பேச்சுவார்த்தையில் உடன்பாடு – ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம் வாபஸ்

சென்னை: போக்குவரத்து துறை அதிகாரிகள் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஆகிய தொடர் விடுமுறையையொட்டி, ஏராளமான பொதுமக்கள் அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், கூடுதல் கட்டண புகார் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தமிழகம் முழுவதும் 120 ஆம்னி பேருந்துகளை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சிறைபிடித்துள்ளனர். இந்த பேருந்துகளை … Read more

அமமுக செயற்குழு கூட்டத்தின் தேதி அறிவிப்பு

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் வருகின்ற நவம்பர் 4ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிவிப்பில், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மக்கள் நலக்கொள்கைகளைத் தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் கழகத் தலைவர் C.கோபால் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) தலைமையில் வருகிற 04.11.2023 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் திருச்சி, ஃபெமினா ஹோட்டலில் உள்ள … Read more

தேசிய நீச்சல் போட்டிக்கு மதுரை பள்ளி மாணவன் தேர்வு

மதுரை: தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கு மதுரையை சேர்ந்த பிளஸ் 2 மாணவன் எம்.பூபாலன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான, தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளை உள்ளடக்கிய தென்மண்டல நீச்சல் போட்டிகள் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் எஸ்எஸ்விஎம் பள்ளியில் அக்டோபர் 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் மதுரை மகாத்மா குளோபல் கேட்வே பள்ளியில் பிளஸ் 2 மாணவன் எம்.பூபாலன், 19 வயதிற்குட்பட்ட பிரிவில் 3 தங்கம், … Read more

13 ஆண்டு பணியில் 12 முறை இடமாறுதல்: வருவாய் ஆய்வாளரை மீண்டும் பணியில் சேர்க்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை: பணியில் சேர்ந்த 13 ஆண்டுகளில் 12 முறை இடமாறுதல் செய்யப்பட்டு இறுதியில் பணி நீக்கம் செய்யப்பட்ட வருவாய் ஆய்வாளரை மீண்டும் பணியில் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு. என் தந்தை விஸ்வாம்பரன் கிராம உதவியாளராக பணிபுரித்தார். அவர் பணியில் இருந்தபோது இறந்தார். இதனால் எனக்கு கருணை அடிப்படையில் 13.12.2006-ல் கிராம உதவியாளர் பணி வழங்கப்பட்டது. 13 ஆண்டுகளில் என்னை 12 … Read more

மேட்டூர் காவிரி ஆற்றில் மீன்வளத் துறைக்கு சொந்தமான விசைப்படகை எரித்த மர்ம நபர்கள்: போலீஸார் விசாரணை

மேட்டூர்: மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் மீன்வளத் துறைக்கு சொந்தமான விசைப்படகுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நீர் தேக்கம் 60 மைல் பரப்பளவைக் கொண்டுள்ளது. அணையில் ஒவ்வொரு ஆண்டும் 75 லட்சம் மீன் குஞ்சகள் மீன்வளத்துறை சார்பில் விடப்பட்டு வளர்க்கப்படுகிறது. இந்த மீன் குஞ்சுகளை உரிமம் பெற்ற 2 ஆயிரம் மீனவர்களைக் கொண்டு பிடிக்கப்பட்டு … Read more

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனப் பரிந்துரையை காழ்ப்புணர்ச்சியுடன் ஆளுநர் நிராகரித்துள்ளார்: மார்க்சிஸ்ட்  குற்றச்சாட்டு

சென்னை: “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவை நியமிக்க வேண்டும் என்ற தமிழக அரசிந் பரிந்துரையை, தமிழக ஆளுநர் வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நிராகரித்துள்ளார்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவையும், உறுப்பினராக சிவக்குமாரையும் நியமிக்க வேண்டுமென தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என். ரவி நிராகரித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் … Read more

திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்களின் வரலாற்றை காந்தியடிகளின் இறுதி நாட்கள் சொல்லும் – முதல்வர் ஸ்டாலின் சாடல்

சென்னை: “திமுக அரசு அமையும்போதெல்லாம் விடுதலை வீரர்களின் புகழ் திக்கெட்டும் போற்றப்படுகிறது. நஞ்சு தோய்ந்த எண்ணங்களோடு நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்களின் வரலாற்றைத் தேசத் தந்தை காந்தியாரின் இறுதி நாட்கள் சொல்லும். இந்த கோட்சே கூட்டத்தைத்தான் மகாகவி பாரதியார் ‘நடிப்புச் சுதேசிகள்’ எனப் பாடினார்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ் நிலத்தின் உரிமைகளைக் காக்கத் தங்கள் உயிரையும் துச்சமென நினைத்த மான … Read more

உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் நடிகர் விஜய்யுடன் இணைந்து செயல்படத் தயார்: சீமான் கருத்து

விழுப்புரம்: நடிகர் விஜய்யுடன் இணைவது உங்களுக்கு மகிழ்ச்சி என்றால் நாங்கள் இரண்டு பேரும் இணைந்து செயல்படத் தயார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலையில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியது, “தமிழர்களின் வரலாற்றை ஆளுநர் ரவி திரித்து பேசுகிறார். மகளிர் மசோதாவை செயலாக்கம் செய்யுமா பாஜக..? … Read more

ஊரப்பாக்கத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி விபத்து: 3 சிறுவர்கள் உயிரிழந்த சோகம்

ஊரப்பாக்கம்: ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூன்று சிறுவர்கள் மீது ரயில் மோதியது. இந்த விபத்தில் மூன்று சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ரயில் மோதிய விபத்தில் சிறுவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊரப்பாக்கம் ரயில் நிலையம் உள்ளது. வண்டலூர் ரயில் நிலையம் மற்றும் ஊரப்பாக்கம் ரயில் நிலையத்துக்கு இடைப்பட்ட பகுதியில் இன்று காலை மூன்று சிறுவர்கள் தண்டவாளத்தை கடக்க … Read more

''ஆளுநர் மாளிகையே… அடக்கிடு வாயை…'' : ஆளுநர் ஆர்.என். ரவிக்கு திமுக எம்.பி, டி.ஆர்.பாலு கடும் கண்டனம்

சென்னை: “பாஜக தலைவர்கள் எப்படி அன்றாடம் பொய் பேசி, வதந்தி பரப்புகிறார்களோ, அவர்களுக்குப் போட்டியாக, தமிழகத்தின் பாஜக தலைவராக வேண்டும் என்ற ஆசையில் ஆளுநரும் பொய் பேசுகிறார். எவ்வித ஆதாரமுமின்றி இப்படி பச்சைப் பொய்களைச் சொல்வதுடன், திராவிடம் என்ற கருத்தியல் பற்றி அவர் உளறிக் கொட்டுவது ஒவ்வொரு மேடையிலும் வழக்கமாக இருக்கிறது” என்று திமுக எம்பி, டி.ஆர்.பாலு கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மக்களின் வாக்குரிமையால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிறைந்த தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக … Read more