தமிழகத்தில் இன்றும், நாளையும் பரவலாக மழை பெய்யும் – வட மாவட்டத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட மாவட்டங்கள் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் வரும் 26-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த நாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் … Read more

96 மாத அகவிலைப்படி உயர்வு வழங்க கோரி தொடர் முழக்கப் போராட்டம்: மதுரையில் 1,500 பேர் பங்கேற்பு

மதுரை: 96 மாத அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி மதுரை மண்டல அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் இன்று மதுரை புறவழிச்சாலையிலுள்ள போக்குவரத்து தலைமையகம் முன்பு நடைபெற்றது. இதில் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய முழக்கப் போராட்டம் 5 மணிக்கு முடிவடைந்தது. இதில், போக்குவரத்துக் கழகங்களில் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத்தை அரசு வழங்க வேண்டும். … Read more

தி.மலை மகா தேரோட்டத்தில் மின்சாரம் தாக்கி 25 பக்தர்கள் காயம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டிய மகா தேரோட்டத்தின்போது, மின்சாரம் தாக்கி 25 பக்தர்கள் காயம் அடைந்தனர். பத்து நாள் உற்சவத்தின் முக்கிய நிகழ்வான மகா தேரோட்டம் இன்று (நவம்பர் 23) நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில், திருத்தேரில் விநாயகர் எழுந்தருளினார். பின்னர் காலை 7.41 மணியளவில் விநாயகர் திருத்தேர் புறப்பாடு தொடங்கியது. பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மாட வீதியில் வலம் வந்து, காலை 11.39 மணியளவில் நிலையை வந்தடைந்தது. பின்னர், வள்ளி தெய்வானை … Read more

அமிர்த பாரத் ஸ்டேஷன் திட்டம்: ரூ.14 கோடியில் தரம் உயர்த்தப்படும் சிதம்பரம், விருத்தாசலம் ரயில் நிலையங்கள்

புதுச்சேரி: அமிர்த பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் ரயில் நிலையங்களை ரூ.14.9 கோடியில் தரம் உயர்த்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் கட்ட பணிகளை மார்ச்சுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் சிதம்பரமும், விருத்தாசலமும் குறிப்பிடத்தக்க முக்கிய நிலையங்களாகும். இந்த நகரங்களில் இருந்து ரயில் சேவை சென்னை, திருச்சி, மதுரை போன்ற முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் ஆகியவை திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் உள்ள அமிர்த் பாரத் … Read more

“தி.மலை மின்கசிவு விபத்து… திமுக அரசு நிர்வாகத்தின் தோல்வி” – இபிஎஸ் சாடல்

திருவண்ணாமலை: “திருவண்ணாமலை தேரோட்டத்தின்போது மின் கசிவினால் ஏற்பட்ட விபத்து, திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையை குறிப்பாக, அறநிலையத் துறை, மின்சாரத் துறை மற்றும் காவல் நுண்ணறிவுப் பிரிவு ஆகியவற்றின் தோல்வியையே காட்டுகிறது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “இன்று மாலை (23.11.2023), பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருத்தேர் பவனியின் போது ஏற்பட்ட மின் கசிவால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாகவும், 8 பேர் … Read more

பிரணவ் நகைக் கடை மோசடி வழக்கு: நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத் துறை சம்மன்

சென்னை: பிரணவ் நகைக் கடை பண மோசடி வழக்கில் அக்கடையின் விளம்பரங்களில் நடித்த நடிகர் பிரகாஷ்ராஜ் நேரில் ஆஜராக கோரி அவருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. திருச்சி, மதுரை, சென்னை, கும்பகோணம், நாகர்கோவில், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் பிரணவ் என்ற பெயரில் நகைக் கடை இயங்கி வந்தது. இங்கு பல்வேறு சிறு சேமிப்பு மற்றும் முதலீடு திட்டங்களில் அதிகளவில் போனஸ் தருவதாக விளம்பரம் செய்யப்பட்டது. இதை நம்பி முதலீடு செய்த பலரும், முதிர்வு தொகையை வழங்குமாறு … Read more

தீபத் திருவிழா | தி.மலை அண்ணாமலையார் கோயிலில் மகா தேரோட்டம் கோலாகலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையாருக்கு அரோகரா எனும் முழக்கத்துடன் மகா தேரோட்டம் இன்று (நவம்பர் 23) கோலாகலமாக நடைபெற்றது. பஞ்சபூத திருத்தலங்களில் ‘அக்னி’ திருத்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது. காவல் தெய்வமான துர்க்கை அம்மன், பிடாரி அம்மன் மற்றும் விநாயகர் உற்சவம் நிறைவு பெற்றதும், மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கடந்த 17-ம் தேதி காலை கொடியேற்றம் நடைபெற்றது. … Read more

‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ – மக்கள் குறை கேட்கும் தமிழக அரசின் புதிய திட்டம் அறிமுகம்

சென்னை: “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள், வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்வர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசினால் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் மக்களைச் சரியாகச் … Read more

விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை தகவல்

சென்னை: “’தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது. சில நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: “விஜயகாந்த் காய்ச்சல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. அனைத்து உடல் செயல்பாடுகள் நிலையாக உள்ளது. இன்னும் சில … Read more

விளாத்திகுளம் பகுதியில் காட்டுப் பன்றிகள் அட்டகாசம்: 500 ஏக்கரில் நிலக்கடலை பயிர்கள் சேதம்

கோவில்பட்டி: விளாத்திகுளம் பகுதியில் காட்டுப் பன்றிகள் அட்டகாசத்தால் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம், நிலக்கடலை பயிர்கள் சேதமடைந்துவிட்டன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். விளாத்திகுளம், எட்டயபுரம், புதூர் பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் இந்தாண்டு ராபி பருவத்தில் மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, பாசி, சோளம், கம்பு, வெங்காயம் உள்ளிட்டவைகளை பயிர் செய்துள்ளனர். இந்நிலையில், இந்தாண்டும் காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தால் ராசாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான நிலக்கடலை பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். … Read more