கூகுள் வாலெட் vs கூகுள் பே: இரண்டுக்குமான வேறுபாடு என்ன?

சென்னை: கடந்த புதன்கிழமை இந்தியாவில் கூகுள் வாலெட் அறிமுகமானது. இதன் மூலம் பயனர்கள் தங்களது ஐடி கார்டு, சினிமா டிக்கெட், போர்டிங் பாஸ் மற்றும் பல டாக்குமென்ட்களை டிஜிட்டல் வடிவில் பயன்படுத்தலாம். கூகுள் வாலெட் செயலி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட போது இந்த செயலில் எந்த வகையிலும் ‘கூகுள் பே’ பயன்பாட்டை பாதிக்காது என அந்நிறுவனம் விளக்கம் கொடுத்தது. கூகுள் வாலெட் அதன் சர்வதேச வெர்ஷனில் இருந்து சற்றே மாறுபட்டு இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த செயலியின் … Read more

உஷார்! ஆதார் பயோ மெட்ரிக் தகவல்களை பாதுகாப்பது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்

ஆதார் பயோமெட்ரிக் தரவை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது: ஆதார் அட்டையின் சிறப்பு என்னவென்றால், அதில் உங்கள் கைரேகை, கண் ஸ்கேன் மற்றும் முகம் அடையாளம் காணுதல் போன்ற தகவல்கள் உள்ளன. இந்தத் தகவல் தவறான நபரின் கைகளுக்குச் சென்றால், அவர் அதை தவறாகப் பயன்படுத்தலாம். ஆதார் எண்கள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் விற்கப்படுவதாக சமீபத்தில் செய்திகள் வந்தன. எனவே, உங்கள் ஆதார் பயோமெட்ரிக் தகவலைப் பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம்.  ஆதார் பயோமெட்ரிக் தகவல்களை எவ்வாறு … Read more

நிலவில் ரயில் நிலையம்: நாசாவின் பலே திட்டம்!

வாஷிங்டன்: நிலவில் ரயில் என்பது இப்போதைக்கு கற்பனை மட்டுமே. அதற்கு செயல் வடிவம் கொடுக்க முயற்சிக்கிறது நாசா. இந்த ரயில் பூமியில் நாம் பயன்படுத்தி வரும் ரயிலில் இருந்து சற்று மாறுபடுகிறது. அது குறித்து விரிவாக பார்ப்போம். நிலவின் மேற்பரப்பில் ரயில் நிலையம் அமைப்பது தான் நாசாவின் திட்டம். தானியங்கு முறையில் செயல்படும் வகையிலும், சுமைகளைக் கடத்திச் செல்லும் வகையில் இதன் இயக்கம் இருக்க வேண்டும் என நாசா விரும்புகிறது. உலக நாடுகள் விண்வெளியில தங்களின் ஆதிக்கத்தை … Read more

சென்னையில் அதிசயம்! சர்வதேச விண்வெளி நிலையத்தை இன்று வெறும் கண்ணில் பார்க்கலாம் – எப்படி?

International Space Station Visible In Chennai: சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் பூமியில் இருந்து 500 கி.மீ., உயரத்தில் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அது தொடர்ந்து பூமியை சுற்றி வரும். அதாவது நாள் ஒன்றுக்கு 12 முறை பூமியை இந்த சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் சுற்றி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இங்கு தொடர்ந்து விண்வெளியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் சரியாக … Read more

ஐஐடி ஸ்டார்ட்-அப் நிறுவனம் உருவாக்கிய புதிய மைக்ரோசிப்: இந்திய நிறுவனங்கள் பயன்படுத்த அழைப்பு

சென்னை: குறைந்த செலவில் உயர் திறனுடன் சென்னை ஐஐடி ஸ்டார்ட்-அப் நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய மைக்ரோசிப் சாதனத்தை இந்திய தொழில்நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி ஸ்டார்ட்-அப் நிறுவனமான மைன்ட்குரோவ் டெக்னாலஜிஸ் நிறுவனம் குறைந்த செலவில் உயர்திறன்மிக்க புதிய மைக்ரோசிப் சாதனத்தை (‘Secure IoT’) வணிகரீதியாக உருவாக்கியுள்ளது. இந்த சாதனம், ஸ்மார்ட்வாட்ச், வாட்டர் மற்றும் கியாஸ் மீட்டர், மின் வாகன பேட்டரி மேலாண்மை உள்ளிட்டவற்றில் பெரிதும் பயன்படும். மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் … Read more

இந்தியாவில் ‘கூகுள் வாலெட்’ அறிமுகம்: பயன்படுத்துவது எப்படி?

