இதுவரை 4.36 கோடி பூத் சிலிப் – மகளிர் உரிமைத் தொகை வழங்க தடையில்லை! தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு,

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 4.36 கோடி பூத் சிலிப் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த  தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழ்நாடு அரசு பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கி வரம் மகளிர் உரிமைத் தொகை வழங்க தடையில்லை என்று கூறினார். தலைமைச்செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர் சாகு, தமிழ்நாடு அரசு, பெண்களுக்கு வழங்கி வரும், மகளிர் உரிமை தொகையை பயனாளர்களுக்கு அளிக்க எந்த தடையும் இல்லை என தெளிவுபடுத்தினார். அரசு தொர்ந்து வரும் திட்டங்களுக்கு … Read more

கேள்வி கேட்ட பெண்ணின் வீடு புகுந்து அசிங்கமாக பேசி தாக்குதல் நடத்திய பாஜகவினர்.. திருப்பூரில் ஷாக்!

திருப்பூர்: ஜிஎஸ்டி வரியால் பாதிக்கப்படுவதாக கூறிய பெண்ணை, கடைக்குள் நுழைந்து பாஜகவினர் மிரட்டி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம், நேற்று இரவு ஆத்துப்பாளையம் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது, அப்பகுதியில் ரெடிமேட் கடை நடத்தி வரும் பெண் ஒருவர் ஜிஎஸ்டி வரியால் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டி கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து, அந்த Source Link

நாட்டை பிளவுபடுத்த பா.ஜனதா முயற்சிக்கிறது: சசிதரூர் விமர்சனம்

திருவனந்தபுரம், முன்னாள் மத்திய மந்திரியும் எம்.பியுமான சசிதரூர், நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் 4-வது தடவையாக காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.அவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-நாடாளுமன்ற தேர்தலில் தென்னிந்தியாவில் சிறப்பான வெற்றியை பெறுவோம், கால் பதிப்போம் என்று பா.ஜனதா சொல்கிறது.சந்தேகமே இல்லாமல், தென்னிந்தியாவில் கால் பதிக்க பா.ஜனதா முயற்சிக்கும். பிரதமர் மோடியின் பிரசாரம் அதைத்தான் உணர்த்துகிறது. எனினும், தென்னிந்தியாவில் பா.ஜ.க வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. வளர்ச்சியில் அக்கறை … Read more

Vietnam: 12.5 பில்லியன் டாலர் மோசடி வழக்கு; பெண் கோடீஸ்வரருக்கு மரண தண்டனை! – கோர்ட் அதிரடி

வியட்நாமைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம், வான் தின் ஃபாட். ட்ருங் மை லான் (67) என்பவர் இந்த நிறுவனத்தின் தலைவராகப் பதவி வகித்து வந்தார். இவர்மீது அரசு ஆவணங்களின்படி, 2012 முதல் 2022 வரை சைகோன் வர்த்தக வங்கியை தனிப்பட்ட ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தியதாகவும், சட்டவிரோதமாக அதைக் கட்டுப்படுத்தியதாகவும், அதன் மூலம் சுமார் 12.5 பில்லியன் டாலர் அளவுக்கு மோசடி செய்திருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது 2022-ம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 3 சதவிகிதம் … Read more

கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி இன்று மாலை கூட்டாக பிரச்சாரம்!

சென்னை: இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில், முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி இன்று கூட்டாக பிரச்சாரம் செய்கின்றனர். இதையடுத்து  அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோவை  செட்டிபாளையத்தில் நடைபெறும் இன்று மாலை நடைபெற உள்ள  பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி உரை நிகழ்த்த உள்ளனர். ஒரே நாளில் இரு இடங்களில் பரப்புரை மேற்கொள்ளும் வகையில் ராகுல்காந்தியின்  பயணத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று காலை நெல்லையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் … Read more

”ராமேஸ்வரம் கபே” வசமாய் சிக்கிய மாஸ்டர் மைண்ட்..! சுற்றி வளைத்த என்ஐஏ.. சென்னையில் தஞ்சமா?

கொல்கத்தா: இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய இருவரை கொல்கத்தாவில் வைத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர். முகமூடி அணிந்த குற்றவாளி, ஐஇடி குண்டு, வெளிநாட்டு தொடர்பு என பல முடிச்சுகளை அவிழ்த்து புலனாய்வுத் துறையினர் குற்றவாளிகளை நெருங்கியது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.. Source Link

'மக்கள் விரும்பும் வரை மோடியே பிரதமராக இருப்பார்' – ராஜ்நாத் சிங்

புதுடெல்லி, எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார் எனவும், மக்கள் விரும்பும் வரை அவரே பிரதமராக இருப்பார் என்றும் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாள்ர்களிடம் அவர் கூறியதாவது;- “சர்வதேச சமூகத்தில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியது யார் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மோடியின் மீது மக்களுக்கு மிகப்பெரிய ஈர்ப்பு உள்ளது. அவர் 3-வது முறையாக மட்டுமின்றி, 4-வது முறையும் பிரதமராக … Read more

8 மாத குழந்தை உட்பட 7 குழந்தைகள், மனைவியை வெட்டிக் கொன்ற கணவன் – கொடூர சம்பவத்துக்கு காரணம் என்ன?!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மனைவி, எட்டு மாத குழந்தை உட்பட 7 குழந்தைகளை கோடாரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை, சஜ்ஜத் கோகர் என்வரைக் கைது செய்திருக்கிறது. இந்த கொலைகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டிருக்கும் காவல்துறை தரப்பு, “சஜ்ஜத் கோகர் ஒரு கூலித் தொழிலாளி. இவருக்கு கவுசர் (42) என்ற மனைவியும், எட்டு மாத குழந்தை முதல் 10 வயது வரை இருக்கும் நான்கு மகள்களும், … Read more

அண்ணாமலை பிட் அடித்து பாஸ் ஆனாரா? ‘தெர்மோகோல் புகழ்’ செல்லூர் ராஜூ சந்தேகம்…

மதுரை:  அண்ணாமலை படித்து பாஸ் ஆனாரா? அல்லது பிட் அடித்து பாஸ் ஆனாரா? அதிமுக அழிந்து போகும் என கூறிய அழகிரி இப்போது அரசியலிலே இல்லை என தெர்மோகோல் புகழ் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு  விமர்சித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வாரத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது அனல்பறக்கும் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். அரசியல் கட்சியினிர் ஒருவரை ஒருவர் குற்றம் … Read more

ஶ்ரீபெரும்புதூர் தொகுதி: திமுக கோட்டையில் கடும் போட்டி! சம பலத்துடன் வேட்பாளர்கள்- வெல்வது யார்?

ஶ்ரீபெரும்புதூர்: லோக்சபா தேர்தல்களில் திமுக அதிக முறை வென்ற ஶ்ரீபெரும்புதூர் தொகுதி நட்சத்திர தொகுதியாகும். இத்தொகுதியில் திமுகவின் மூத்த தலைவர் டிஆர் பாலு 2-வது முறையாக களம் காண்கிறார். இத்தொகுதி நிலவரத்தை இப்பக்கத்தில் பார்ப்போம். ஶ்ரீபெரும்புதூர் (திருப்பெரும்புதூர்) லோக்சபா தொகுதியில் அடங்கியுள்ள சட்டசபை தொகுதிகள்: அம்பத்தூர், மதுரவாயல், ஸ்ரீபெரும்புதூர் (தனி), ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம். 2021 சட்டசபை Source Link