தென்மாவட்ட வெள்ளத்துக்கு இதுவரை 35 பேர் உயிரிழப்பு; 1.83 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதம்

சென்னை: தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளில் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார். இந்த 4 மாவட்டங்களில் 1 லட்சத்து 83 ஹெக்டேர் அளவிலான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “தென் மாவட்டங்களில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முடிவுக்கு வந்துவிட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து … Read more

“பேரிடரில் உடனடி தேவை ‘உதவி’… உபதேசம் அல்ல” – நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் பதில்

சென்னை: “நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டியது தானே என்று நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். ரயில் டிக்கெட் எடுத்த பயணிகளை ஶ்ரீவைகுண்டத்திலிருந்து ரயிலிலே கூட்டி வந்திருக்க வேண்டியது தானே? ஏன் நடக்கவிட்டு கூட்டிவந்தீங்க என்று நாங்கள் கேட்க மாட்டோம். பேரிடர் காலத்தில் மனிதர்களுக்குத் தேவை உடனடி உதவி, உபதேசம் அல்ல” என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கில் … Read more

“சிலரிடம் பெரியார் வழியில்தான் பேசவேண்டும்” – நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி பதில்

சென்னை: “சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டும்” என தன்னை விமர்சித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பதில் தந்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது.. “யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள். சிலரிடம் அண்ணாவைப் போல, சிலரிடம் கலைஞரைப் … Read more

கிடப்பில் போடப்பட்ட திடக்கழிவு மேலாண்மை திட்டத்தால் சேதமடையும் பேட்டரி வாகனங்கள் @ ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் டெண்டர் ரத்து செய்யப்பட்டதால் ரூ.5.5 கோடி மதிப்பிலான திடக்கழிவு மேலாண்மை திட்டம் கிடப்பில் உள்ளது. இதனால் வீடுகளில் குப்பை சேகரிப்பதற்காக வழங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் பயன்பாடின்றி சேதமடைந்து வருகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் உள்ள 33 வார்டுகள் 4 சுகாதர மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நகர் நல அலுவலர், 4 சுகாதர ஆய்வாளர்கள், 6 மேற்பார்வையாளர்கள், 6 ஓட்டுநர்கள், 109 நிரந்தர தூய்மை பணியார்கள் என 130 பேர் சுகாதார பிரிவில் பணியாற்றி வந்தனர். நகராட்சி … Read more

“திராவிட மாடல் ஆட்சியில் நல்லிணக்கத்தை தடுக்க தவிக்கிறது ஒரு கூட்டம்” – கிறிஸ்துமஸ் விழாவில் ஸ்டாலின் பேச்சு

சென்னை: “திராவிட மாடல் ஆட்சியில் எல்லாப் பிரிவு மக்களும் அமைதியாக நல்லிணக்கத்தோடு வாழ்கிறார்கள். இதை தடுக்க ஒரு கூட்டம் தவியாய்த் தவிக்கிறது. ஆனால், உண்மை என்னவென்றால் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்தக் கூட்டத்தால் இந்த மண்ணில் நிச்சயமாக வெற்றி பெற முடியாது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில் நடத்தப்பட்ட “அன்பின் இனிய கிறிஸ்துமஸ் பெருவிழா – 2023” நிகழ்வில் கலந்துகொண்டு அவர் … Read more

“தமிழக மக்களை அவமானப்படுத்திய நிர்மலா சீதாராமன்” – தங்கம் தென்னரசு @ வெள்ள நிவாரணம்

சென்னை: “2015-ம் ஆண்டு முதல் பேரிடர்களினால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக மற்றும் நிரந்தரமாக சீரமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிய மொத்தத் தொகை என்பது ரூ.1,27,655.80 கோடி ஆகும். இதில் மத்திய பாஜக அரசால் ரூ.5,884.49 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிய தொகையில் 4.61 விழுக்காடு மட்டுமே” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட தகவல்களுக்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு … Read more

மேல்மா சிப்காட் போராட்டத்தில் அருள் ஆறுமுகம் மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்ட நடவடிக்கை: உயர் நீதிமன்றம்

சென்னை: செய்யாறு அருகே மேல்மா சிப்காட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய அருள் ஆறுமுகத்தின் மீது உள்நோக்கத்துடன் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அமைந்துள்ள மேல்மா சிப்காட்டின் மூன்றாவது திட்ட விரிவாக்கப் பணிக்காக 11 ஊராட்சிகளில் 3,174 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.அரசின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். … Read more

‘மதுரை வீரன் உண்மை வரலாறு’ புத்தகத் தடைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி @ ஐகோர்ட்

சென்னை: ‘மதுரை வீரன் உண்மை வரலாறு’ என்ற புத்தகத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள ‘ரிட்’ வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘மதுரை வீரன் உண்மை வரலாறு’ என்ற புத்தகத்தை குழந்தை ராயப்பன் என்பவர் எழுதியிருக்கிறார். இந்த நூலை ஆதித் தமிழர் பேரவை என்ற அமைப்பு வெளியிட்டிருக்கிறது. ‘இந்தப் புத்தகத்தில் ஆட்சேபனைக்குரிய, திரித்து எழுதப்பட்ட தகவல்களைக் கொண்டதாக உள்ளது. பல சமூகத்தினரை விமர்சனம் செய்வதாகவும் … Read more

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் தாயார் மறைவு: அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி

விருதுநகர்: தமிழக வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச் சந்திரனின் தாயார் இன்று (டிச.22) அதிகாலை உயிரிழந்தார். அவரது உடலுக்கு அமைச்சர்கள், அரசியல் முக்கிய பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக செயலரும் தமிழக வருவாய்துறை அமைச்சருமான சாத்தூர் ராமச்சந்திரனின் தாயார் ஆர்.அமராவதி அம்மாள் (94) இன்று அதிகாலை வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக அம்மையாரின் உடல் விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் உள்ள வருவாய்த்துறை … Read more

“பீக் ஹவர் மின் கட்டணத்தை ரத்து செய்திடுக” – தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: கடும் மின்கட்டண உயர்வால் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பின் தொழிற்சாலைகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “இரண்டாம் முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியதுடன், மின்சார நிலைக் கட்டணம், பீக் ஹவர் கட்டணம், சோலார் தகடுகள் பொருத்தி அதன்மூலம் உபயோகிக்கப்படும் மின்சாரத்துக்கு கூடுதல் கட்டணம் என்று அனைத்துக் கட்டணங்களையும் உயர்த்தியதால், தமிழகத்தில் உள்ள தொழில் துறையும், ஜவுளித் துறையும் பெரும் சரிவை சந்தித்து … Read more