புதுடெல்லி: கூகுள் நிறுவனம் இந்தியாவில் ‘கூகுள் வாலெட்’ செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதில் பேமென்ட் அம்சம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உள்ள ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் இந்த செயலியை பயன்படுத்தலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் செயலி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் (2022) இதே மே மாதத்தில் நடைபெற்ற ‘கூகுள் இன்புட்/அவுட்புட்’ (i/o) டெவலப்பர் மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியின் பெயருக்கு ஏற்ற வகையில் அதன் செயல்பாடு இருக்கும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. … Read more

ஆப்பிள் iPad புரோ அறிமுகம் | மெல்லிய சாதனம் என பிராண்ட் செய்த டிம் குக்

கலிபோர்னியா: ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான iPad மற்றும் அக்சஸரிஸ் சாதனங்களை ‘Let Loose’ நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது. இதில் எம்4 சிப் உடன் iPad புரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இது இதுவரை வெளியான iPad சாதனங்களில் மிகவும் மெலிதானது என ஆப்பிள் சிஇஓ டிம் குக், சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த நிகழ்வில் இரண்டு புதிய iPad மாடல், iPad அப்கிரேட் மாடல், மேஜிக் கீபோர்டு மற்றும் மேஜிக் பென்சில் போன்றவற்றை ஆப்பிள் … Read more

iVOOMi JeetX ZE : 170 கிமீ தூரம் ஜாலியா டிரிப் அடிக்கலாம்! மார்கெட்டுக்கு வரப்போகும் இ-ஸ்கூட்டர்

இந்தியாவில் இருசக்கர வாகன துறையில் இ-ஸ்கூட்டருக்கு மிகப்பெரிய மார்க்கெட் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஓலா, டிவிஎஸ் முதல் ஏத்தர் நிறுவனங்கள் வரை புதிய ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இடையில் புதிய ஸ்கூட்டரை மார்க்கெட்டுக்கு கொண்டு இந்த நிறுவனங்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது  iVOOMi JeetX ZE நிறுவனம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்  iVOOMi JeetX ZE இ-ஸ்கூட்டர் 170 கிமீ வரை பயணிக்கலாம்.   JeetX ZE: புதிய அம்சங்கள் என்ன? JeetX ZE ஆனது மூன்று … Read more

நெக்ஸான் சிஎன்ஜி vs மாருதி பிரெஸ்ஸா : விலை, மைலேஜ் என எந்த கார் பெஸ்ட் தெரியுமா?

இப்போதெல்லாம் கார் மார்கெட்டில் காம்பாக்ட் SUV வாகனங்களில் CNG இன்ஜின்களை மக்கள் விரும்புகிறார்கள். பொருளாதார ரீதியில் விலை நிர்ணயம் செய்யப்படும் இந்த வாகனங்களின் பராமரிப்பு மற்றும் இயக்கச் செலவு குறைவு. டாடா மோட்டார்ஸ் தனது நெக்ஸானின் சிஎன்ஜி பதிப்பை இந்த பிரிவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதே நேரத்தில், மாருதியின் பிரெஸ்ஸா சந்தையில் நெக்ஸானுடன் போட்டியாக ஆல்ரெடி இருக்கிறது. இந்த இரண்டு வாகனங்களும் நிறுவனங்களால் உயர்தரமாக உருவாக்கப்பட்டுள்ளன, மேலும் அவை மிகப்பெரிய கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டவை. இரண்டையும் … Read more

உலகின் முதல் 6ஜி சாதனம் ஜப்பானில் அறிமுகம்: 5ஜி-யை விட 20 மடங்கு வேகம்

டோக்கியோ: உலகின் முதல் 6ஜி சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது ஜப்பான் நாடு. அந்த நாட்டில் இயங்கி வரும் டெலிகாம் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து இதனை கட்டமைத்துள்ளன. இந்த 6ஜி சாதனம் மாதிரி வடிவம் (ப்ரோட்டோடைப்) என்பது குறிப்பிடத்தக்கது. டோகோமோ, என்டிடி கார்ப்பரேஷன், என்இசி கார்ப்பரேஷன், புஜிட்சு என ஜப்பான் நாட்டின் டெலிகாம் நிறுவனத்தின் கூட்டு முயற்சி இது. கடந்த மாதம் இந்த சாதனத்தை சோதனை செய்து பார்த்ததாக இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதில் வெற்றியும் கிடைத்துள்ளது. நொடிக்கு … Read more