பர்தா தொடர்பான வழக்கு – கூடுதல் அமர்வுக்கு மாற்றி கர்நாடக ஐகோர்ட்டு தனி நீதிபதி உத்தரவு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.   இந்தப் போராட்டத்துக்கு எதிராக, சில மாணவர்கள் காவித்துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஹிஜாப் அணியும் மாணவிகளை வகுப்புக்குள் அனுமதித்தால் காவித்துண்டு அணிந்த எங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று அந்த மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர். … Read more

இரு வேறு சாதிகளை சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோர்களின் விருப்பத்தின் அடிப்படையில் சான்றிதழ் வழங்க உத்தரவு

சென்னை: இரு வேறு சாதிகளை சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோர்களின் விருப்பத்தின் அடிப்படையில் சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பெற்றோர்களின் விருப்பத்தின் அடிப்படையில் தந்தை அல்லது தாயின் சாதியில் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.

இந்திய அணி 237 ரன்| Dinamalar

ஆமதாபாத்: விண்டீசுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் விளாச இந்திய அணி 50 ஓவரில் 237 ரன் எடுத்தது. இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய மோடி மைதானத்தில் நடக்கிறது. இந்திய அணியில் இஷான் கிஷான் நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல் தேர்வானார். விண்டீஸ் ரெகுலர் கேப்டன் போலார்டு காயத்தால் விலகினார். … Read more

அஞ்சலகத்தின் அருமையான திட்டம்.. எஸ்பிஐ-யின் ஆன்லைன் கணக்கில் எப்படி தொடங்குவது..!

பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் பற்றி பலரும் அறிந்திருக்கலாம். ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் அஞ்சலக திட்டங்களில் அதிகம் விரும்பப்படுவது பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தினை தான். பொதுவாகவே அஞ்சலக திட்டங்கள் எனும்போது மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம் என்பதால், மிகவும் நம்பிக்கையான முதலீடுகளாக பார்க்கின்றனர். 3 நாளில் ரூ.6 லட்சம் கோடி இழப்பு.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..! மேலும் சந்தை அபாயம் இல்லாத, கணிசமான நிரந்தர வருமானம் தரக்கூடிய … Read more

ஹிஜாப் விவகாரம்; வழக்கை கூடுதல் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது கர்நாடகா உயர் நீதிமன்றம்!

கர்நாடக மாநிலம் குண்டபுராவில் உள்ள பியூ அரசு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு கல்லூரி நிர்வாகம் தடைவிதித்திருந்தது. அதையடுத்து கல்லூரி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் கல்லூரி முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்திவந்தனர். ஆனால், இந்த போராட்டமானது தற்போது இந்து மாணவ மாணவிகளின் பலத்த எதிர்ப்பின் காரணமாக மதக்கலவரமாக மாறும் அளவிற்கு உருவெடுத்துள்ளது. நேற்று கூட கர்நாடகாவில், கல்லூரிக்கு பர்தா அணிந்து வந்த மாணவியை, இந்து மாணவர்கள் கூட்டமாக நின்று கோஷமிட்டது பெரும் … Read more

பிரான்ஸ் எப்போது கொரோனா பரிசோதனை கட்டுப்பாடுகளை முழுமையாக விலக்கிக்கொள்ளும்?

Omicron வகை மரபணு மாற்றக் கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து பிரான்சில் கொரோனா கட்டுப்பாடுகள் சில அமுலுக்கு வந்தன. இப்போதோ, பிரான்சில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளவர்களில் 98 சதவிகிதம் பேரும் Omicron வகை கொரோனா வைரஸால்தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தினசரி கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை சுமார் 400,000ஆக உள்ள நிலையில், இந்த கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட வாய்ப்புள்ளதா? என்னென்ன விதிகள் அமுலில் உள்ளன? ஆரஞ்சு நாடுகள் பட்டியலில் இருக்கும் நாடுகளிலிருந்து பிரான்சுக்கு வரும் அனைவரும், அவர்கள் கொரோனா தடுப்பூசி … Read more

விவசாய கடன் தள்ளுபடி – இலவச கல்வி – 20லட்சம் பேருக்கு வேலை: உ.பி. மாநில தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பிரியங்கா காந்தி!

லக்னோ: உ.பி. மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி, விவசாய கடன் தள்ளுபடி, எல்கேஜி முதல் கல்லூரி வரை இலவச கல்வி,  20லட்சம் பேருக்கு அரசு வேலை உள்பட பல்வேறு அறிவிப்புகளை அம்மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டார். கட்சியின் தேர்தல் அறிக்கையான “உன்னதி விதான்” இன்று உ.பி.யில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சி தலைவர்கள் முன்னிலையில் பிரியங்கா காந்தி வெளியிட்டார், அப்போது, தேர்தல் அறிக்கையான உன்னதி விதான் என்பதை  அவர் “ஜன் கோஷ்னா பத்ரா” என்று அழைத்தார். 403 … Read more

வேட்பாளர் 20 பேருடன் சென்று வீடு வீடாக பிரசாரம் செய்யலாம்- தேர்தல் கமி‌ஷன் அறிவிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்பாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிகளை மாநில தேர்தல் கமி‌ஷன் மாற்றியமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கூட்டங்கள் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை அனுமதிக்கப்படமாட்டாது. சுவரொட்டிகள், கொடிகள், பதாகைகள், சிலைகள் அல்லது வேறு ஏதேனும் பிரச்சாரப் பொருள்கள், அனுமதிக்கப்படமாட்டாது. மத சார்புடைய சின்னங்கள் பயன்படுத்தியோ, அல்லது சமூகம் மற்றும் சாதி அடிப்படையான உணர்வுகளை பயன்படுத்தியோ வாக்குசேகரிக்க கூடாது. மத அல்லது மொழி அடிப்படையில் பல்வேறு தரப்பினரிடையே வெறுப்புணர்வு அல்லது … Read more

ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் தமிழக அரசின் நடவடிக்கைகளில் தவறில்லை: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை: ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் தமிழக அரசின் நடவடிக்கைகளில் தவறில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆட்சியர் பரிந்துரை செய்யலாம், நிலத்தின் தன்மையை வகைமாற்றம் செய்ய நில நிர்வாக ஆணையருக்கே அதிகாரம் உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ஆக்கிரமிப்புகளை அகற்றும் அரசு இத்தனை ஆண்டுகளாக ஏன் அனுமதித்தது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பெத்தேல் நகர் குடியிருப்போர் நலசங்கம் தொடுத்த வழக்கின் விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஒயின் விற்பனை: அன்னா ஹசாரே போராட்டம்| Dinamalar

மும்பை: மஹாராஷ்டிராவில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் பழரசம் மூலம் தயாரிக்கப்படும் ஒயின் விற்பனை செய்ய அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என அம்மாநில திறன் வளர்ச்சி துறை அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். மஹாராஷ்டிர அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, முடிவை திரும்ப பெறாவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், … Read more