வானிலை முன்னறிவிப்பு | தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 6 நாட்களுக்கு பரவலாக மழையும், இன்று (செப்.18) 7 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (திங்கள்கிழமை) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. … Read more

16-வது நிதிக் கமிஷனில் புதுச்சேரி சேர வேண்டும்: ஆளுநரும், முதல்வரும் தவறவிட்டால் இனி 7 ஆண்டுகளுக்கு வாய்ப்பில்லை

புதுச்சேரி: 16-வது நிதிக்கமிஷனில் புதுச்சேரி சேர இருக்கும் நல்வாய்ப்பை ஆளுநர் தமிழிசையும், முதல்வர் ரங்கசாமியும் பயன்படுத்துவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவ்வாய்ப்பை தவறவிட்டால் இனி 7 ஆண்டுகளுக்கு வாய்ப்பில்லை என்ற இக்கட்டான தருணத்தில் புதுச்சேரிக்கான நிதிச்சூழல் இருக்கிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசமானது நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நிதி சிக்கல்களால் பாதிக்கப்பட்டு வருகிறது.இது, புதுச்சேரி வளர்ச்சியின் வேகத்தை, குறிப்பிடத்தக்க வகையில் தொடர்ந்து மெதுவாக்குகிறது. மத்திய நிதிக் கமிஷனில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து … Read more

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சந்திரபாபு நாயுடு கைது: வைகோ கண்டனம்

சென்னை: “அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவே ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசால் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். ஒருவேளை குற்றம் நடந்திருந்தால்கூட, விசாரணை நடத்தி, சட்டப்படி அறிவிப்பாணை வழங்கி, முறைப்படி கைது செய்திருக்க வேண்டும். அதைவிடுத்து, முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவரை ஒரு தீவிரவாதி போல கைது செய்தது கண்டனத்துக்குரியது” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, … Read more

காவிரி விவகாரம் | மத்திய அமைச்சருடன் தமிழக எம்.பி.க்கள் குழு செவ்வாய் காலை சந்திப்பு: அமைச்சர் துரைமுருகன் தகவல்

புதுடெல்லி: காவிரி விவகாரத்தில் தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் அடங்கிய குழுவினர் செவ்வாய்க்கிழமை காலை மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்திக்க உள்ளதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். அமைச்சர் துரைமுருகன் தலைமையில், அனைத்து கட்சி எம்பிக்கள் அடங்கிய குழு, இன்று மாலை மத்திய அமைச்சரை சந்தித்து கர்நாடக அரசு இதுவரைதமிழகத்துக்கு அளிக்க வேண்டிய காவிரி நீரை அளிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு தேவையான அறிவுரைகள் வழங்கக் கோரி நேரில் சந்திக்க … Read more

புரட்டாசியில் ஆன்மீக சுற்றுலாவுக்கு வாங்க.. பக்தர்களை அழைக்கும் திமுக அரசு!

Puratasi Spiritual Tourism: எதிர்வரும் புரட்டாசி மாதத்தில் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் புகழ்பெற்ற வைணவக் கோயில்களுக்கு தமிழ்நாடு அரசு ஆன்மீக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. 

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் விநாயகர் சிலைகளை விற்க அனுமதி இல்லை: உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: `பிளாஸ்டர் ஆப் பாரிஸ்’ சிலைகளை விற்க அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த பிரகாஷ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: போலீஸாரும், வருவாய் அதிகாரிகளும் விநாயகர் சிலைகளை விற்கக் கூடாது என உத்தரவிட்டு எனது கடைக்கு சீல் வைத்தனர். நான் … Read more

ADMK vs BJP: இறங்கி அடிக்கும் அண்ணாமலை, குமுறலில் அதிமுக: குழப்பத்தில் எடப்பாடி

அண்ணாமலையின் விமர்சனங்கள் அதிமுகவுக்குள் மிகப்பெரிய கலகத்தை ஏற்படுத்தியிருப்பதால், பாஜக உடனான கூட்டணி வேண்டாம் என்ற முடிவில் அதிமுக மூத்த தலைவர்கள் இருக்க, என்ன முடிவெடுப்பது என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.  

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை; இதுவே எங்கள் நிலைப்பாடு: ஜெயக்குமார் அறிவிப்பு

சென்னை: “பாஜகவுடன் கூட்டணி இல்லை. கூட்டணியைப் பொறுத்தவரையில், பாஜக அதிமுக கூட்டணியில் இல்லை. தேர்தல் வரும்போதுதான் அதுகுறித்து முடிவு செய்யப்படும். அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை.இதுதான் எங்களுடைய நிலைப்பாடு. இனிமேல் அண்ணாமலை எங்களது தலைவர்கள் குறித்து விமர்சனம் செய்தால், கடுமையான விமர்சனங்களை அண்ணாமலை சந்திக்க நேரிடும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை ராயபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “ஒரு கூட்டணியில் இருந்துகொண்டு கூட்டணி … Read more

ரூ.50,000 கொடுத்த சாட்டை துரைமுருகன்… இந்த போர் முடியாது – மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் விஜயலட்சுமி!

Seeman Vijayalakshmi Issue: ஏதோ பொய் சொல்லும் பெண்ணாக என்னை சீமான் சித்தரிக்க முயன்றால் இந்த போர் முடியவே முடியாது என நடிகை விஜயலட்சுமி இன்று வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வரும் இன்னொரு சீன உளவுக் கப்பல் |தென்னிந்தியாவுக்கான ஆபத்தை தடுக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவிருக்கும் ஷி யான் உளவுக் கப்பலுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “சீனாவிலிருந்து புறப்பட்டுள்ள ஷி யான் 6 (Shi Yan 6) என்ற உளவுக் கப்பல் அடுத்த மாதம் இலங்கையில் உள்ள கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களுக்கு வரவிருப்பதாகவும், அங்கு 17 நாட்கள் தங்கியிருந்து ஆராய்ச்சியில் ஈடுபடப் … Read more