பட்டப்பகலில் சுருண்டு விழுந்து கொத்தாக பலியான ஆயிரக்கணக்கான உயிர்கள்: அதிர்ச்சி காணொளி

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் வெப்ப அலை காரணமாக ஆயிரக்கணக்கான கால்நடைகள் சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் காணொளியாக வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வெப்ப அலை கொடூரமாக வாட்டி வதைத்து வருகிறது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே, வெப்ப அலை காரணமாக கால்நடைகள் சுருண்டு விழுந்து பலியானதாக கன்சாஸ் மாகாண கால்நடைகள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. தொடர்புடைய கால்நடைகளின் மரணங்கள் யுலிசிஸில் நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் காணொளி பதிவு செய்யப்பட்ட பகுதியானது இதுவரை உறுதி … Read more

புதுச்சேரிக்கு அப்போலோ புரோட்டான்புற்றுநோய் சிகிச்சை நிபுணர் வருகை| Dinamalar

புதுச்சேரி-சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் மார்பக புற்றுநோய் சிகிச்சை நிபுணர் மஞ்சுளா ராவ், நாளை புதுச்சேரிக்கு வருகை தந்து மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளார்.புதுச்சேரி அண்ணா நகர் 14வது குறுக்கு தெரு ராஜிவ் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் அப்போலோ புரோட்டான் இன்பர்மேஷன் சென்டர் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு, சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை துறை மார்பக புற்றுநோய் சிகிச்சை நிபுணர் மஞ்சுளா ராவ், நாளை 18ம் தேதி வருகை தருகிறார். … Read more

ரூ.500 போட்டா 2500 ரூவா கிடைக்குதா.. ஏடிஎம்-மில் குவிந்த மக்கள்.. மிச்சம் மீதி இருக்கா?

ஏடிஎம்மில் 500 ரூபாய் பணம் எடுக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். ஆனால் உங்களுக்கு 2500 ரூபாய் கிடைக்கிறது என்றால் உங்களது உணர்வு எப்படியிருக்கும். அப்படி தான் நாக்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது அங்குள்ள ஒரு ஏடிஎம் மையம். 10 ஆண்டுகளில் வேற லெவல் வளர்ச்சியினை எட்டலாம்.. 3 நிறுவனங்களை பட்டியல் போடும் நிபுணர்கள்? நாக்பூரை சேர்ந்த நபர் ஒருவர் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். ரூ.500-க்கு 2500 அங்கு … Read more

விழுப்புரம்: “அமைச்சர் பேரையும் போட்டிருக்கலாமே..!" – மஸ்தானுக்காகப் பேசிய பொன்முடி; என்ன நடந்தது?

விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயில் அருகே செயல்பட்டு வருகிறது தமிழ் மற்றும் கலை, அறிவியல் கல்லூரி. இந்த கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு நேற்றைய தினம் (15.06.2022) பட்டம் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அழைக்கப்பட்டுள்ளார். அதன்படி, நேற்று காலை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பொன்முடி கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். மாணவர்களுக்கு முன் வரிசையில் அமைச்சர் மஸ்தான் விழுப்புரம்: சுவர் விளம்பரங்களில் … Read more

வெளியே தள்ளி அவமானப்படுத்தப்பட்ட தமிழர்! இன்று அவர் கையில் புரளும் பல கோடிகள்

’ராம்ராஜ் காட்டன்’ சர்வதேச அளவுக்கு பிரபலமான பெயர்! கலாச்சார மாற்றத்தில் காணாமல் போய்விடுமோ என்றிருந்த வேட்டியை மீட்டெடுப்பதில் இந்த நிறுவனத்தின் பங்கு அளப்பரியது. ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிறுவனர் பெயர் நாகராஜ்! இந்த நிறுவனம் ரூ 1000 கோடிக்கு மேல் வியாபாரம் பார்க்கிறது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி பக்கத்துல கைக்காட்டி புதூர்னு என்ற சின்ன கிராமம் தான் நாகராஜின் பூர்வீகம். இவர் படித்தது பத்தாம் வகுப்பு தான். ஒரு சமயத்தில் ஊருக்குள்ள ஒருவர் அம்பாசிடர் காரில், வேட்டி, … Read more

