விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரியில் பயன்பாட்டுக்கு வராத சோலார் மின் உற்பத்தி: காட்சிப் பொருளான சோலார் தகடுகள்

விருதுநகர்: விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கி 2 ஆண்டுகளாகியும் இதுவரை சோலார் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படாமல் சோலார் தகடுகள் காட்சிப் பொருளாகவே காணப்படுகின்றன. லட்சக்கணக்கான ரூபாய் மின் கட்டணம் செலுத்துவதால், கல்லூரி நிர்வாகத்துக்கு கூடுதல் செலவினமும் ஏற்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகே அரசு மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, கடந்த 2020 மார்ச் 1-ம் தேதி நடைபெற்றது. மத்திய அரசு 60 சதவீத பங்குத் தொகையாக … Read more

திமுக எம்.பி. கவுதம சிகாமணி நீதிமன்றத்தில் ஆஜர் @ சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கு

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணி 12-வது கூடுதல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. கடந்த 2006- 2011 திமுக ஆட்சி காலத்தில் கனிமவளத் துறை அமைச்சராக பதவி வகித்த, தற்போதைய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அவரது மகனும், தற்போதைய கள்ளக்குறிச்சி திமுக எம்.பி.,யுமான கவுதமசிகாமணி மற்றும் உறவினர் ஜெயச்சந்திரன், … Read more

"முதலில் தமிழன், அடுத்துதான் இந்தியன்" – அன்புமணி ராமதாஸ் பேச்சு

சென்னை: “உலகில் எங்கு சென்றாலும் முதல் பெருமை நான் தமிழன். பெருமை மட்டுமல்ல, ஆணவம் இருக்க வேண்டும். அடுத்துதான் இந்தியன்.” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும், சென்னை உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார். “உலகின் மிக … Read more

‘அதிகார வரம்பு இல்லை’ – 10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழக அரசு வழக்கு

சென்னை: சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது. தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் … Read more

திட்டக்குடியில் ரூ.33 கோடியில் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை: அரசாணை வெளியீடு

சென்னை: கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நாளொன்றுக்கு 300 மெட்ரிக் டன் உற்பத்தி திறனில் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை ரூ.33 கோடி மொத்த திட்ட மதிப்பீட்டில் நபார்டு திட்டத்தின் கடனுதவியுடன் நிறுவுவதற்கு நிர்வாக ஒப்புதல் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் நாளொன்றுக்கு 300 மெட்ரிக் டன் உற்பத்தி திறனில் கால்நடை தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை ரூ.33 கோடி மொத்த திட்ட மதிப்பீட்டில் … Read more

“உச்ச நீதிமன்ற தீர்ப்பை அறிந்துகொண்டு செயல்பட ஆளுநர் ரவி முன்வர வேண்டும்” – கே.எஸ்.அழகிரி

சென்னை: “உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தனக்கு உகந்த வழக்கறிஞரை அழைத்து, அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிந்துகொள்ள வேண்டும். அப்படி அறிந்து கொண்டு அரசமைப்புச் சட்டப்படி அவர் செயல்பட முன்வர வேண்டும்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய பாஜக ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களின் ஆளுநர்களை பயன்படுத்துவது தொடர் நிகழ்வாக நடைபெற்று … Read more

பரந்தூர் விமான நிலையத்துக்காக 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசு அனுமதி: வேல்முருகன் அதிர்ச்சி

சென்னை: “பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக 20 கிராமங்களில் 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அனுமதி வழங்கியுள்ள தமிழக அரசின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். அதேபோன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், விவசாய … Read more

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

சென்னை: தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களுடன் முதல்வர் திட்டத்துக்கான சிறப்பு அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி மதுசூதன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பிறப்பித்துள்ள உத்தரவு: தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண் இயக்குநரான ஐஏஎஸ் அதிகாரி பி.சங்கர், வேளாண்மை-உழவர் நலன்துறை சிறப்பு செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சாலை திட்ட இயக்குநரான ஐஏஎஸ் அதிகாரி எஸ்.பிரபாகர், தமிழ்நாடு நகர்ப்புர … Read more

கோட்டை ரயில் நிலையத்தில் குவிக்கப்பட்ட கட்டுமான கழிவுகள்: தலைமைச் செயலகம் செல்ல பாதை இல்லாமல் மக்கள் அவதி

சென்னை: சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து தலைமைச் செயலகம் செல்ல போதிய பாதை இல்லாததால் பயணிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். ஒருபுறம்நச்சு பாம்புகள், மறுபுறம் குவிக்கப்பட்டுள்ள கட்டுமானக் கழிவுப் பொருட்கள் மத்தியில் நடந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக, மாற்றுப்பாதையை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரயில் வழித்தடத்தில் நாள்தோறும்ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர். இவர்களில் ஒரு பகுதியினர் தலைமைச்செயலக ஊழியர்கள் ஆவர். இவர்கள், கோட்டை ரயில் நிலையத்தில் இறங்கி தலைமைச் செயலகம் … Read more

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில்  திருக்கோயில்கள் சார்பில் 1,100 திருமணங்கள் நிறைவு: தமிழக அரசு

சென்னை: திருக்கோயில்கள் சார்பில் 1,100 மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்வை நிறைவு செய்திடும் விதமாக, இரண்டு மணமக்களுக்கான திருமணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று இன்று நடத்தி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.24) சென்னை, மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 1,100 மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்வை நிறைவு செய்திடும் விதமாக, இரண்டு … Read more