குடியரசுத் தலைவர் தேர்தல்: பழங்குடியினத் தலைவர் திரௌபதி முர்முவை வேட்பாளராக அறிவித்தது பாஜக!

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. அதனால், அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா இன்று மதியம் தேர்வு செய்யப்பட்டார். சரத் பவார் உள்ளிட்ட மூத்த எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டு யஷ்வந்த் சின்ஹாவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்தனர். யஷ்வந்த் சின்ஹா இந்த நிலையில், தற்போது மத்தியில் ஆளும் பா.ஜ.க … Read more

அமெரிக்க போர்க்கப்பலை இடைமறித்த ஈரான்! பாரசீக வளைகுடாவில் பதற்றம்

பாரசீக வளைகுடா பகுதியில் ஈரான் கடற்படை படகுகள், அமெரிக்க போர்க்கப்பலை இடைமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாரசீக வளைகுடா பகுதி வழியாக அரபிக்கடலில், அன்றாடம் பல கப்பல்கள் கச்சா எண்ணெய்யை கொண்டு செல்கின்றன. இவ்வாறு செல்லும் கப்பல்களின் பாதுகாப்பிற்காக அமெரிக்க கடற்படையின் போர் கப்பல்களும் பயணம் மேற்கொள்கின்றன. கப்பல்கள் கச்சா எண்ணெய் கொண்டு பயணிப்பதில், ஈரானுக்கு ஐந்தில் ஒரு பங்கு கிடைக்கிறது. இந்த நிலையில், வழக்கம் போல் சில கப்பல்கள் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு வளைகுடா பகுதியில் பயணித்தன. … Read more

பாஜக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிப்பு

புதுடெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் திரௌபதி முர்மு ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பாஜக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, திரௌபதி முர்மு ஜார்க்கண்ட் மாநில முன்னாள் கவர்னராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் படத்தின் வெற்றிகள் தொடர்ந்து குவியட்டும் சகோதரரே: இளையராஜா டிவிட்

சென்னை: கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் வெற்றிகள் தொடர்ந்து குவியட்டும் சகோதரரே என்று இளையராஜா தனது டிவிட்டரில் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது அதோடு உங்கள் மலர்ந்த முகம் காணக்காண சந்தோஷமாக இருக்கிறது. விக்ர மாமுகம் தெரியுதே அது வெற்றிப் புன்னகை புரியுதே என மாற்றிக்கொள்ளலாம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மராட்டிய அரசை கவிழ்க்க 3-வது முறை முயற்சி; நிலைமையை உத்தவ் தாக்கரே கையாளுவார் – சரத் பவார்

மும்பை, மராட்டியத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியில் சிவசேனா தலைவர் மராட்டிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார். இதனிடையே, சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், மாநில மந்திரியுமான எக்நாத் ஷிண்டே திடீரென குஜராத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தன்னுடன் சிவசேனா மற்றும் சுயேட்சைகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மராட்டியத்தில் சிவசேனா கட்சிக்கும், மராட்டிய … Read more

செலவினை குறைக்க அரசு ஊழியர்களுக்கு நிதியமைச்சர் போட்ட திடீர் உத்தரவு.. ஏன் இந்த அறிவிப்பு?

மத்திய அரசு அதன் தேவையற்ற செலவுகளை குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளதால், அரசு ஊழியர்கள் அவர்கள் உரிமையுள்ள பயண வகுப்பில் கிடைக்கும் மலிவான கட்டணத்தில் விமானங்களை தேர்வு செய்ய வேண்டும் என நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்ந்து எரிபொருட்கள் விலை அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து செலவும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நிதியமைச்சகம் இப்படி ஒரு உத்தவிரனை பிறப்பித்துள்ளது. பால்மர் லாரி அண்ட் கம்பெனி லிமிடெட், அசோக் டிராவல்ஸ் அண்ட் டூர்ஸ், இந்தயன் ரயில்வே கேட்டரிங் மற்றும் … Read more

மாலத்தீவு: “யோகா இஸ்லாத்துக்கு எதிரானது!" – இந்திய கலாசார மைய நிகழ்ச்சியில் மர்ம நபர்கள் தாக்குதல்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் யோகா தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மாலத்தீவின் தலைநகரான மாலேவில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் இந்திய கலாசார மையம் சார்பில் மாலத்தீவு அரசின் ஏற்பாட்டில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில், யோகா நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கும்பல் மைதானத்துக்குள் நுழைந்து திடீரென வன்முறையில் ஈடுபட்டது. அந்தக் கும்பல், `யோகா இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிரானது!’ என்ற பதாகைகளை ஏந்தியிருத்தது. மேலும், யோகா பயிற்சி செய்துகொண்டிருந்தவர்களை … Read more

18 நாளில் 400 கோடி… விக்ரம் படத்தின் மொத்த வசூல்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் ஜூன் 3 ம் தேதி வெளியான படம் விக்ரம். கமல், விஜய் சேதுபதி, பஹத் பாசில், சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். போதை மருந்து, கொள்ளை, கடத்தல் என்று ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பல திருப்பங்களுடன் சண்டைக்காட்சிகள் நிறைந்த இந்த படம் கமல் ரசிகர்களிடம் மட்டுமன்றி தமிழ் திரைப்பட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ்நாட்டில் சமீபகாலமாக மற்ற மாநிலங்களில் எடுக்கப்பட்ட படம் வசூலை வாரிக்குவித்த நிலையில் அதை முறியடித்துள்ளது … Read more

நீரிழிவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமா? இந்த 4 அற்புதமான யோகாசனங்கள் மறக்காமல் செய்திடுங்க

நீரிழிவு நோய் என்பது ஒரு நாட்பட்ட நோய் ஆகும்.  இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராகச் சுரக்காதது அல்லது குறைவாகச் சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படைக் காரணம். இதனை ஆரம்பத்திலே  ஒரு சில உணவுகள் மூலம் கட்டுப்படுத்தலாம். மேலும்  யோகாசனங்களின் மூலம் கூட கட்டுக்குள் வைத்திருக்கலாம். தற்போது நீரிழிவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் 5 யோகாசனங்களை எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்க்கலாம். பவன முக்தாசனம் முதலில் … Read more

காவல்துறையில் பணியாற்றும் நபர்களின் சாதியை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கு:உயர் நீதிமன்றகிளை தள்ளுபடி

சென்னை: காவல்துறையில் பணியாற்றும் நபர்களின் சாதியை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. தகவல் அறியும் சட்டத்தின் மூலம் காவலர்களின் சாதியை தெரிந்துகொள்வது தனியுரிமையை மீறும் செயல் என உயர் நீதிமன்றகிளை கருத்து தெரிவித்துள்ளது.