ஹைட்ராலிக் கோளாறால் திருவனந்தபுரத்தில் தரையிறங்கிய இங்கிலாந்து போர் விமானம் தாயகம் புறப்பட்டது

திருவனந்தபுரம்: இங்கிலாந்து நாட்டுக்குச் சொந்தமான எப்-35பி போர் விமானம் ஹைட்ராலிக் கோளாறு காரணமாக கடந்த ஜூன் 14-ம் தேதி திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து அதனை சரிசெய்ய இங்கிலாந்து ராயல் விமானப் படையைச் சேர்ந்த 25 பொறியாளர் சிறப்பு உபகரணங்களுடன் அட்லஸ் விமானத்தில் கிளம்பி திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு பிரிட்டிஷ் விமானத்தின் ஹைட்ராலிக் குறைபாடு பொறியாளர்களால் நிவர்த்தி செய்யப்பட்டது. இதையடுத்து, 37 நாட்கள் திருவனந்தபுரம் விமான … Read more

உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல்: அமெரிக்கா, இங்கிலாந்தை விட இந்தியா முன்னிலை

புதுடெல்லி: நம்பியோ தரவுத் தளம் வெளியிட்டுள்ள உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளை விட இந்தியா முன்னிலையில் உள்ளது. நம்பியோ தரவுத் தளம் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பாதுகாப்பான நாடுகள் பட்டியலை வெளியிடுகிறது. நம்பியோ பாதுகாப்பு குறியீட்டின்படி (Numbeo Safety Index) 2025-ம் ஆண்டில் உலகின் பாதுகாப்பான நாடாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையில் பைரனீஸ் மலையில் அமைந்துள்ள ஒரு சிறிய ஐரோப்பிய நாடான அன்டோரா உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், … Read more

பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

புதுடெல்லி: பிஹாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தின் மகர் துவார் என்ற பகுதியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 2ம் நாளான இன்று, வழக்கம்போல் இரு அவைகளும் காலை 11 மணிக்குக் கூடின. அப்போது, இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர், இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தின் பின்னணி பற்றியும் இந்திய … Read more

இஸ்ரோ – நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோள் 30-ல் விண்ணில் பாய்கிறது!

சென்னை: புவி கண்காணிப்புக்காக நாசாவுடன் இணைந்து உருவாக்கிய அதிநவீன நிசார் செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாக இஸ்ரோ ஜூலை 30-ம் தேதி விண்ணில் செலுத்துகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) இணைந்து புவியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காக நிசார் (NASA-ISRO Synthetic Aperture Radar) என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடிவு செய்தன. இதற்கான ஒப்பந்தம் 2014 செப்டம்பர் 30-ல் கையெழுத்தானது. அதன்பின்னர் இரு நாடுகளின் விஞ்ஞானிகள் … Read more

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 12 பேர் விடுவிப்பு: ஜூலை 24-ல் மேல்முறையீட்டு மனு விசாரணை

புதுடெல்லி: 2006 ஆம் ஆண்டு நடந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற 12 பேரையும் விடுவித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வரும் ஜூலை 24 ஆம் தேதி இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்க ஒப்புக்கொண்டது. … Read more

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினாமா ஏற்பு

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பிய அவர், அதன் நகலை குடியரசு துணைத் தலைவருக்கான எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். இதையடுத்து, இன்று அவர் மாநிலங்களவைக்கு வருகை தரவில்லை. அவருக்குப் பதில், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அவையை நடத்தினார். … Read more

போயிங் விமானங்களின் எரிபொருள் சுவிட்ச்களில் எந்த பிரச்சினையும் இல்லை: ஏர் இந்தியா விளக்கம்

புதுடெல்லி: போயிங் 787 மற்றும் போயிங் 737 வகை விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் (FCS) இயங்கும் செயல்பாடுகளில் எந்தப் பிரச்சினையும் இல்லை என ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானம், மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேரும், விடுதியில் இருந்த 19 பேர் உட்பட 260 பேர் உயிரிழந்தனர். … Read more

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தால் வெற்றி யாருக்கு? – பாஜக+ Vs எதிர்க்கட்சிகள் பலம்

புதுடெல்லி: ஜெகதீப் தன்கரின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தால் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் பலம் குறித்த விரைவுப் பார்வை இது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதிய பெரும்பான்மை உள்ளதால், தற்போது குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடந்தால் பாஜக வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தற்போது பாஜகவுக்கு மக்களவையில் 240 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 99 … Read more

ஜெகதீப் தன்கர் ராஜினாமாவை அடுத்து மாநிலங்களவையை வழிநடத்தும் ஹரிவன்ஷின் பின்புலம் என்ன?

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததை அடுத்து, மாநிலங்களவையை நடத்தும் பொறுப்பை அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஏற்றுள்ளார். குடியரசு துணைத் தலைவராக இருப்பவரே மாநிலங்களவையின் தலைவராக (சேர்மன்) இருந்து அவையை நடத்துவது மரபு. அவர் அவையில் இல்லாத தருணங்களில் அவையை துணைத் தலைவர் நடத்துவார். தற்போது மாநிலங்களவையின் துணைத் தலைவராக ஹரிவன்ஷ் உள்ளார். பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஹரிவன்ஷ், ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்து அக்கட்சியின் மூலம் 2014ம் ஆண்டு … Read more

திருவனந்தபுரத்தில் பழுதாகி நின்ற பிரிட்டிஷ் போர் விமானம்: ஒருமாதத்துக்கு பின் புறப்பட்டது!

திருவனந்தபுரம்: ஜூன் 14 முதல் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பழுதாகி நின்ற பிரிட்டிஷ் விமானப்படையின் எப்-35 ரக போர் விமானம், பழுது நீக்கப்பட்டு இன்று (ஜூலை 22) அங்கிருந்து புறப்பட்டது. பிரிட்டிஷ் விமானப்படைக்கு சொந்தமான லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தயாரித்த 5ஆம் தலைமுறை ஸ்டெல்த் விமானமான எப்- 35 ரக போர் விமானம், ஜூன் 14 ஆம் தேதி அன்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் எரிபொருள் குறைவாக இருந்ததால் அவசரமாக தரையிறங்கியது. அதன்பின்னர் இந்த விமானத்தில் … Read more