மஞ்சு வாரியருக்கு அழைப்பு விடுத்த துணிவு படக்குழு
தனுஷ் நடித்த அசுரன் படத்தில் அவரது மனைவியாக நடித்திருந்த மலையாள நடிகை மஞ்சுவாரியர், தற்போது துணிவு படத்தில் அஜித்துடன் நடித்துள்ளார். மலையாளத்தில் பெரும்பாலும் மென்மையான வேடங்களில் நடித்துள்ள மஞ்சு வாரியர், இந்த படத்தில் முதன்முறையாக ஆக்சன் ரோலில் நடித்திருந்தார். இது குறித்து மஞ்சு வாரியார் கூறுகையில், முதல் முறையாக துணிவு படத்தில் தான் ஆக்ஷன் வேடத்தில் நடித்திருக்கிறேன். இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது மிக்க மகிழ்ச்சி. அதோடு கேரளாவில் இந்த படத்தை ரசிகர்களுடன் தியேட்டரில் பார்த்து ரசித்தேன். … Read more