உ.பி. பல்கலை.யில் போலி சான்றிதழ் வழக்கில் 11 பேர் கைது: 5 புலனாய்வு அமைப்புகள் விசாரணை

உத்தர பிரதேசத்தின் மேற்கு பகுதியிலுள்ள ஹாபூரில் தனியாருக்கு சொந்தமான மோனாட் பல்கலைக்கழகம் உள்ளது. இதில் பொறியியல், அறிவியல், மருத்துவம் மற்றும் சட்டம் ஆகிய துறைகளில் பட்டம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் உள்ளன. சுமார் 6,000 மாணவர்கள் பயிலும் இந்த பல்கலைக்கழகத்தில் போலி சான்றிதழ்கள் விநியோகிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து மாநில சிறப்பு அதிரடிப் படை (எஸ்டிஎப்)கடந்த வாரம் திடீர் சோதனை நடத்தியது. இதில் சுமார் 1,421 போலி சான்றிதழ்கள் கிடைத்தன. இந்த வழக்கில் பல்கலையின் தலைவர் … Read more

இந்திய விமானப் படையின் பெண் பைலட்கள் முக்கிய பங்காற்றினர்: சிந்தூர் நடவடிக்கை தொடர்பான 5 புதிய தகவல்கள் வெளியீடு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய விமானப்படையின் பெண் பைலட்கள் தீவிர பங்களிப்பை அளித்தனர் என்பது உட்பட 5 புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடவடிக்கைக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதில் 5 புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அவற்றின் விவரம்: 1. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பதன்கோட் மற்றும் சூரத்கர் பகுதியில் முகாமிட்டிருந்த வான் பாதுகாப்பு படைப்பிரிவில் முதல் முறையாக இரண்டு பெண் கர்னல்கள் இடம் பெற்று பாகிஸ்தானின் … Read more

‘பூஞ்ச் மக்களின் பிரச்சினைகளை தேசிய அளவில் எழுப்புவேன்’ – ராகுல் காந்தி உறுதி

ஸ்ரீநகர்: “பூஞ்ச் மக்கள் இரண்டு மூன்று முக்கியமான விஷயங்களை என்னிடம் தெரிவித்துள்ளனர். அவைகளை தேசிய அளவில் எழுப்புவேன்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்த மாதத்தின் தொடக்கத்தில் பாகிஸ்தானின் எல்லை தாண்டிய குண்டுவீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) நேரில் சென்று சந்தித்தார். காலையில் விமானம் மூலம் ஜம்மு காஷ்மீர் சென்ற ராகுல் காந்தி அங்கிருந்து பூஞ்ச் சென்றார். அங்கு கிறிஸ்ட் பள்ளிக்குச் சென்ற … Read more

“பெண்களின் திறமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” – நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி கருத்து

மத்திய அரசும் மாநில அரசுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நாம் ஓரணியாக செயல்பட்டால் எந்தவொரு லட்சியத்தையும் எளிதாக எட்ட முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். திட்டக் குழுவுக்கு மாற்றாக கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரியில் நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது. மத்திய அரசின் நிதி சார்ந்த கொள்கைகள், தொலைநோக்கு திட்டங்களை இந்த அமைப்பு வரையறுக்கிறது. இதன் தலைவராக பிரதமர் பதவி வகிக்கிறார். மத்திய அரசால் நியமிக்கப்படும் பொருளாதார நிபுணர், துணைத் தலைவராக செயல்படுவார். உலக வங்கியில் … Read more

வேற்று மத ஊழியர்கள் 29 பேருக்கு கட்டாய ஓய்வு: திருப்பதி தேவஸ்தான அதிகாரி தகவல்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் வேற்றுமத ஊழியர்கள் 29 பேருக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் தெரிவித்தார். திருமலையில் ‘டயல் யுவர் இஓ’ எனும் நிகழ்ச்சியில் 35 பக்தர்களிடம் தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் நேற்று குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின் பேரில் திருமலையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செயல்படுத்தப்படுகிறது. வாட்ஸ்-அப் சேவை, ஸ்கேன் மூலம் உண்டியல் காணிக்கை செலுத்துதல் … Read more

தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா போரிடுகிறது: எம்பிக்கள் குழு தலைவர் சசி தரூர் உறுதி

தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா தீரமாக போரிட்டு வருகிறது என்று எம்பிக்கள் குழு தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து உலக நாடுகளிடம் எடுத்துரைக்க 7 எம்பிக்கள் குழுக்களை மத்திய அரசு நியமித்து உள்ளது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தலைமையிலான குழுவில் தேஜஸ்வி சூர்யா, சுஷாங்க் மணி திரிபாதி, சாம்பவி சவுத்ரி, பாலயோகி, மிலிந்த் தியோரா, ஷர்பாஸ் அகமது ஆகிய எம்பிக்கள் இடம் பெற்றுள்ளனர். இந்திய வெளியுறவுத் துறை … Read more

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறியது பாகிஸ்தான் தான்: ஐ.நா.வில் இந்தியா ஆணித்தரமாக வாதம்

ஸ்லோவேனியா: மூன்று போர்களையும், ஆயிரக்கணக்கான பயங்கரவாத தாக்குதல்களையும் இந்தியா மீது நடத்தியதன் மூலம் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் உணர்வை பாகிஸ்தான் மீறியுள்ளது என்று ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் கூறினார். ஸ்லோவேனியாவில் ‘ஆயுத மோதலில் தண்ணீரைப் பாதுகாத்தல் – பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் நடந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் ஆற்றிய உரையில், “ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று … Read more

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குஜராத் இளைஞர் கைது: கடற்படை, பிஎஸ்எப் ரகசியங்களை பகிர்ந்தது கண்டுபிடிப்பு

புது டெல்லி: இந்திய கடற்படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை தொடர்பான முக்கிய தகவல்களை பாகிஸ்தான் முகவருடன் பகிர்ந்து கொண்ட குற்றச்சாட்டில் குஜராத் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்ச் பகுதியைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர் சஹ்தேவ் சிங் கோஹில் (28), 2023 ஆம் ஆண்டு வாட்ஸ்அப் மூலம் தன்னை அதிதி பரத்வாஜ் என்று சொல்லிக்கொண்ட ஒரு பாகிஸ்தான் முகவருடன் அறிமுகமானார். இதனையடுத்து கோஹில், புதிதாக கட்டப்பட்ட மற்றும் கட்டுமானத்தில் இருந்த இந்திய கடற்படை மற்றும் எல்லை பாதுகாப்புப் … Read more

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டுக்கு ஜப்பான் ஆதரவு: சல்மான் குர்ஷித் தகவல்

டோக்கியோ: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஜப்பானில் தன்னிச்சையான ஆதரவு இருப்பதாகக் கூறிய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இந்தியாவின் அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு ஜப்பானில் கிடைத்த வரவேற்பு திருப்தி அளிப்பதாக தெரிவித்தார். ஐக்கிய ஜனதாதளம் எம்.பி. சஞ்சய் குமார் ஜாவின் தலைமையில் ஜப்பான் சென்றுள்ள அனைத்துக் கட்சிக் குழுவில் இடம் பெற்றுள்ள முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதாவது: இது மிகவும் திருப்திகரமான மற்றும் சிறப்பான பயணமாக இருந்தது. பயங்கரவாதத்துக்கு எதிரான … Read more

கரோனா பாதிப்பு அதிகரிப்பது குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம்: கர்நாடக அமைச்சர் தினேஷ் குண்டுராவ்

பெங்களூரு: மீண்டும் கரோனா தொற்று பரவி வருவதாக ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்த்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்று கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் வலியுறுத்தியுள்ளார். கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் கரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் மக்கள் அமைதியாக இருந்து தங்கள் அன்றாடப் பணிகளைத் தொடருமாறு கேட்டுக் கொண்டார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரோனா பாதிப்பு பரவி வருவதாக ஊடகங்களில் … Read more