IPL ஏலத்தில் CSKவை கலாய்த்து தள்ளிய டெல்லி அணி: CSKவிற்கு ஆதரவு அளித்த ரசிகர்கள்

நேற்று நடந்த IPL ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாட்டை கிண்டல் செய்யும் விதமாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 2022ம் ஆண்டுக்கான ipl வீரர்கள் மெகா ஏலம் நேற்று பெங்களுருவில் தொடங்கியது. முதல் நாள் நடத்த பட்ட ஏலத்தில் அதிகப்பட்சமாக இஷான் கிஷான் 15.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். அதனை தொடர்ந்து தீபக் சஹார் 14 கோடிக்கு சென்னை அணியால் … Read more

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் வட கடலோர மாவட்டங்கள், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய … Read more

ஹிஜாப் விவகாரம்: பள்ளிகளை சுற்றி 144 தடை உத்தரவு – உடுப்பி மாவட்டத்தில் நாளைமுதல் அமல்

பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெங்களூரில் பள்ளி- கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவு வருகிற 22-ந் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக உடுப்பி மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளிகளை சுற்றி நாளை (14-ந்தேதி) காலை 6 மணி முதல் 19-ந்தேதி மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உடுப்பி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிறப்பித்துள்ளார். இதையொட்டி பள்ளிகளை … Read more

மேற்கு வங்க சட்டப்பேரவையை முடக்கிய அம்மாநில ஆளுநரின் செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

சென்னை: மேற்கு வங்க சட்டப்பேரவையை முடக்கிய அம்மாநில ஆளுநரின் செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேற்குவங்க ஆளுநரின் செயல் விதிமுறைகள், மரபுகளுக்கு எதிரானது என முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இல்லதரசிகளுக்கு சூப்பர் நியூஸ்.. இனி சமையல் எண்ணெய் விலை குறையலாம்..!

மத்திய அரசு கச்சா பாமாயில் எண்ணெய் மீதான இறக்குமதி வரியானது 8.25%ல் இருந்து, 5.5% ஆக குறைத்துள்ளது. தொடர்ந்து சமையல் எண்ணெய் விலையானது அதிகமாக இருந்து வரும் நிலையில், அரசின் இந்த நடவடிக்கை காரணமாக விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் சுத்திகரிப்பட்ட பாமாயில் எண்ணெய் விலையானது உச்சத்திலேயோ இருந்து வரும் நிலையில், இந்தியாவில் உள்நாட்டில் பாமாயில் விலையானது தொடர்ந்து அதிகமாக இருந்து வருகின்றது. 15 ஆண்டுகளுக்கு இப்படித் தான்.. விலை உயர்ந்த எண்ணெய் வாங்க … Read more

தந்தை வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத ஷில்பா ஷெட்டி; நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்!

நடிகை ஷில்பா ஷெட்டியின் தந்தை சுரேந்திரா கடந்த 2015-ம் ஆண்டு ஆட்டோமொபைல் ஏஜென்சி உரிமையாளர் பர்ஹத் அம்ரா என்பவரிடம் ரூ.21 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அந்தக் கடனை 2017-ம் ஆண்டு 18 சதவிகித வட்டியுடன் திரும்ப கொடுப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது ஷில்பா ஷெட்டியின் தந்தை இறந்துவிட்டார். இதனால் கடன் திரும்ப கொடுக்கப்படாமல் இருக்கிறது. கடன் தொடுத்த தொழிலதிபர் கடனை திரும்ப கொடுக்கும்படி ஷில்பா ஷெட்டி மற்றும் அவர் தாயாரிடம் கேட்டார். ஆனால், அவர்கள் கொடுக்க முன் வரவில்லை. … Read more

49 வயதில் 3வது திருமணம்.. தன்னை விட 31 வயது இளைய பெண்ணை மணந்த பிரபலம்.. வைரல் புகைப்படம்

பாகிஸ்தானில் அரசியல் பிரபலம் ஒருவர் தன்னை விட 31 வயது குறைவான பெண்ணை 3வது திருமணம் செய்து கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது. பாகிஸ்தானின் பிரபல கட்சியின் தலைவராக இருப்பவர் ஆமிர் லியாகத்(49). இவருக்கு ஏற்கனவே திருமண ஆன நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு 2வது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை 2வது மனைவியையும் விவாகரத்து பெற்றதாக ஆமிர் லியாகத் அறிவித்தார். இதையடுத்து உடனடியாக, … Read more

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் பாதிப்பு 45000க்கு குறைவு – 14.15 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 14,15,279 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 44,877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44,877 பேர் அதிகரித்து மொத்தம் 4,26,31,421 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  மரணமடைந்தோர் எண்ணிக்கை 684 அதிகரித்து மொத்தம் 5,08,665 பேர் உயிர் இழந்துள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 1,17,591 பேர் குணமடைந்து இதுவரை 4,15,85,711 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 5,37,045 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று இந்தியாவில் 49,16,801 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு … Read more

ஒரே நாடு… ஒரே ரேசன் கார்டு… என்பவர்கள் ஒரே குளம்… ஒரே சுடுகாடு… கொண்டு வாருங்கள்: சீமான்

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சி உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான பிரசாரத்தில் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.  தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்கள் சந்தித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:- தேர்தலுக்கு என்று தமிழக மாநிலத்திற்கு எவ்வளவு நீதி ஒதுக்குகிறீர்கள். தமிழக பாராளுமன்ற தேர்தலுக்கு, கர்நாடாக சட்டசபை தேர்தலுக்கு எவ்வளவு நிதி ஓதுக்கிறீர்களோ அதே … Read more

சென்னையில் மீண்டும் தலை தூக்கியது ஆன்லைன் லோன் ஆப் மோசடி: மக்களே உஷார்..!

சென்னை: சென்னையில் மீண்டும் ஆன்லைன் லோன்  ஆப் மோசடி தலை துக்க தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு லோன் ஆப் மூலம் பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்ட சீன நாட்டினர் 2 பேர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தற்போது சென்னை மாநகர காவால்த்துறையில் இருந்து மாற்றப்பட்டு  சி.பி.சி.டி விசரணையில் உள்ளது. விரைவில் இந்த வழக்கு அமலாக்கத்துறைக்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் அதே லோன் ஆப் மோசடி தொடர்பாக சென்னை சைபர் கிரைம் … Read more