புதியவர் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கும் சதீஷ்

காமெடி நடிகராக இருந்து வந்த சதீஷ், ஹீரோவாகவும் நடிக்க தொடங்கி உள்ளார். இவர் நாயகனாக நடித்த முதல்படமான நாய் சேகர் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அடுத்து ஓ மை கோஸ்ட் படத்திலும் பிரதான வேடத்தில் நடித்தார். அடுத்து அறிமுக இயக்குனர் வெங்கி இயக்கும் ஒரு படத்தில் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக சிம்ரன் குப்தா நடிக்கிறார். உடன் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விபிஆர் இசையமைக்க, ஒயிட் கார்ப்பட் பிலிம்ஸ் … Read more

கோல்டன் விசா பெற்றார் பாடகி அம்ருதா சுரேஷ்

ஐக்கிய அரபு அமீரக அரசு, கடந்த 2019ம் ஆண்டில் தங்களது ஆளுகைக்கு உட்பட்ட நகரங்களில் நீண்ட நாட்கள் தங்கி வேலை பார்க்கவும் வசிக்கவும் கோல்டன் விசா வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இப்படிப்பட்ட ஒரு சிறப்பு சலுகையை தென்னிந்திய திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகின்றனர். குறிப்பாக மலையாளம், தமிழ் இரண்டு மொழிகளை சேர்ந்த திரையுலக பிரபலங்கள் அதிக அளவில் இந்த கோல்டன் விசாவை பெற்று வருகின்றனர். அந்தவகையில் முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்முட்டி, பிரித்விராஜ், விஜய்சேதுபதி, … Read more

பஹத் பாசில் நடிக்கும் தூமம் கன்னட படமல்ல

நடிகர் பஹத் பாசில் கடந்த 2020 இறுதியில் தெலுங்கில் நடித்த புஷ்பா, அடுத்த வருடம் ஜூன் மாதம் வெளியான விக்ரம் ஆகிய இரண்டு படங்களும் அவருக்கு மலையாளத்தையும் தாண்டி தெலுங்கிலும் தமிழிலும் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்றுத் தந்துள்ளன. கிட்டத்தட்ட பான் இந்தியா நடிகராக மாறிவிட்ட பஹத் பாசில் தற்போது தமிழில் மாமன்னன், தெலுங்கில் வில்லனாக புஷ்பா 2 மற்றும் கதாநாயகனாக ஹனுமன் கீர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கன்னட இயக்குனர் பவன்குமார் இயக்கத்தில் … Read more

கோயிலுக்குள் அனுமதி மறுப்பு : 2023லும் இந்த நிலையா என அமலாபால் வருத்தம்

கேரளாவை சேர்ந்த அமலாபால் தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார். கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருவைராணிகுளம் மகாதேவர் கோவில் உள்ளது. இந்த கோயிலில் பிற மதத்தினர் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்நிலையில் அமலாபால் இந்த கோயிலுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் வெளியில் இருந்தபடி சாமி தரிசனம் செய்துள்ளதாக தெரிகிறது. இதுபற்றி தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார் அமலாபால். அவர் கூறுகையில், ‛‛திருவைராணி கோயிலுக்கு ஆர்வத்துடன் சாமி தரிசனம் … Read more

ஜான்வியின் பொங்கல் வாழ்த்துக்கு 1 மில்லியன் லைக்ஸ்

'துணிவு' படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட்டில் மட்டுமே இதுவரை நடித்து வருகிறார். தென்னிந்தியப் படங்களில் நடிக்க வேண்டும் என்று அடிக்கடி ஜான்வி கூறி வந்தாலும் இன்னும் எந்தப் படத்திலும் நடிக்க சம்மதிக்காமல் இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கிளாமர் புகைப்படங்களைப் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருப்பவர் ஜான்வி. அதனால், அவருக்கு அதிகமான பாலோயர்கள் இருக்கிறார்கள். மும்பையிலேயே பிறந்து வளர்ந்தாலும் தனது அம்மா ஸ்ரீதேவியின் தென்னிந்தியத் தொடர்பை அடிக்கடி … Read more

2 பில்லியன் வசூலை நெருங்கும் 'அவதார் 2'

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த மாதம் உலகம் முழுவதும் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் 'அவதார் த வே ஆப் வாட்டர்'. இப்படம் தற்போது வரை 1.9 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய ரூபாய் மதிப்பில் 15460 கோடி. அமெரிக்காவில் மட்டும் 572 மில்லியன் வசூல், அமெரிக்கா தவிர மற்ற உலக நாடுகளில் 1.35 பில்லியன் வசூலித்துள்ளது இந்தப் படம். இப்போது 'ஸ்பைடர் மேன் – நோ வே ஹோம்' படத்தின் வசூலைக் கடந்து … Read more

ஏஆர் ரஹ்மான் ஸ்டுடியோவில் தவறி விழுந்து ஒருவர் பலி

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சொந்தமாக திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் ஏஆர்ஆர் பிலிம்சிட்டி என்ற பெயரில் ஸ்டுடியோ ஒன்று உள்ளது. இங்கே படப்பிடிப்புகளும் நடக்கின்றன. சத்யராஜ் நடிக்கும் 'வெப்பன்' படத்திற்கான படப்பிடிப்புக்கு இந்த ஸ்டுடியோவில் செட் அமைக்கும் பணி நடக்கிறது. படப்பிடிப்பிற்கு 40 அடி உயரத்தில் மின்விளக்கு பொருத்தும் பணியில் லைட் மேன் ஒருவர் ஈடுபட்டிருந்தார். எதிர்பாராவிதமாக அவர் தவறி விழுந்தததில் உயிரிழந்தார். விபத்து குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

'வாரிசு' – தெலுங்கில் வெற்றிப் படமா ?

விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'வாரிசு'. இப்படம் தமிழில் வெளியான மூன்று நாட்களுக்குப் பிறகே தெலுங்கில் வெளியானது. தமிழில் கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில் அதன் பின் தெலுங்கில் வெளியானால் அது படத்தின் வசூலை பாதிக்குமோ என்று அச்சப்பட்டார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. தெலுங்கு ரசிகர்களுக்குப் படம் பிடித்துள்ளது என்பது அப்படத்திற்குக் கிடைத்த வசூலை வைத்து புரிந்து கொள்ள முடிகிறது. நான்கு நாட்களில் … Read more

ஜெய்சல்மரில் துவங்கிய மலைக்கோட்டை வாலிபன் படப்பிடிப்பு

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு வெளியான புலி முருகன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது வழக்கமான படங்களில் இருந்து மாறி, புலிக்கும் மனிதனுக்கும் உண்டான பகை என்பதை மையப்படுத்தி ஒரு பேண்டஸி படமாக இந்த படம் உருவாகி இருந்ததால் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது. அதன்பிறகு மோகன்லாலிடமிருந்து அப்படி ஒரு படம் எப்போது வரும் என எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது அதேபோன்ற கௌபாய் கதையம்சம் கொண்ட மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தில் மோகன்லால் … Read more

எனக்கும் ராம்சரணுக்கும் வொர்க் அவுட்டான பிசிக்ஸ் : ஜூனியர் என்டிஆர்

சினிமாவை பொறுத்தவரை நாயகன் நாயகி மட்டுமல்லாமல் இரண்டு ஹீரோக்கள் இணைந்து நடிக்கும்போதும் அவர்களது காம்பினேசன் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றால் அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி அழகாக ஒர்க் அவுட் ஆனது என்று சொல்வார்கள். ஆனால் தனக்கும் ராம்சரணுக்குமான நட்பில் பிசிக்ஸ் வொர்க் அவுட் ஆகி உள்ளது என்று கூறியுள்ளார் நடிகர் ஜூனியர் என்டிஆர். ராஜமவுலி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் இவர்கள் இருவரும் சம முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய … Read more