மேற்கு வங்கத்துக்கு ஆளுநராக ஐஏஎஸ் அதிகாரி நியமனம்

புதுடெல்லி: மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக ஐஏஎஸ் அதிகாரி சி.வி.ஆனந்தா போஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர், துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, மணிப்பூர் ஆளுநராக உள்ள இல.கணேசனுக்கு, மேற்கு வங்க மாநிலம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் புதிய ஆளுநராக, ஐஏஎஸ் அதிகாரியான சி.வி.ஆனந்தா போஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி நேற்று பிறப்பித்தார். கலெக்டர், முதன்மை செயலாளர், கூடுதல் தலைமை செயலாளராக போஸ் … Read more

காசி தமிழ்ச் சங்கமம் பிரதமர் நாளை தொடங்கிவைக்கிறார் – இளையராஜா இன்னிசையுடன் பிரம்மாண்ட நிகழ்ச்சி

புதுடெல்லி: வாரணாசியில் நாளை காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவைக் கிறார். இளையராஜா இன்னிசையுடன் பிரம்மாண்டமான முறையில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சி நேற்று ஆரம்பமானது. பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ் மாதமான கார்த்திகை முழுவதும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரதமர் மோடி இந்நிகழ்ச்சியை நாளை (நவ. 19) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கிறார். இதில், இசையமைப்பாளர் … Read more

காசி தமிழ் சங்கமம் விழா உபி.யில் நாளை துவக்கம்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

வாரணாசி: உத்தரப் பிரதேசத்தில் ஒரு மாதம் நடைபெறும் காசி-  தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். நாட்டின் 75வது சுதந்திர தினத்தை ஒன்றிய அரசு கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உத்தர பிரதேசத்தில் உள்ள காசியில் ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. காசிக்கும் (வாரணாசி) தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள தொன்மையான நாகரீக தொடர்பை மீண்டும் புதுப்பிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. அடுத்த மாதம் 17ம் தேதி வரை … Read more

சபரிமலையில் குவியும் பக்தர்கள் இளம்பெண்களுக்கு அனுமதியா?.. போலீசுக்கு வழங்கிய புத்தகத்தால் சர்ச்சை

திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் குவிந்து வரும் நிலையில், போலீசுக்கு வழங்கப்பட்ட கைப்புத்தகத்தில் உள்ள வாசகத்தால் மீண்டும் இளம்பெண்களுக்கு அனுமதியா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மண்டல கால பூஜைகளுக்காக இந்த வருடம் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கார்த்திகை 1ம் தேதியான நேற்று முதல் சபரிமலையில் மண்டல கால பூஜைகள் தொடங்கியது. அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி சபரிமலை … Read more

மெட்டா இந்தியா புதிய தலைவர் சந்தியா தேவநாதன்

புதுடெல்லி: பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் இந்திய தலைவராக சந்தியா தேவநாதன் நியமிக்கப்பட்டு உள்ளார். பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவின் இந்திய தலைவராக அஜித் மோகன் இருந்தார். 2 வாரங்களுக்கு முன் பதவியை ராஜினாமா செய்த அவர்,  போட்டி நிறுவனமான ஸ்நாப்பில் இணைந்தார். இதைத் தொடர்ந்து, மெட்டா இந்தியாவின் புதிய தலைவராக, சந்தியா தேவநாதன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.  தற்போது,  மெட்டாவின் இயக்குனரும், பேஸ்புக் இந்தியாவின் கூட்டு நிறுவனத்தின் தலைவருமான மணீஷ் … Read more

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜஸ்தானுக்கு மாற்றம்: கொலிஜியம் பரிந்துரை

புதுடெல்லி: சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, ராஜஸ்தான் உயர் நீதிமனற  தலைமை நீதிபதியாக நியமிக்க, கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.  உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இருந்தபோது, அவர் தலைமையில் கடந்த மாதம் கொலிஜியம் கூட்டம் நடைபெற்றது. அதில், சென்னை, கர்நாடகா உட்பட 6 மாநில உயர் நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முரளிதரை தலைமை நீதிபதியாக நியமிக்க … Read more

ஆந்திர மாநிலத்தில் ஆட்சியை பிடிக்காவிட்டால் அரசியலை விட்டு விலகுவேன்: சந்திரபாபு நாயுடு அதிரடி அறிவிப்பு

திருமலை: ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்காவிட்டால் அரசியலை விட்டு விலகுவேன் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்து உள்ளார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு, கர்னூல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். பட்டிகொண்டாவில் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: அரசியலில் நான் மூத்த தலைவர். எனது 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் யாரும் என்னை அவமதிக்க துணியவில்லை. ஆனால், முதல்வர் ஜெகன் மோகன் ஆட்சிக்கு வந்ததும் சட்டசபைக்கு … Read more

இந்திரா காந்தி பிறந்தநாள் ராகுல் யாத்திரையில் நாளை பெண்கள் மட்டுமே பங்கேற்பு: காங். அறிவிப்பு

அகோலா: இந்திரா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, நாளை நடைபெறும் ராகுல் காந்தியின் நடை பயணத்தில் பெண்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடை பயணத்தை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் தொடங்கிய இந்த பயணம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா வழியாக தற்போது மகாராஷ்டிரா சென்றுள்ளது. அம்மாநிலத்தில் நடை பயணம் மேற்கொண்டுள்ள ராகுலுடன், உத்தவ் தாக்கரேவின் மகன் … Read more

பண மோசடி வழக்கு அமைச்சர் சத்யேந்தர் ஜாமீன் மனு தள்ளுபடி

புதுடெல்லி: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2017 ம் ஆண்டு சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 10 பேர் மீது அமலாக்கத்துறை சட்ட விரோத பணபறிமாற்றம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், வைபவ் … Read more

அடுத்த தேர்தலில் ஆட்சியமைக்காவிட்டால் அதுவே தனது கடைசி தேர்தல் – சந்திரபாபு நாயுடு உருக்கம்..!

2024ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியமைக்காவிட்டால் அதுவே தனது கடைசி தேர்தலாக இருக்கும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். கர்னூல் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது வயோதிகத்தை பலர் விமர்சிப்பதாகவும், 72 வயதிலும் பிரதமர் மோடியைப் போல் தானும் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தார். Source link