கேஜ்ரிவால் அனுமன் கோயிலில் வழிபாடு: பிரச்சாரத்தையும் இன்று மாலை தொடங்குகிறார்

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் வெள்ளிகிழமை விடுதலையான பின்னர், இன்று (சனிக்கிழமை) அவர் தனது மனைவி சுனிதா கேஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோருடன் கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமான் கோயிலில் பிரார்த்தனை செய்தார். மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியது. தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள … Read more

“ஒவ்வொரு தெருவிலும் ராம பக்தர்கள் உள்ளனர்” – ஒவைசிக்கு நவ்நீத் கவுர் எச்சரிக்கை

புதுடெல்லி: ஒவ்வொரு தெருவிலும் ராம பக்தர்கள் உள்ளனர் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசிக்கு பாஜக எம்.பி நவ்நீத் கவுர் தெரிவித்துள்ளார். அது குறித்து விரிவாக பார்ப்போம். ஹைதராபாத் ஷாத் நகரில் சில நாட்களுக்கு முன்னர் பாஜக வேட்பாளரை ஆதரித்து நவ்நீத் கவுர் பிரச்சாரம் செய்தார். அப்போது அசாதுதீன் ஒவைசி மற்றும் அவரது சகோதரர் அக்பருதீன் ஒவைசியை அவர் கடுமையாக விமர்சித்தார். தனது பேச்சில் அக்பருதீன் ஒவைசி கடந்த 2013-ல் சொன்னதையும் குறிப்பிட்டிருந்தார். “நம்மால் என்ன … Read more

காங்கிரஸின் பலவீனமே பாஜகவின் பலம்

நடைபெறும் நாடு தழுவிய மக்களவை பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பலவீனமே, பாஜகவின் பலமாக உள்ளது. இக்காரணத்தினாலேயே கடந்த 2 முறையும் பாஜக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் வியூகம், அக்கட்சியையும், கூட்டணி கட்சிகளையும் வெற்றி பாதையில் அழைத்து செல்கிறது. பாஜகவின் இந்த வியூகத்தை எட்டி பிடிக்க காங்கிரஸால் முடியவில்லை என்றே கூறலாம். பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடியாக தேர்தல் மோதல் நடந்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம், … Read more

நடிகை நவ்நீத் கவுர் மீது வழக்கு பதிவு

நடிகையும், எம்பியுமான நவ்நீத் கவுர் மீது ஹைதராபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் அமராவதி தொகுதியின் பாஜக எம்பியான நடிகை நவ்நீத் கவுர், ஹைதராபாத் ஷாத் நகரில் சில நாட்களுக்கு முன்னர் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், காங்கிரஸுக்கு வாக்களித்தால் அது பாகிஸ்தானுக்கு வாக்களித்தது போலாகும் என கூறினார். இது குறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், ஷாத் நகர் போலீஸ் நிலையத்தில் நடிகை நவ்நீத் கவுர் மீது புகார் … Read more

சீனாவின் பிரம்மாண்ட ஃபியூஜியன் போர்க்கப்பலால் நெருக்கடியை சந்தித்துள்ள இந்திய கடற்படை

புதுடெல்லி: சீனா 80 ஆயிரம் டன் எடையுள்ள பிரம்மாண்ட விமானம் தாங்கி போர்க்கப்பலை உள்நாட்டில் தயாரித்து சமீபத்தில் அறிமுகம் செய்தது. இதற்கு ஃபியூஜியன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது விரைவில் சீன கடற்படையில் இணைக்கப்படவுள்ளது. மிக நவீன தொழில்நுட்பத்தில் இந்த கப்பலை சீனா தயாரித்துள்ளதால், சீன கடற்படையில் இந்த கப்பலின் வரவு முக்கிய மைல்கல்லாக இருக்கும். ஃபியூஜியன் கப்பல் சீன கடற்படையில் இணைந்தபின், இந்திய-பசிபிக் கடல் பகுதியில் அதன் பலம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல் பல … Read more

இளம்பெண் அகால மரணமடைந்ததால் அரளி மலருக்கு தடை விதிப்பு: கேரளாவின் 2500 கோயில்களில் நடவடிக்கை

திருவனந்தபுரம்: கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி, கேரளாவின் ஆலப்புழாவைச் சேர்ந்த இளம் பெண் சூரியா சுரேந்தர் (24)எதேச்சையாக அரளி மலர் இதழ்களை சாப்பிட்டதால் அகால மரணமடைந்த சம்பவம் நிகழ்ந்தது. முன்னதாக, நர்சிங் பட்டதாரியான சூரியா சுரேந்திரனுக்கு பிரிட்டனில் செவிலியர் பணி கிடைத்திருந்தது. இதற்காக ஏப்ரல் 28 அன்று கொச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு அவர் சென்றிருந்தார். ஆனால், அதற்கு சில மணிநேரத்துக்கு முன்பு தனது வீட்டிலிருந்தபோது எதேச்சையாக அரளி மலர்களை அவர் சாப்பிட வாந்தி, மயக்கம் ஏற்பட்டு … Read more

டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: ஜூன் 2ல் திஹார் சிறைக்கு திரும்ப உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. ஜூன் 2-ம்தேதி அவர் திஹார் சிறைக்கு திரும்பவேண்டும் என்று நீதிபதிகள் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளனர். மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்தது. அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, நீதிமன்றக் காவலில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி டெல்லி திஹார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, … Read more

“குழப்பும் நோக்கம் இது!” – வாக்குப்பதிவு சதவீத சர்ச்சையில் கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் பதில்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் இறுதி வாக்குப்பதிவு சதவீத முரண்பாடுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுதிய கடிதம் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள தலைமைத் தேர்தல் ஆணையம், “விளக்கம் கேட்கும் போர்வையில் பாரபட்சமான முடிவை உருவாக்கும் முயற்சி இது” என்று சாடியுள்ளது. இது குறித்து இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு இணைப்புகளுடன் 5 பக்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அக்கடிதத்தில், தேர்தல் வாக்குப்பதிவுகளை வெளியிடுவதில் தாமதமும், முரண்பாடுகளும் … Read more

பிரஜ்வல் ரேவண்ணா வீடியோவை வெளியிட்ட பாஜக தலைவர் மீது பாலியல் வழக்குப்பதிவு

பெங்களூரு: பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் லீலைகளை அம்பலப்படுத்திய பாஜக தலைவர் தேவராஜ் கவுடா மீது பாலியல் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஹாசன் தொகுதியின் ஹோலேநரசிபுரா டவுன் காவல் நிலையத்தில் தேவராஜ் கவுடா மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜோதி என்ற பெண் தன்னை ஜி தேவராஜே கவுடா மற்றும் பலர் உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், மிரட்டியதாகவும் கூறியதை அடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா. மதச்சார்பற்ற ஜனதா தள … Read more

சத்தீஸ்கரில் என்கவுன்டர்: 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை

பீஜப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதனை அதிகாரபூர்வமாக அறிவித்த சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், “இந்த என்கவுன்டர் மூலம் இந்த ஆண்டு கொல்லப்பட்ட நக்சலைட்டுகள் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது. ஏப்ரல் இறுதி வரை பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 91 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்; இந்த எண்ணிக்கை இப்போது 103 ஆக உயர்ந்துள்ளது. இது 2019ம் ஆண்டுக்குப் பிறகு மிக அதிகம். பாதுகாப்புப் படையினருக்கு … Read more