புதுச்சேரி… தேசிய கட்சிகளின் மோதல் களம்! – ஒரு பார்வை

புதுச்சேரியில் இதுவரை 14 மக்களவைத் தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் 10 முறை காங்கிரஸ் வென்றுள்ளது. தலா ஒரு முறை என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, திமுக, பாமக வென்றுள்ளன. இண்டியா கூட்டணி: கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணிக்கு தலைமை தாங்கி போட்டியிட்ட காங்கிரஸ் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், திமுக 6 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பெற்றது. இதனால் இண்டியா கூட்டணியில் புதுவை மக்களவைத் தொகுதியை பெற திமுக இறுதி வரை முயற்சித்தது. ஆனாலும், … Read more

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் மாநிலங்கள் தலையிட முடியாது: வானதி சீனிவாசன்

தூத்துக்குடி: மத்திய அரசுக்கு உரிமையுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தில் எந்த மாநிலங்களும் தனிப்பட்ட முறையில் தலையிட முடியாது என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ கூறினார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: கோவையில் நடந்த அரசு விழாவில் பிரதமரை தமிழக முதல்வர் தரக்குறைவாக விமர்சித்திருப்பது கண்டிக்கத்தக்கது. பாஜக தலைமையிலான மத்திய அரசு, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை விட தமிழகத்துக்கு அதிக திட்டங்களை கொடுத்துள்ளது. கூடுதலாக … Read more

சீமான் சின்னத்தை பெற்ற கட்சி 40 இடங்களில் போட்டி – கூட்டணி அமைக்க அழைப்பு

நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னத்தை பெற்ற பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்ட … Read more

டிவிஸ்டு! SBI வழங்கிய தேர்தல் பத்திர விவரத்தில் முக்கிய பகுதி இடம்பெறவில்லை

எஸ்பிஐ தேர்தல் பத்திர விவரத்தில் மார்ச் 2028 முதல் மார்ச் 2019 ஆம் ஆண்டு வரை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தவர்களின் விவரங்கள் இடம்பெறவில்லை. இந்த காலகட்டத்தில் 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் விற்பனையானது.

போதைப் பொருள் விவகாரத்தில் குற்றம்சாட்டிய பழனிசாமி, அண்ணாமலைக்கு எதிராக முதல்வர் சார்பில் அவதூறு வழக்கு

சென்னை: போதைப் பொருள் விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி குற்றம்சாட்டியுள்ள அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு எதிராக தமிழக முதல்வர் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பெருநகர அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த மார்ச் … Read more

மதச் சண்டையை ஏற்படுத்தி மீண்டும் பிரதமராக நினைக்கிறார் மோடி – ஆ.ராசா எம்பி

Nilgiris MP A. Raja: மதச் சண்டையை ஏற்படுத்தி மீண்டும் பிரதமராக நினைக்கிறார் நரேந்திரமோடி என திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி எம்பியுமான ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார்.

ஆய்வக உதவியாளர்களுக்கும் பாடவேளை அட்டவணை: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

சென்னை: அரசுப் பள்ளிகளின் ஆய்வக உதவியாளர்களுக்கும் இனி செய்முறை பாடவேளை அட்டவணை தயார் செய்து வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் க.அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்ப தாவது: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு வரும் கல்வியாண்டில் (2024-25) இருந்து 6 முதல் 10-ம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்களுக்கு ஆய்வகங்களில் செய்முறை வகுப்பு பாடவேளைக்கான அட்டவணையை … Read more

ஸ்டாலின் தொடர்ந்த அவதூறு வழக்கு முதல் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ புதிய சாதனை வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ மார்ச் 14, 2024

ஜாபர் சாதிக்கின் சென்னை குடோனில் சோதனை: ஜாபர் சாதிக்கை 7 நாட்கள் காவலில் எடுத்து மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரித்து வரும் நிலையில், சென்னை மற்றும் திருச்சியில் உள்ள ஜாபர் சாதிக்கின் குடோன்களில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, சென்னை பெருங்குடியில் உள்ள அன்னை சத்யா நகரில் உள்ள குடோனில் ஐந்துக்கும் மேற்பட்ட மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அந்தக் … Read more

“தேசபக்தியை திமுகவுக்கு யாரும் போதிக்க வேண்டாம்” – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: “தேசபக்தியை பற்றி திமுகவுக்கு யாரும் போதிக்க வேண்டியது அவசியம் இல்லை. நாட்டுப்பற்று பற்றி எங்களுக்கு யாரும் வகுப்பு எடுக்க வேண்டிய அவசியமே கிடையாது” என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை தங்கசாலையில் நடைபெற்ற வடசென்னை வளர்ச்சித் திட்ட பணிகள் விரிவாக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “திமுக அரசு, இப்படி சென்னையை உயர்த்த நாள்தோறும் புதிய புதிய திட்டங்களாக நிறைவேற்றுகிறது. ஆனால், கடந்த 10 … Read more