உ.பி தேர்தல் : 3ம் கட்டத்தில் போட்டியிடும் 245 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள், 135 வேட்பாளர்கள் குற்றப்பின்னணி உடையவர்கள் – தேர்தல் ஆய்வுக்குழு <!– உ.பி தேர்தல் : 3ம் கட்டத்தில் போட்டியிடும் 245 வேட்பாளர்க… –>

உத்திர பிரதேசத்தின் மூன்றாம் கட்ட சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுள் 245 பேர் கோடீஸ்வரர்கள் என தெரியவந்துள்ளது. உ.பி சட்டமன்றத் தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படுகிறது. இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்திருக்கும் நிலையில், வரும் 20ம் தேதி 59 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில், 627 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் 245 வேட்பாளர்களுக்கு … Read more

தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னாவுக்கு, பாரதிய ஜனதா நிர்வாகி நடத்தும் தொண்டு நிறுவனத்தில் வேலை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்த பார்சலில் தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, கேரள தகவல் தொழில் நுட்ப துறையில் பணிபுரிந்த பெண் அதிகாரி ஸ்வப்னாவை கைது செய்தனர். இவருடன் தொடர்பில் இருந்ததாக எழுந்த புகாரின் பேரில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரும் கைதானார். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கில் சிக்கியதால் ஸ்வப்னா வேலையில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் பணிக்காலத்தில் அவருக்கு … Read more

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து பெண் போலீசின் பல்லை உடைத்த தமிழ் நடிகை காவ்யா தாப்பர் கைது

மும்பை:மும்பையை சேர்ந்த நடிகை காவ்யா தாப்பர் (26), தமிழ், இந்தி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் சரண் இயக்கிய மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். என்ற தமிழ் படத்தில் வாணி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். நேற்று அதிகாலை 1 மணிக்கு நடிகை காவ்யா ஜூகுவில் மது அருந்திவிட்டு காரை ஓட்டிச் சென்றார். ஜே.டபிள்யூ மாரியாட் ஓட்டல் அருகில் வரும் போது இவரது கார் கட்டுப்பாட்டை இழந்தது. தாறுமாறாக ஓடிய கார், சாலை ஓரம் … Read more

'புதிய அணை கட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது' – கேரள ஆளுநரின் உரைக்கு தமிழக அரசு கண்டனம்

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில், புதிய அணை கட்டப்படும் என கேரள ஆளுநர் உரையில் தெரிவித்ததற்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கேரள சட்டப் பேரவையின் நடப்பாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதையொட்டி சட்டப்பேரவையில் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் உரையாற்றினார். அப்போது, “கேரள மக்களின் பாதுகாப்பு தான் மிகவும் முக்கியம் என்பது மாநில அரசின் பெரும் கவலையாகும். இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணையில் இருந்து, அண்டை மாநிலமான தமிழகத்திற்கு தேவையான … Read more

'அரசின் நிலைப்பாட்டை மக்கள் கேட்கட்டும்' – ஹிஜாப் விசாரணை நேரலையை நிறுத்த மறுத்த நீதிமன்றம்

பெங்களூரு: ஹிஜாப் தொடர்பான வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற விசாரணையை கடந்த 5 நாட்களாக ஒரு லட்சத்தில் இருந்து 5 லட்சம் பேர் வரை நேரலையில் பார்த்து வரும் நிலையில் நேரலையை நிறுத்த நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு விதித்த தடையை எதிர்த்து உடுப்பி முஸ்லிம் மாணவிகள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவ்வழக்கு 6-வது நாளாக இன்று தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் … Read more

ஆளுநரை திரும்ப பெற வேண்டும்: மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

மேற்கு வங்க மாநிலத்தில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு ஆளுநராக ஜக்தீப் தன்கர் பொறுப்பேற்றது முதல், அவருக்கும், முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது. இதனிடையே, அரசியலமைப்பு சட்டத்தின், 174ஆவது பிரிவு வாயிலாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையை, பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் முடக்கி வைத்து அம்மாநில ஜக்தீப் தன்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார். எதிர்வரவுள்ள சட்டசபை கூட்டத்தொடரில் … Read more

தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்து ; 4 பேர் பலி <!– தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி… –>

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து பழுதாகி நின்றிருந்த லாரின் பின்பக்கத்தில் வேகமாக மோதியதில், காரில் பயணித்த குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுவாதி என்பவர் தனது கணவர், குழந்தை மற்றும் சகோதரனுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுவிட்டு வேலூரில் உள்ள தங்க கோவிலுக்கு டாடா போல்ட் காரில் சென்று கொண்டிருந்தார். காரை காதர் பாஷா என்பவர் … Read more

மேற்கு வங்க ஸ்டீல் ஆலையில் தீ விபத்து: 3 தொழிலாளர்கள் பலி- 44 பேர் படுகாயம்

மேற்கு வங்கம் துர்காபூரில் பெரிய ஸ்டீல் ஆலை உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணிப்புரிந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று மதியம் 2 மணியளவில் மோட்டார் ஸ்பிரிட் தர பிரிவில் தொழிலாளர்கள் வேலை செய்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஆக்சிஜன் வேக்யூம் யூனிட்டில் இருந்து திடீரென தீ பிடித்தது. இதில் சிக்கி 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 44 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் தீயை உடனடியாக அணைக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும், … Read more

உத்தரபிரதேச தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது நீண்ட நாட்களுக்கு பிறகு பிரசாரத்தில் இறங்கிய முலாயம்சிங்

லக்னோ: உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் நீண்ட நாட்களுக்கு பிறகு பிரசார களத்தில் முலாயம் சிங், நேற்று தனது மகனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இங்கு 403 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. ஆளும் பாஜவுக்கும், சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகளும் களத்தில் உள்ளன. … Read more

நெருங்கும் பஞ்சாப் தேர்தல் – சீக்கிய தலைவர்களுக்கு மோடி விருந்து

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், சீக்கிய தலைவர்களை தனது இல்லத்துக்கு அழைத்து பிரதமர் நரேந்திர மோடி விருந்து அளித்தார். பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ், அகாலி தளம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து பாஜக இந்த தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில், முக்கிய சீக்கிய தலைவர்களை தனது இல்லத்திற்கு இன்று அழைத்து பிரதமர் மோடி விருந்தளித்தார். டெல்லி குருத்வாரா கமிட்டி … Read more