ரூ..1000 கோடி நிதி திரட்டும் வகையில் பசுமை காலநிலை மாற்ற நிதி அமைத்து ஆணை! தமிழகஅரசு

சென்னை: தமிழ்நாடு அரசு ரூ.1000 கோடி நிதி திரட்டும் வகையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிதியை அமைத்துள்ளது. அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  இந்த ஆண்டு (2022-2023) நிதிநிலை அறிக்கையில் அறிவித்தபடி, தமிழ்நாடு அரசு ரூ.1000 கோடி நிதி திரட்டும் வகையில் தமிழ்நாடு பசுமை காலநிலை மாற்ற நிதியை அமைத்து ஆணை வெளியிட்டுள்ளது. இத்தகைய நிதி அமைப்பு முயற்சி இந்தியாவிலேயே முதன் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த காலநிலை … Read more

கோவை மேட்டுப்பாளையம் மதுக்கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள மதுக்கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. வெள்ளிக்குப்பம் பாளையம் என்ற இடத்தில் டாஸ்மாக் கடை எண் 1811-ல் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு மர்ம நபர் தப்பினார்.

குஜராத் கடல் பகுதியில் போதை பொருளுடன் நுழைந்த 22 பாக். மீனவர்கள் கைது| 22 Paks entered Gujarat waters with drugs. Fishermen arrested

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஆமதாபாத்: குஜராத் கடல்பகுதியில் இந்திய கடல்எல்லைக்குள் அத்துமீறிய 79 படகுகளில் வந்த பாகிஸ்தானை சேர்ந்த 22 மீனவர்கள் கடலோர காவல் படையினர் கைது செய்தனர். குஜராத் மாநிலம் புட்ச் கடல்பகுதியில் கடலேரா காவல்படையினர் ரோந்து சுற்றிவந்தனர். அப்போது 79 மீன்பிடி படகுகள் இந்திய கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைவதை கண்டு அப்படகுகளை சுற்றி வளைத்தனர். படகுகளை சோதனை செய்ததில் அதில் 22 பேர் இருந்தனர். அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த மீனவர்கள் என்பதும் … Read more

"என்னை கொள்ளையடிக்கச் சொல்கிறீர்களா?"- மகன் குறித்து கேள்வியெழுப்பிய நிர்வாகி; கடுகடுத்த ப.சிதம்பரம்

`வறுமையில் வாடும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கு கார்த்தி சிதம்பரம் ஒரு 100 ரூபாய் கொடுக்க முடியாதா?’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் காங்கிரஸ் நிர்வாகி கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மானாமதுரை கூட்டத்தில் அப்போது கட்சியினர் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர். ‘சில நாள்களுக்கு முன்பு சிவகங்கை நாடாளுமன்ற … Read more

பொன்.மாணிக்கவேல் மீதான சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு…

சென்னை: ஓய்வுபெற்ற சிலை கடத்தல்துறை ஐஜி பொன்.மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க  உச்சநீதிமன்றம் மறப்பு தெரிவித்துள்ளது. இதனால், அவர்மீதான விசாரணை நடத்த பச்சைக்கொடி காட்டி உள்ளது. தமிழ்நாட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்து, ஏராளமான சிலைகளை மீட்ட பெருமைக்குரியவர் பொன். மாணிக்கவேல். இவர் சென்னை உயர்நீதி மன்றம்தான் இந்த பணிக்காக நியமித்தது.  பின்னர் அவர் பணி ஒய்வு பெற்ற நிலையில், மேலும் ஓராண்டு அவரது பணியை நீட்டித்து … Read more

ஜேர்மனியின் புதிய குடியிருப்பு உரிமை சட்டங்கள் அமுலுக்கு வந்தன: புலம்பெயர்ந்தோருக்கு வாய்ப்புகள்…

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேர்மனியின் குடியிருப்பு உரிமை சட்டம் மற்றும் வெளிநாட்டவர்கள் ஜேர்மனியில் சட்டப்படி வாழ்வதையும், ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறுவதையும் எளிதாக்க உதவும் பிற சட்டங்களும் நேற்று, அதாவது 2023, ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளன. ஜேர்மனியின் குடியிருப்பு உரிமை சட்டம் இந்த புதிய சட்டம், கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் 30ஆம் திகதி கெசட்டில் வெளியிடப்பட்டது. அதனால், tolerates status என்னும் தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்று ஜேர்மனியில் வாழும் … Read more

ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களுக்கு வரைவு விதிமுறைகளை வெளியிட்டது ஒன்றிய அரசு

டெல்லி: ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களுக்கு வரைவு விதிமுறைகளை ஒன்றிய அரசு வெளியிட்டது. ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு இந்திய முகவரிகள், விளையாடுவோரின் முகவரிகள் சரிபார்ப்பு அவசியம் என தெரிவித்தது. பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களாக உள்ள நிறுவனங்கள் நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என அறிவிக்கை வெளியிட்டது.

ஜி.எஸ்.டி., வசூல் கடந்த மாதம் எவ்வளவு?| How much was the GST collection last month?

புதுடில்லி : கடந்த டிசம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து நேற்று வெளியிடப்பட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூல், தொடர்ந்து, ௧௦வது மாதமாக, ௧.௪ லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக உள்ளது. கடந்த மாதத்தில், 1.49 லட்சம் கோடி ரூபாய் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ௨௦௨௧ டிச., மாதத்துடன் ஒப்பிடுகையில், ௧௫ சதவீத வளர்ச்சியாகும். இதில் … Read more

நேற்றைய‌ அதே நகரம் தான்‌ இன்றும்! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் 2023 புது வருடத்தின்‌ என் முதல் நாள் அனுபவம் இதோ.‌ நேற்றிருந்த உலகம் இன்றைக்கு மாறிவிடப் போகிறதோ எனத் தோன்றும்படி வாட்ஸ் ஆப்பில் புத்தாண்டு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம்‌ இருந்தன.‌ அதே உணர்வுடன் புதிய‌ வானம் புதிய‌ பூமி என்று‌ பாடியபடியே , … Read more

லண்டனில் மாயமான இளம்பெண் வழக்கில் திருப்பம்! 54 வயது நபர் கைது.. முழு பின்னணி

லண்டனில் பெண்ணொருவர் காணாமல் போன வழக்கில் திடீர் திருப்பமாக கொலை வழக்காக மாற்றி பொலிசார் விசாரித்து வருகின்றனர். மாயமான இளம்பெண் Maureen Gitau (24) என்ற இளம்பெண் கடந்த மாதம் 10ஆம் திகதி Lewishamல் இருந்து காணாமல் போனார். அவரை பொலிசார் தொடர்ந்து தேடியும் கிடைக்காத நிலையில் Maureen கொல்லப்பட்டிருப்பார் என்ற முடிவுக்கு வந்துள்ளார். இதையடுத்து Maureen-க்கு நன்கு தெரிந்த 54 வயதான நபரை சந்தேகத்தின் பேரில் இரு தினங்களுக்கு முன்னர் காவல்துறை கைது செய்துள்ளது. Det … Read more