ஆதித்யா எல்-1 விண்கலம் ஏவுதல் வெற்றி – அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கு தெலங்கானா ஆளுநர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: சந்திராயன்-3 செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கி வரலாற்றுச் சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள், அடுத்த சாதனையாக சூரியனை ஆய்வுசெய்ய ஆதித்யா எல்-1 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளனர். இது இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படக் கூடிய … Read more

நாம் படித்துவிடக் கூடாது என்பதில் "சனாதனம்" குறியாக இருக்கிறது.. மோடியை தாக்கிய உதயநிதி..

சென்னை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை குலக்கல்வி திட்டம் என்று விமர்சித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாம் படித்துவிடக் கூடாது என்பதில் சனாதனம் உறுதியாக இருக்கிறது என்று கூறினார். மத்திய அரசு அண்மையில் ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்துவதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதனிடையே, இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட அடுத்த நாள் முதலாகவே இதற்கு நாடு முழுவதும் கடும் … Read more

தருமபுரியில் கனமழை – பிடமனேரி நிரம்பி உபரிநீர் வயல்களில் நுழைந்ததால் பயிர்கள் சேதம்

தருமபுரி அருகிலுள்ள பிடமனேரி ஒருநாள் மழையிலேயே நிறைந்து உபரிநீர் விளைநிலங்களில் நுழைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதலே வானில் மேகங்கள் திரண்டு மழைக்கான அறிகுறிகள் தென்பட்டன. மேலும், தொடர்ந்து இடிமுழக்கம் ஏற்பட்டது. மாலையில் மிதமான தூறலுடன் கூடிய மழைய பெய்தது. சற்று நேரம் பெய்து நின்ற மழை மீண்டும் இரவில் மிதமான மழையாக தொடங்கி கனமழையாக வலுத்தது. தருமபுரி, நல்லம்பள்ளி, ஒகேனக்கல் பகுதிகளில் தாழ்வான இடங்களில் குளம்போல் மழைநீர் தேங்கத் … Read more

அதிமுகவுக்கு விரிவாக்கம் தெரியுமா? கலாய்த்து தள்ளிய உதயநிதி – கொந்தளித்த ர.ரக்கள்!

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் அதிமுகவின் பெயரை வைத்தே உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். திமுகவில் ஆக்டிவாக செயல்படும் அமைச்சராகவும், நிர்வாகியாகவும் மாறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இவர் சமீபத்தில் தெரிவித்த அரசியல் கருத்துகள் அனைத்தும் கவனிக்கத் தகுந்தவையாக மாறியுள்ளன. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக குறித்து உதயநிதி சொல்லும் பதில்கள் தக் லைஃபாக உள்ளதென திமுக நிர்வாகிகள் கூறுகின்றனர். பதிலுக்கு எடப்பாடி பழனிசாமி தொடங்கி அதிமுக தலைவர்கள் பலரும் உதயநிதியை குறிவைத்து விமர்சித்து வருகின்றனர். … Read more

எங்களுக்கும் கிடைக்குமா? – காரைக்காலில் காலை உணவு திட்டத்துக்காக காத்திருக்கும் மாணவர்கள்

காரைக்கால்: புதுச்சேரி மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கல்வித் துறை மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2018-ம் ஆண்டு ‘அட்சய பாத்ரா’ என்ற அறக்கட்டளையுடன் கல்வித் துறை செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், புதுச்சேரியில் மட்டும் அந்த அறக்கட்டளை மதிய உணவை வழங்கி வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் கல்வித் துறை மூலமே மாணவர்களுக்கான … Read more

தீவிரவாதிகளை தமிழக அரசு விடுவித்தால் பாஜக வேடிக்கை பார்க்காது.. இறங்கி அடித்த அண்ணாமலை

