“திமுகவின் நிலம் ஆக்கிரமிப்பு இனியும் செல்லுபடியாகாது” – அண்ணாமலை திட்டவட்டம்

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை. தமிழகத்தின் புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக விளங்கியது, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் நினைவாக, சேலம் ஏற்காடு சாலையில், நினைவு வளைவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில், தனது தந்தையின் சிலையை அமைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் விரும்புவதாக கூறி, சேலம் மாவட்ட ஆட்சியர் நினைவு வளைவு அமைந்திருக்கும் இடத்தை தரும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அமரர் டி.ஆர்.சுந்தரம் முதலியார் குடும்பத்தினர் அதனை ஏற்றுக் … Read more

சென்னையில் அனைத்து ரேஷன் அட்டைக்கும் நிவாரண தொகை ரூ.6,000 கிடைக்குமா? – புதிய வழிகாட்டுதல்களுடன் அரசாணை வெளியீடு

சென்னை: ‘மிக்ஜாம்’ புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.6,000 வெள்ள நிவாரணம் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வருமானவரி செலுத்துவோர், மத்திய, மாநில அரசு பணியாளர்கள் பாதிப்பைக் குறிப்பிட்டு நியாயவிலைக் கடைகள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறை செயலர் வே.ராஜாராமன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: ‘மிக்ஜாம்’ புயல் வெள்ளம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகையாக ரூ.6,000 ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

டிச.16, 17-ம் தேதிகளில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: கன்னியாகுமரி, திருவாரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வரும் 16, 17-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழையும், நாளை (டிச. 15) மின்னலுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும். … Read more

மியூசிக் அகாடமி 97-ம் ஆண்டு இசை விழா நாளை தொடக்கம்: அகாடமி தலைவர் என்.முரளி தகவல்

சென்னை: சென்னை மியூசிக் அகாடமியின் 97-வது ஆண்டு கருத்தரங்கம் மற்றும் இசைத் திருவிழா நாளை தொடங்குகிறது. தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா பங்கேற்கிறார். இதுகுறித்து மியூசிக் அகாடமி தலைவர் என்.முரளி கூறியதாவது: மியூசிக் அகாடமியின் 97-வது ஆண்டு கருத்தரங்கம் மற்றும் இசைத் திருவிழா டிசம்பர் 15-ம் தேதி (நாளை) தொடங்கி, ஜனவரி 1-ம் தேதி வரை சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள மியூசிக் அகாடமி அரங்கில் நடைபெறுகிறது. … Read more

எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் நவீன தொழில்நுட்பமின்றி குவளையில் எண்ணெய் கழிவுகளை அகற்றும் அவலம்

சென்னை: எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்தாமல் குவளையில் (MUG) எண்ணெய் கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. மீன்பிடி உபகரணங்கள் பாழானதால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. சென்னை மணலி பகுதியில் இருந்து கடந்த வாரம் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக கொசஸ்தலைஆறு, எண்ணூர் முகத்துவாரம் மற்றும் கடல் பரப்பில் எண்ணெய் படலம் பரவியது. கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் நிறுத்தி வைத்துள்ள பல நூறு படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் மீது எண்ணெய் கசிவு படிந்ததால், … Read more

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு போதுமானது அல்ல: அன்புமணி

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு போதுமானது அல்ல என்றும், எருமைப்பாலுக்கு ரூ. 51, பசும்பாலுக்கு ரூ.42 வீதம் தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படும் பசும் பாலுக்கான விலை லிட்டருக்கு 35 ரூபாயிலிருந்து 38 ரூபாயாகவும், எருமைப்பாலுக்கான விலை 44 ரூபாயிலிருந்து, 47 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று … Read more

இந்தியாவிலேயே முதல் முறையாக பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானம்: இறுதிகட்டத்தில் பணிகள் @ அலங்காநல்லூர்

மதுரை: இந்தியாவிலேயே முதல் முறையாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அலங்காநல்லூர் அருகே ரூ.44 கோடியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் மைதானத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடக்க உள்ளது. இந்த மைதான கட்டுமானப்பணியை டிசம்பரில் முடிக்க, இறுதிக்கட்டப் பணிகள் மிக தீவிரமாக நடக்கிறது. வீர விளையாட்டு என்று அதன் பெயரில் மட்டுமல்லாமல், உயிரை கொடுத்து வீரத்தை நிரூபிக்கும் விளையாட்டாக ஜல்லிக்கட்டு பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த விளையாட்டில் பலர் உயிரிழந்தாலும் இந்த விளையாட்டின் ஆர்வமும், விறுவிறுப்பும் குறையாமல் பல தடைகளை … Read more

நியோமேக்ஸ் மோசடி வழக்கில் போலீஸ் நடவடிக்கை போதுமானது அல்ல: உயர் நீதிமன்றம் அதிருப்தி

மதுரை: ‘நியோமேக்ஸ் மோசடி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரின் தற்போதைய நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை’ என உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த கவுதமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: “மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனம் தமிழகம் முழுவதும் பல ஆயிரம் பேரிடம் கூடுதல் வட்டி மற்றும் வீட்டடி மனை தருவதாக கூறி பல ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்தது. இந்த மோசடி குறித்து மதுரை … Read more

எண்ணூர் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் 75 படகுகள், 300 பணியாட்கள் தீவிரம்

சென்னை: சென்னை பக்கிங்ஹாம் கால்வாய், எண்ணூர் கழிமுக பகுதி உட்பட எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடங்களை கண்டறிந்து உடனடியாக அவற்றை நீக்குமாறு சிபிசிஎல் நிறுவனத்துக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த பணியில் 75 படகுகள், 300 பணியாட்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. மாநில எண்ணெய் நெருக்கடி மேலாண்மை குழு கூட்டம் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் … Read more

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர்கள் நியமனத்துக்கு எதிரான மனு தள்ளுபடி 

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலர்கள் நியமனத்துக்கு எதிரான மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: “மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நவ. 6-ல் அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். மதுரை அண்ணாநகரை சேர்ந்த பி.கே.எம்.செல்லையா, மதுரை காந்திநகர் சுப்புலட்சுமி, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி பழனிவேல்ராஜன், கே.கே.நகர் மருத்துவர் சீனிவாசன், அரசரடியைச் சேர்ந்த மீனா அன்புநிதி ஆகியோர் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டனர். இதையடுத்து … Read more