துணிவு Vs வாரிசு முதல் நாள் வசூல் நிலவரம் – தமிழ்நாட்டு பாக்ஸ் ஆபீஸில் இவர்தான் டாப்!

விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படமும், அஜித்தின் ‘துணிவு’ திரைப்படமும் நேற்று ஒரே நாளில் வெளியான நிலையில், தமிழ்நாட்டில் வழக்கம்போல் அஜித்தின் படம்தான் வசூலில் முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் விஜய் திரைப்படம் டாப்பில் உள்ளது. தமிழ் திரையுலகில் மாஸ் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். கடந்த 2014-ம் ஆண்டு பொங்கலுக்குப் பிறகு, இவர்கள் இருவரின் படங்களும் நேரடியாக மோதாமல் இருந்தன. இந்நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டுப் பொங்கலை முன்னிட்டு நேற்று ஒரேநாளில் … Read more

இன்று ஐதராபாத்தில் 'வாரசுடு' பிரஸ்மீட், விஜய் போவாரா ?

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்துளள 'வாரிசு' படம் தமிழில் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. கலவையான விமர்சனங்கள் படத்திற்கு வந்தாலும் முன்பதிவு சிறப்பாக இருப்பதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் தெலுங்கு டப்பிங்கான 'வாரசுடு' ஜனவரி 14ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கான பிரஸ்மீட் இன்று(ஜன., 12) மாலை ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. அதில் விஜய் கலந்து கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் நடித்து இதுவரையில் தெலுங்கில் டப்பிங் … Read more

சமந்தாவுக்கு ஆதரவாக பதிலடி கொடுத்த வருண் தவான்

சமந்தா நடிப்பில் அடுத்ததாக சாகுந்தலம் என்கிற திரைப்படம் வரும் பிப்ரவரி 17ம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. சில மாதங்களாகவே மையோசிடிஸ் எனும் தசை நார் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு வந்த சமந்தா, பொது நிகழ்ச்சிகளில் பங்கெடுக்காமல் இருந்து வந்தார். அதனால் சாகுந்தலம் பட விழாவிலும் அவர் கலந்து கொள்வாரா என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த நிகழ்வில் கலந்து கொண்ட சமந்தா கண் … Read more

Jigarthanda 2: தீவிரமடையும் ஜிகர்தண்டா 2 ஷூட்டிங்

பீட்சா படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர் கார்த்திக் சுப்பாராஜ். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், விஜய் சேதுபதி உள்ளிட்டோரை வைத்து ஜிகர்தண்டா படத்தை இயக்கினார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. மேலும் மதுரையை மையமாக வைத்து வந்த தமிழ் சினிமாக்களில் ஜிகர்தண்டா தனித்து தெரிந்தது. அதுமட்டுமின்றி படத்தில் நடித்த பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்தப் படத்துக்கு பிறகு கார்த்திக் சுப்பாராஜின் … Read more

16வது ஆண்டில் குரு: மடியில் உட்கார்ந்து செல்ல டிக்கெட் கிடையாதா? IRCTCஐ கேட்ட Netflix!

மணிரத்னம் இயக்கத்தில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மாதவன், வித்யா பாலன் என பலரது நடிப்பில் உருவான குரு படம் வெளியாகி இன்றோடு 16 ஆண்டுகள் ஆகிறது. 2007ம் ஆண்டு வெளியான இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பார். இந்தியில் உருவானாலும் தமிழிலும், தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு குரு திரைப்படம் வெளியிடப்பட்டது. தொழிலதிபர் திருபாய் அம்பானியின் வாழ்க்கையை கருவாக கொண்டதுதான் குரு படம் என தெரிவிக்கப்பட்டாலும் அதனை மறுத்ததோடு, முழுக்க முழுக்க கற்பனையான கதைதான் குரு என்றும் மணிரத்னம் … Read more

வாரிசு, துணிவு – ஆரம்பமானது 'நம்பர் கேம்' சண்டை

பொங்கலை முன்னிட்டு நான்கு நாட்கள் முன்னதாக நேற்றே விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' ஆகிய படங்கள் வெளிவந்தன. அதிகாலை காட்சிகளில் இருந்தே இரண்டு படங்களைப் பற்றியும் ரசிகர்களின் கமெண்ட்கள் சமூக வலைத்தளங்களில் நிரம்பி வழிந்தது. நேற்றைய டிவி விவாதங்களில் கூட 'வாரிசு, துணிவு' பற்றித்தான் விவாதமே நடத்தினார்கள். அந்த அளவிற்கு நேற்றைய செய்திகளில் இந்த இரண்டு படங்களும் முக்கியத்துவம் பெற்றது. படம் வெளியான இரண்டாவது நாள் வழக்கம் போல ஆரம்பமாகும் சண்டை இன்று(ஜன., 12) … Read more

சிவகுமாரின் திருக்குறள் 100

பழம்பெரும் நடிகர் சிவகுமார் 100 திருக்குறள்களை தேர்ந்தெடுத்து அதற்கு ஏற்ற பொருத்தமான வாழ்க்கை அனுபவங்களை இணைத்து 'வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்களின் வரலாற்றுடன் குறள்' என்கிற கண்ணோட்டத்தில் 'திருக்குறள் 100' என்ற உரை 4 மணி நேரம் நிகழ்த்தி, அதை நூலாகவும் எழுதி வெளியிட்டிருக்கிறார். சிவகுமாரின் இந்த சாதனை தொலைக்காட்சி நிகழ்ச்சியாக தயாராகி உள்ளது. இந்த நிகழ்ச்சி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 15, 16,17 ஆகிய 3 நாட்கள் பிற்பகல் 3 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் … Read more

தமிழுக்கு வரும் தெலுங்கு புதுமுகம்

தெலுங்கில் வெளிவந்த ஹிட் 2 படத்தின் மூலம் அறிமுகமானவர் அடிவி சேஷ். அடுத்து இவர் நடிக்கும் படம் ஜி2. எடிட்டர் சிரிகீனிஷ் இயக்குகிறார். பீப்பிள் மீடியா பேக்டரி , ஆர்ட்ஸ் மற்றும் ஏ.கே. என்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கதையின் காலகட்டம், உருவாக்கம், தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு, சர்வதேச அளவிலான தொழில்நுட்ப குழுவினரின் திட்டமிடல் ஆகியவற்றின் அடிப்படையில் இப்படத்தின் உருவாக்கம், எதிர்பார்த்ததை விட அதிகமாகவும், … Read more

பனையேறிகளின் வாழ்வியலை சொல்லும் 'நெடுமி'

ஆல்பங்கள், குறும்படங்கள் இயக்கிய நந்தா லக்ஷ்மன் இயக்கியுள்ள படம் நெடுமி. ஹரிஷ்வர் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.வேல்முருகன் தயாரித்துள்ளார். நாயகனாக பிரதீப் செல்வராஜ் நடித்துள்ளார். நாயகியாக அபிநயா நடித்துள்ளார். ஏ.ஆர்.ராஜேஷ் பிரீத்தி ரமேஷ், வாசு, கிசோர் மணி, குழந்தை நட்சத்திரங்கள் சரத்ராஜ், ராம்கி, நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளவர் ஜாஸ் ஜே.பி. விஷ்வா மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி இயக்குனர் நந்தா லக்ஷ்மன் கூறியதாவது: மரம் ஏறுபவர்களின் வாழ்க்கை எப்படிப்பட்டது? அவர்களது வலிகள் என்ன? பனை மரங்களின் … Read more