ரைன் விவகாரத்திற்கு தீர்வு காண முயலும் பிரதமர் மோடி

உக்ரைன் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்திய பிரதமரர் நரேந்திர மோடியுடன் பேசினார். நேற்று இரவு (பிப்ரவரி 24, 2022 வியாழன்) விளாடிமிர் புட்டினுடனான தொலைபேசி உரையாடலின்போது (India – Russia Talk), ​​உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவை வலியுறுத்தினார். “வன்முறையை உடனடியாக நிறுத்துமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்தார், மேலும் ராஜாங்கரீதியிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு திரும்ப வேண்டும் என்று அனைத்து தரப்பிலிருந்தும் … Read more

ரஷ்யா உக்ரைன் மோதல்: இந்தியாவின் கவலைகளுக்கான காரணங்கள்..!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால், நாட்டின் பல பகுதிகளில் இந்திய குடும்பங்களின் கவலை அதிகரித்துள்ளது. உண்மையில், உக்ரைனின் பல்வேறு நகரங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் காரணமாக சிக்கியுள்ளனர். உக்ரைனில் சுமார் 18,000 இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். இது தவிர, சுமார் 8,000 இந்தியர்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் உக்ரைனில் 76000 வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர். அதில்  சுமார் 19000 பேர் இந்திய … Read more

Russia Ukraine News: உக்ரைனின் உடனடித் தேவைகள் என்ன? உக்ரைன் அமைச்சரின் பட்டியல்

ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கியது தொடர்பாக நேட்டோ அமைப்பு ஆலோசித்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள நேட்டோ என்ற வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு, துருப்புகளை ரஷ்யா எல்லை நோக்கி நகர்த்தியிருக்கிறது. சில உறுப்பு நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவியை வழங்கியிருக்கின்றன. இந்த நிலையில் உக்ரைனின் தற்போதைய அவசரத் தேவை என்ன? தெரிந்துக் கொள்வோம். வியாழன் அன்று (பிப்ரவரி 24) ரஷ்ய அதிபர் புடின் உக்ரைனுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக … Read more

ரஷ்யா-உக்ரைன் மோதல்: மூன்றாம் உலகப் போரை நோக்கி உலகம் செல்கிறதா..!!

உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் ராணுவ நடவடிக்கையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வியாழக்கிழமை அறிவித்ததோடு, ரஷ்ய நடவடிக்கையில் தலையிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மற்ற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கிழக்கு உக்ரைனில் உள்ள பொதுமக்களைப் பாதுகாக்க இந்தத் தாக்குதல் அவசியம் என்று விளாடிமிர் புடின் கூறினார். ரஷ்யா தாக்குதல் நடத்துவதற்கான காரணம் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா பொய்யாக நியாயப்படுத்த முயற்சிக்கும்  என அமெரிக்கா ஏற்கனவே கவலை தெரிவித்திருந்தது. முன்னதாக, அமெரிக்காவும் அதன் … Read more

Ukraine-Russia War: பொருளாதரத்தில் பூமரங்காக எதிரொலிக்கும் ரஷ்யாவின் தாக்குதல்

உக்ரைனின் மீதான தாக்குதல் நேரடியாக ரஷ்யாவின் பொருளாதரத்தில் எதிரொலிக்கிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று காலை, ராணுவ நடவடிக்கையை அறிவித்த உடனே, மாஸ்கோ எக்ஸ்சேஞ்சில் பங்குச் சந்தை வர்த்தகம் நிறுத்தப்பட்டது. உக்ரைனுடனான மோதலின் உச்சகட்டமாக ரூபிள் மதிப்பு மிகவும் சரிந்தது. அது, முன்னரே தீர்மானிக்கப்பட்ட வரம்புகளுக்கு கீழே சரிந்ததால் ரஷ்ய பங்குச் சந்தை மூடப்பட்டது.  “அனைத்து சந்தைகளிலும் வர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளது, மீண்டும் தொடங்குவது குறித்து பிறகு அறிவிக்கப்படும்” என்று தகவல்கள் வெளியிடப்பட்டது. நேற்றைய பங்குச் சந்தை … Read more

Russia Ukraine News: ஆயுதங்களைக் கீழே போட வலியுறுத்தி ஆயுதமேந்தும் ரஷ்யா

ஐ.நா அவசரகால பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யாவின் தூதர், உக்ரைனுக்கு எதிரான மாஸ்கோவின் இராணுவ நடவடிக்கையானது, கிய்வில் அதிகாரத்தில் உள்ள “அரசு ஆட்சியை” குறிவைத்ததிருப்பதாக  கூறினார். “உக்ரேனிய மக்களுக்கு எதிராக நாங்கள் ஆக்ரோஷமாக செயல்படவில்லை, ஆனால் கிய்வில் அதிகாரத்தில் இருக்கும் இராணுவ ஆட்சிக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்” என்று ரஷ்ய தூதர் கூறினார். முன்னதாக, உக்ரைன் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்றும், டான்பாஸைப் பாதுகாக்க சிறப்பு நடவடிக்கை’ … Read more