பெட்ரோல் குண்டு வீசிய வினோத்துக்கு 15 நாள் காவல் கேட்டு நீதிமன்றத்தில் போலீஸார் மனு

சென்னை: சிறையில் உள்ள ரவுடி கருக்கா வினோத்தை 15 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல் செய்துள்ளனர். ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதாக பிரபல ரவுடி கருக்கா வினோத் கடந்த 25-ம் தேதி கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியே வர முடியாதபடி, அவர் மீது 5 பிரிவுகளின்கீழ் கிண்டி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட வினோத், நீதிமன்ற காவலில் 26-ம் தேதி அதிகாலை … Read more

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் ஆளுநர் மாளிகை அளித்தது மிகைப்படுத்தப்பட்ட புகார்: டிஜிபி, காவல் ஆணையர் விளக்கம்

சென்னை: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் வீடியோ காட்சிகளை வெளியிட்டு டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் ஆகியோர் விளக்கம் அளித்தனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை பிரதான நுழைவாயில் முன் உள்ள இரும்பு தடுப்பு வேலி முன்பு கடந்த 25-ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக பிரபல ரவுடியான சென்னை நந்தனத்தைச் சேர்ந்த கருக்கா … Read more

ஆளுநர் மாளிகை சம்பவம் | “அமைச்சர் ரகுபதி திசை திருப்புகிறார்” – எல்.முருகன்

நாகர்கோவில்: “ஆளுநர் மாளிகை மீதான பெட்ரோல் குண்டு வீச்சு, திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதை காட்டுகிறது” என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணையமைச்சர் எல்.முருகன் இன்று கன்னியாகுமரி வந்தார். அப்போது செய்தியாளர்ளிடம் கூறியது: “சென்னை ஆளுநர் மாளிகை மீதான தாக்குதல் இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக விடுக்கப்பட்ட சவால் ஆகும். திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதை இந்தத் தாக்குதல் சம்பவம் … Read more

ஒரு நொடி தாமதமானாலும் விடுப்பில் கழிக்கப்படும்: மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு ‘டீன்’ சுற்றறிக்கை

மதுரை: பயோமெட்ரிக் வருகைப் பதிவில் ஒரு நொடி தாமதமானாலும் கூட மருத்துவர்களுக்கு வருடாந்திர விடுப்பில் கழிக்கப்படும் என மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம், அனைத்து மருத்துவர்களுக்கும் சுற்றிக்கை அனுப்பியுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், சரியான நேரத்துக்கு பணிக்கு வருவதில்லை என்று சிகிச்சை வரும் நோயாளிகள் குற்றம்சாட்டி வந்தனர். அதனால், தேசிய மருத்துவக்கவுன்சில் வழிகாட்டுதல்படி மருத்துவர்கள் தடையின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ கல்வி இயக்குநர் அறிவுறுத்தல்படி அனைத்து அரசு மருத்துவக் … Read more

“திமுக இல்லையென்றால் தமிழும் தமிழகமும் இருக்காது” – அமைச்சர் துரைமுருகன் பேச்சு

திருப்பத்தூர்: “திமுக இல்லையென்றால் தமிழகம் இருக்காது, தமிழும் இருக்காது” என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் திமுக மாணவர் அணி சார்பில் 9 மாவட்ட திமுக மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான 3 நாள் பயிற்சி பட்டறை இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இந்நிகழ்ச்சியில், தமிழக நீர்வளத் துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்து பேசியது: “இன்றைய … Read more

அரவக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.1.17 லட்சத்தை கைப்பற்றி விசாரணை

கரூர்: அரவக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சார்பதிவாளர் சக்திவேலிடமிருந்து கணக்கில் வராத ரூ.1,17,500 கைப்பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகார்களின் அடிப்படையில் கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு டிஎஸ்பி க.இமயவரம்பன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சாமியப்பன் மற்றும் உதவி ஆய்வாளர்கள், போலீஸார் என 6 பேர் கொண்ட குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். … Read more

பொதுமக்களின் போராட்ட எதிரொலி? – மதுரை கிரானைட் குவாரி ஏலம் ஒத்திவைப்பு

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே சேக்கிபட்டி, திருச்சுனை, அய்யாபட்டி கிராமங்களில் கிரானைட் குவாரி தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா கடந்த 11-ம் தேதி அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து மனு அளித்தனர். இந்நிலையில் கிரானைட் குவாரி ஏல அறிவிப்பை கண்டித்தும் வரும் 31-ம் தேதி நடைபெறவுள்ள ஏலத்தை ரத்து செய்யக் கோரியும், சேக்கிபட்டி மந்தை முத்தாலம்மன் கோயில் திடலில் நேற்று காலை முதல் … Read more

லஞ்ச வழக்கு: கோவை சிபிஐ நீதிமன்றத்தில் ஐ.ஜி. பிரமோத்குமார் சரண்

கோவை: நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்கில் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட ஐ.ஜி. பிரமோத்குமார் கோவை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று (அக்.27) சரணடைந்தார். திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு 2009-ல் செயல்பட்ட ‘பாசி போரக்ஸ் டிரேடிங்’ என்ற நிதி நிறுவனம், முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. விசாரணையில் 58,571 பேரிடம், ரூ.930.71 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு … Read more

அம்பத்தூர் சம்பவம்: திமுக அரசின் அலட்சியப்போக்கால் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவதாக சீமான் சாடல்

சென்னை: “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, நாளுக்கு நாள் அதிகரித்த வடமாநிலத் தொழிலாளர்களின் குற்றச்செயல்களைத் தடுக்கத் தவறிய தமிழக அரசின் அலட்சியப்போக்கே, அம்பத்தூரில் காவல் துறையினரையே கண்மூடித்தனமாகத் தாக்கும் அளவுக்கு சட்டம் – ஒழுங்கு சீர்குலைய முக்கியக் காரணமாகும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை அம்பத்தூரில் வடமாநிலத் தொழிலாளர்களிடையே ஆயுதபூஜை அன்று மதுபோதையில் ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற தமிழக காவலர்களை வட … Read more

‘கருக்கா’ வினோத்தை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல் துறை மனு

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கருக்கா வினோத்தை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு புதன்கிழமை பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி `கருக்கா’ வினோத்தை கைது செய்த போலீஸார், அவரை சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் … Read more