அக்னிபத் திட்டத்தில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞர்களுக்கு உறுதியான எதிர்காலம் இல்லை; ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி: அக்னிபத் திட்டத்தில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞர்களுக்கு உறுதியான எதிர்காலம் இல்லை என  ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நாட்டின் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் குரல்களை பிரதமர் மோடி கேட்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

குழந்தையின் கல்விக்காக ரூ.1 கோடி இலக்கு.. எவ்வளவு முதலீடு செய்யணும்.. எதில் முதலீடு செய்யலாம்?

கொரோனாவின் வருகைக்கு பிறகு முதலீட்டின் மீதான ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக மியூச்சுவல் ஃபண்டுகள் மீதான ஆர்வம் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இது குறித்து 30 வயதான ரமேஷ் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளதாகவும், அவருக்கு 15 ஆண்டுகளில் 2 கோடி ரூபாய் கார்ப்பஸினை உருவாக்க வேண்டும் என கூறியுள்ளார். அதில் தனது குழந்தையின் எதிர்கால கல்வி செலவினங்களுக்காக 1 கோடி ரூபாயும், ஓய்வுகாலத்திற்கு 1 கோடி ரூபாய் … Read more

“மிகப்பெரிய பண்பாட்டு பங்களிப்பு இது" – `தமிழ் விக்கி' இணையத்தளத்தை அறிமுகப்படுத்திய கமல்ஹாசன்!

மே 7-ஆம் தேதி அமெரிக்காவில் தொடங்கப்பட்ட `தமிழ் விக்கி’ இணையத்தளம் இலக்கியம், பண்பாடு சார்ந்த கலைக்களஞ்சியமாக உருவாகியுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன் உள்ளிட்ட தமிழின் முக்கியமான பல ஆளுமைகள் இதில் பங்காற்றியுள்ளனர். நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் ஒருங்கிணைப்பாளருமான கமல்ஹாசன் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்தி, இதன் முக்கியத்துவம் குறித்து அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டு இருப்பது… “தமிழிலக்கியம்‌, கலை, பண்பாடு சார்ந்த தகவல்களின்‌ தொகுப்பாக ஜெயமோகன்‌ மற்றும்‌ அவரது நண்பர்கள்‌ இணைந்து உருவாக்கியுள்ள `தமிழ்‌ விக்கி’ இணையக்கலைக்‌ … Read more

ஆறு நேட்டோ நாடுகளில் அத்துமீறி நுழைந்த மர்ம விமானம்: தரையிறங்கியதும் மாயமான விமானி

மர்ம விமானம் ஒன்று நேட்டோ நாடுகளான ஹங்கேரி, ரோமானியா, போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் செர்பியா வான்வெளியில் அத்துமீறியதை அடுத்து பல்கேரியாவில் தரையிறங்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இருவர் மட்டும் பயணப்படும் குறித்த விமானத்தை ஹங்கேரிய மற்றும் ரோமானிய விமானப்படைகள் முதலில் அடையாளம் கண்டதாகவும் தெரிய வந்துள்ளது. ஊடகங்களில் வெளியான தகவலின் அடிப்படையில், மர்ம விமானம் லிதுவேனியாவில் இருந்து புறப்பட்டு பல்கேரியாவின் டார்கோவிஷ்டே என்ற இடத்தில் கைவிடப்பட்ட விமானநிலையத்தில் தரையிறங்கியதாக நம்பப்படுகிறது. இதனிடையே, குறித்த மர்ம விமானத்தை நேட்டோ … Read more

அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

அரக்கோணம்: அரக்கோணம் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் கனமழை பெய்துவருகிறது. மங்கம்மாபேட்டை, ஜோதி நகர், சுவால்பேட்டை, எஸ்.ஆர்.கேட், வெங்கடேசபுரத்தில் கனமழை பெய்துவருகிறது. ஒரு மணி நேரத்துக்கும் மேல் கனமழை கொட்டுவதால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது.