டிடிவி.தினகரன் திவாலானவர் என்ற நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் – உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வாதம்

சென்னை: டிடிவி. தினகரன் ரூ. 28 கோடி அபராதத்தை செலுத்தவில்லை என்பதால் திவாலானவர் என்ற நடவடிக்கையை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகி வாதிட்டார். அமமுக பொதுச் செயலாளரான முன்னாள் எம்பி டிடிவி.தினகரனின் வங்கி கணக்கில் கடந்த 1995-96 காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்து 62.61 லட்சம் அமெரிக்க டாலர் அங்கீகாரமற்ற முகவர் மூலமாக டெபாசிட் ஆனதாகவும், பின்னர் அவர் அந்த தொகையை இங்கிலாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக … Read more

நீட் தேர்வு.. "மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளட்டும்".. சவுக்கு சங்கர் ஓபன் டாக்

சென்னை: நீட் தேர்வால் தமிழ்நாட்டில் மாணவர்கள் தற்கொலை தொடர்ந்து வரும் நிலையில், பிரபல அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “நீட் தேர்வால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளட்டும்” என அவர் தெரிவித்துள்ளார். மேலும், எந்த சூழ்நிலையிலும் நீட் தேர்வை யாராலும் ரத்து செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். ​கொந்தளிக்க வைக்கும் தற்கொலைகள்:நீட் தேர்வில் இரண்டு முறை தோல்வி அடைந்ததால் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ்வரன் … Read more

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு 1.63 கோடி விண்ணப்பங்கள்

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், வரும் செப்.15-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இதுவரை நடந்த முகாம்கள் வாயிலாக மொத்தம் 1.63 கோடி விண்ணப்பங்கள் முகாம் வாயிலாக பெறப்பட்டுள்ளன. களஆய்வுக்கு வரும் அலுவலர்களுக்கு விண்ணப்பதாரர்கள் உரிய தகவல்களை அளித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. Source link

மக்களே, வெளுத்து வாங்கப் போகும் கனமழை: எந்தெந்த மாவட்டங்கள்? முழு விவரம்!

தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வந்த நிலையில் கனமழைக்கான அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது இன்று வெளியான அந்த அறிவிப்பில், தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (ஆகஸ்ட் 21) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஆகஸ்ட் 22ஆம் தேதி, தமிழ்நாடு, … Read more

டாஸ்மாக் கடைகளில் விலைப் பட்டியல் உள்ளதா? – வழக்கறிஞர்கள் குழு ஆய்வுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலைப் பட்டியல் வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து வழக்கறிஞர்கள் குழு ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மதுபான விற்பனை நேரத்தை குறைக்கக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் கே.கே.ரமேஷ் என்பவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘மதுபான விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணியிலிருந்து இரவு 8 மணி வரை என குறைக்க வேண்டும். 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும். மது … Read more

கல்லூரிக்குள் வெடிகுண்டு வீச்சு.. "திமுக அரசுக்கு இதைவிட தலைகுனிவு வேண்டுமா..?" காட்டமாக பேசிய எடப்பாடி

சென்னை: சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், “தலைநகரில் இப்படியொரு சம்பவம் நடைபெற்றதை விட திமுக அரசுக்கு வேறென்ன தலைகுனிவு இருக்க முடியும்” எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் சமீபகாலமாக கொலை, கொள்ளை, ரவுடிகளின் அராஜகம் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல், கல்லூரி மாணவர்களின் அடாவடித்தனமும் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. ரயிலிலும், பஸ்ஸிலும் கத்தி, வாளை எடுத்துக்கொண்டு … Read more

சாத்தான்குளம் கொலை வழக்கு: எஸ்ஐ ஜாமீன் மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 3 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவர் மகன் பெனிக்ஸ் ஆகியோர் 2020-ல் விசாசரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு, அடித்து கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர்கள் … Read more

ச்சே ரஜினி மேல எவ்ளோ மரியாத வச்சிருந்தோம்.. அவரு மட்டும் ஆட்சிக்கு வந்திருந்தா? – ஒரே போடாக போட்ட திருமாவளவன்

ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்ததை கடுமையாக விமர்சித்த , மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்தார். நடிகர் ரஜினிகாந்த் இயமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்ட நிலையில், வட இந்திய கோயில்களிலும் சாமி தரிசனம் செய்தார். இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் உத்தர பிரதேச தலைநகர் லக்னோவை அடைந்த ரஜினிகாந்த், அங்கு முதல்வர் யோகி ஆதித்யாநாத்தை சந்தித்தார். காரில் இருந்து கீழே இறங்கியதும் வீட்டு வாசலில் வரவேற்க நின்றிருந்த முதல்வர் யோகி ஆதித்யாநாத்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் … Read more

“யோகியை சந்தித்தது பிரச்சினை இல்லை; ஆனால், காலில் விழுந்தது…” – ரஜினி குறித்து திருமாவளவன் பேச்சு

நெல்லை: “யோகி ஆதித்யநாத்தை சந்தித்தது பிரச்சினை இல்லை. ஆனால், அவரது காலில் விழுந்து ரஜினி வணங்கியுள்ளார். அதற்கு என்ன அர்த்தம்?” என ரஜினிகாந்தின் செயல் குறித்து திருமாவளவன் பேசியுள்ளார். நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து நெல்லையில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “சிறுபான்மையினர்களுக்கு எதிரான யோகி ஆதித்யநாத் காலில் விழுகிறார் ரஜினி. பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. அவர் கட்சி தொடங்கி தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்திருந்தால், யோகி ஆதித்யநாத் … Read more

நாட்டு வெடி குண்டு வீச்சின் பின்னணியில் யார்? திரியைக் கொளுத்தும் அண்ணாமலை

சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள குருநானக் கல்லூரியில் இரு துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு தரப்பு நாட்டு வெடிகுண்டை வீசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் கல்லூரியில் பாட வேளையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டது என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் கல்லூரி மாணவர்கள் மத்தியில் விசாரிக்கும் போது வேறு மாதிரியாக கூறுகின்றனர். பூண்டு … Read more