சென்னை: தீவிரவாதிகளை தமிழக அரசு விடுவித்தால் பாஜக அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும், அப்படி விடுவிப்பதற்கு அரசாங்கத்திற்கு உரிமை கிடையாது எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இந்திய சுதந்திர தினம், பெருந்தலைவர்களின் பிறந்தநாள் ஆகிய தினங்களில் சிறையில் உள்ள கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழக்கம். நீண்டகாலமாக சிறையில் இருப்பவர்கள்; சிறையில் ஒழுக்கமாக நடந்து கொண்டவர்கள் ஆகியோர் அதுபோன்ற தினங்களில் விடுதலை செய்யப்படுவார்கள். அனைத்து மாநிலங்களிலும் இந்த நடைமுறை இருக்கிறது. இந்த சூழலில், கோவை … Read more

விதிமீறல் கட்டிடங்களுக்கு மின்கட்டணம் 10 மடங்கு அதிகமாக வசூலிக்க வேண்டும் – ஐகோர்ட் உத்தரவு

மதுரை: வரைபட அனுமதியை மீறி கட்டிடம் கட்டுவோரிடம் மின் கட்டணம், சொத்து வரி, தண்ணீர் வரியை 5 முதல் 10 மடங்கு அதிகமாக வசூலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த சகோதரர்கள் சங்கர், சுப்பிரமணியன். இவர்கள் கோச்சடை பாஸ்போர்ட் அலுவலகம் எதிரில் 2015-ல் 10896.5 சதுர மீட்டர் இடம் வாங்கினர். அந்த இடத்தில் வணிக வளாகம் கட்ட 23.2.2018ல் வரைபட அனுமதி பெற்றனர். அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டது. இந்நிலையில் வரைபட … Read more

சேலம் பெரியார் பல்கலைக் கழகம் – வகுப்பறை முதல் ஆய்வகம் வரை – வாடகைக்கு : அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

சேலம் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கலையரங்கம், உணவுக்கூடம், கூட்ட அரங்குகள், கணினி ஆய்வகம், வகுப்பறைகள் ஆகியவை வாடகைக்கு விடப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. அவற்றுக்கு ஒரு நாளைக்கு வாடகையாக ரூ.1200 முதல் ரூ.40,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஒரு பல்கலைக்கழகம் அதன் கலையரங்கம் தொடங்கி வகுப்பறை வரை அனைத்தையும் வாடகைக்கு விடுவதாக அறிவிப்பது இதுவே முதல்முறையாகும். உயர்கல்வி வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் கல்வி … Read more

“சட்ட அனுமதிகளை பெற்றே ஆதியோகி சிவன் சிலையை கட்டினோம்” – ஈஷா யோகா புதிய விளக்கம்

சென்னை: “கோவை மாவட்ட ஆட்சியரின் அனுமதி உட்பட தேவையான சட்ட அனுமதிகளை பெற்றே ஆதியோகி சிவன் சிலையை கட்டியுள்ளோம்” என ஈஷா யோகோ மைய நிர்வாகி தினேஷ் ராஜா விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் ஈஷா யோகா சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஈஷா யோக மையத்தின் நிர்வாகி தினேஷ் ராஜா கூறுகையில், “கோவையின் மிக முக்கிய ஆன்மிக அடையாளமாக விளங்கும் ஆதியோகி சிவன் சிலை கடந்த 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது. பொதுவாக, இதுபோன்ற சிலைகளை நிறுவுவதற்கு … Read more

ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டம்.. அன்றே கணித்த கருணாநிதி.. தீயாக பரவும் ஆடியோ.. ஓபனா சொல்லிருக்காரு

சென்னை: ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்தை திமுக கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், முன்னாள் திமுக தலைவரும், மறைந்த தமிழக முதல்வருமான கருணாநிதி இந்த திட்டத்தை வெகுவாக ஆதரித்து பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்தை செயல்படுத்துவதற்கான மசோதாவை வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்யக்கூடும் என தகவல்கள் பரவி வருகின்றன. இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் … Read more