ஐ.ஏ.எஸ். அதிகாரியுடனான தொடர்பு குறித்து ஸ்வப்னாவிடம் இன்று விசாரணை

திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த 2019-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் 30 கிலோ கடத்தல் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக சுங்கதுறை அதிகாரிகள் வழக்குபதிவு செய்து தூதரக முன்னாள் அதிகாரி உள்பட சிலரை கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஸ்வப்னா என்பவரும் கைதானார்.
இவருக்கும் கேரள அரசின் மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி சிவசங்கரனுக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
ஜெயிலில் இருந்து விடுதலையான சிவசங்கரனுக்கு மீண்டும் கேரள அரசு பணி வழங்கியது. இந்த நிலையில் சிவசங்கரன் சமீபத்தில் ஒரு புத்தகம் எழுதினார். அதில் அவரது சுயசரிதை குறித்தும் எழுதி இருந்தார்.
இந்த புத்தகத்தில் எழுதப்பட்ட தகவல்கள் சமீபத்தில் வெளியானது. அதில் ஸ்வப்னா குறித்து பல தகவல்களை ஐ.ஏ.எஸ்.அதிகாரி சிவசங்கரன் தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்வப்னாவும் பல கருத்துக்களை தெரிவித்தார். அதில் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சிவசங்கரனுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், அவருடன் பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்று வந்ததாகவும் கூறியிருந்தார்.
இதையடுத்து ஸ்வப்னாவிடம் விசாரிக்க அமலாக்கதுறை முடிவு செய்தது. எனவே ஸ்வப்னாவை இன்று அமலாக்கதுறையின் அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.
அவரிடம் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சிவசங்கரனுடன் உள்ள தொடர்பு மற்றும் தங்க கடத்தல் குறித்து விசாரிக்கப்படும் என தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.