மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப தயாராகும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் – ஆடியோ

மாநிலங்களில் மத்திய அரசின் ஏஜெண்டுகளாக உள்ள ஆளுநர்களை வைத்து, ஆட்டம் காண்பிக்கும் மோடி அரசை விரட்டியடிக்கும் மக்கள் விரோத மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆளும் முதல்வர்கள் ஒன்று திரள்கிறார்கள். இதை ஓவியர் பாரியின் கார்டூன் விமர்சித்துள்ளது. https://patrikai.com/wp-content/uploads/2022/02/Pari-cartoon-Audio-2022-02-16-at-10.21.04-AM.ogg

பிளாஸ்டிக் தண்ணீர் கேனில் சிக்கிய தலையுடன் மாயமான சிறுத்தை: 2 நாட்களுக்கு பின் பிடிபட்டது

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் பத்லாபூர் கிராமம் அருகே பிளாஸ்டிக் தண்ணீர் கேனில் தலை சிக்கிய நிலையில் சிறுத்தை ஒன்று இருந்துள்ளது. அந்த கேனில் இருந்து சிக்கிய தலையை எடுக்க தீவிர முயற்சி செய்துக் கொண்டிருந்தது. இதனை அவ்வழியாக சென்ற நபர் ஒருவர், வீடியோ எடுத்து வனத்துறைக்கு அனுப்பி தகவல் தெரிவித்தார். இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சோதனையிட்டனர். ஆனால் அதற்குள் சிறுத்தை காட்டிற்குள் சென்றுவிட்டுள்ளது. இந்த சிறுத்தையை மீட்க சஞ்சய் காந்தி தேசிய … Read more

பெரம்பலூர் அருகே பட்டியலின சிறுவர்களை மலம் அல்ல வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே பட்டியலின சிறுவர்களை மலம் அல்ல வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் 3 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அபினேஷ்(22), சிலம்பரசன்(27), செல்வகுமார்(25) ஆகியோருக்கு தல ரூ.1000 அபராதமும் விதித்து பெரம்பலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கர்நாடகத்தில் ஒரு வாரத்திற்கு பிறகு கல்லூரிகள் இன்று திறப்பு

பெங்களூரு,  ஹிஜாப் விவகாரத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து உயர்நிலை பள்ளிகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன.  இந்த நிலையில் ஒரு வார விடுமுறைக்கு பிறகு பி.யூ.சி. உள்பட டிகிரி கல்லூரிகள் இன்று(புதன்கிழமை) திறக்கப்படுகின்றன. இதையடுத்து மாவட்ட கலெக்டர்கள் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோருடன் அமைதி-நல்லிணக்க கூட்டத்தை நடத்தியுள்ளனர்.  அதில் கலெக்டர்கள், கல்லூரிகளில் அமைதியை நிலைநாட்ட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். மேலும் … Read more

ரஷ்யா சொன்ன 2வது குட் நியூஸ்.. உக்ரைன் நம்மதி.. பங்குச்சந்தை உயர்வு..!

உலக நாடுகளைப் பயமுறுத்தி வந்த ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை நாளுக்கு நாள் பெரிய அளவில் வெடித்த நிலையில், அமெரிக்கா- ரஷ்யா மத்தியில் இருக்கும் நட்புறவில் பெரிய அளவிலான விரிசல் ஏற்பட்டு இருக்கும் வேளையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மேகத்திய நாடுகள் உடன் பேச்சுவார்த்தைக்குத் தயாரானார். 2 நாளில் ரூ.12 லட்சம் கோடி காலி.. பாதாளம் நோக்கி சென்ற சென்செக்ஸ்.. இன்று நிலவரம் என்ன? விளாடிமிர் புதின் தலைமையிலான ரஷ்யா, சீனா மற்றும் பல நாடுகள் … Read more

உள்ளாட்சி ரேஸ்: அதிர வைக்கும் நேரு பாலிட்டிக்ஸ்; சுணக்கத்தில் அதிமுக! -திருச்சி மாநகர் யாருக்கு?

திருச்சி மாநகராட்சி தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகராகவே அவ்வப்போது பேசப்படும் திருச்சி மாநகரம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஆரவாரமாகச் சந்தித்து வருகிறது. மலைக்கோட்டை மாநகரின் தலைமைப் பதவியைப் பிடிப்பதற்காகக் கட்சிகளிடையே பிரசார யுத்தங்கள் நடந்து வருகின்றன. கே.என்.நேரு, அன்பில் மகேஷ் திமுக  ‘திருப்பு முனையை ஏற்படுத்தும் திருச்சி’ என்கிற சென்டிமென்ட்டில் தீர்க்கமாக இருக்கிறது தி.மு.க. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வை ஒன்பது தொகுதிகளிலும் ‘வாஷ் அவுட்’ செய்து திருச்சியை தங்களது கோட்டையாக மாற்றிக் காட்டினார் அமைச்சர் கே.என்.நேரு. அதே … Read more

தனுஷுடன் வாழ விருப்பமா? விவாகரத்துக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொடுத்த முதல் பேட்டி

விவகாரத்துக்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் என்றும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய போவதாக அண்மையில் தனுஷ் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்வு; வெளியூர்க்காரர்கள் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் நாளை  நிறைவடைந்ததும் வெளியூர் நபர்கள் வெளியேற வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சேர்ந்த  12,838 வார்டுகளுக்கு, பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வகையில் 19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி … Read more

மனசாட்சி உள்ள எவரேனும் மதுரையை ஸ்மார்ட் சிட்டி என்றழைக்க முடியுமா? கமல்ஹாசன் டுவிட்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- மதுரை மாநகராட்சியின் ஆண்டு வருவாய் சுமார் ரூ.586 கோடி. ஆனால், அதற்குரிய நியாயமான வளர்ச்சிப்பணிகள் நிகழவே இல்லை. குடிநீர்ப் பிரச்னை, பாதாள சாக்கடைப் பிரச்னை, போக்குவரத்து நெரிசல், எங்கு பார்த்தாலும் குப்பை கூளங்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள். போர்க்களம் போலிருக்கிறது மதுரை. மனசாட்சி உள்ள எவரேனும் மதுரையை ‘ஸ்மார்ட் சிட்டி’ என்றழைக்க முடியுமா? பண்பாட்டுப் பெருமிதம் மிக்க நகரத்தைக் கழக ஆட்சிகள் … Read more

வாக்கு எண்ணிக்கையை எங்கு நடத்துவது என மாநில தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும் : ஐகோர்ட் கருத்து

சென்னை : வாக்கு எண்ணிக்கையை எங்கு நடத்துவது என மாநில தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும் என்று ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. சோளிங்கரில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கக் கோரி அமமுக வேட்பாளர் சீனிவாசன் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் நீதிபதிகள் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.கடைசி நேரத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.