வறண்டே கிடந்த வைகையின் துணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: வியந்து பார்க்கும் பொதுமக்கள்
தேனி: முற்றிலும் மழைநீரையே சார்ந்துள்ள வைகையின் துணை ஆறுகள் ஆண்டின் பல மாதங்கள் வறண்டே கிடக்கும். தற்போது பெய்து வரும் தொடர்மழையினால் இந்த ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதிகளை கடந்து செல்லும் இந்த நீரோட்டத்தை பலரும் ஆர்வமுடன் வியந்து பார்த்து வருகின்றனர். தேனி மாவட்டம் வருசநாடு, அரசரடி மேற்குத் தொடர்ச்சி மலையில் மூலவைகை உற்பத்தியாகிறது. ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் இந்த நீர் தேக்கப்பட்டு தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் … Read more