உப்பூர் மின்திட்ட இடத்தை தனியாருக்கு வழங்க மின்வாரியம் திட்டம்?

சென்னை: உப்பூர் மின் திட்டத்தை தொடர்வது குறித்து அரசிடம் இருந்து எவ்வித பதிலும் வராததால், அந்த திட்டத்துக்கான நிலத்தை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை அமைக்க உள்ள தனியார் நிறுவனத்துக்கு வழங்க மின்வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் 800 மெகாவாட் திறனில் இரு அலகுகள் கொண்ட அனல்மின் நிலையம் அமைக்கும் பணியை ராமநாதபுரம் மாவட்டம், உப்பூரில் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கியது. இத்திட்டத்துக்கு 982 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. இதில் பெரும்பாலும் கையகப்படுத்தப்பட்டது. … Read more

காலை உணவுத்திட்ட விரிவாக்கம்: பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவு!

காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது சுதந்திர தின உரையில் அறிவித்தார். இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை சார்பாக அடுத்தடுத்த பணிகள் வேகமெடுத்துள்ளன. கல்வியும், சுகாதாரமும் தான் இந்த அரசின் இரு கண்கள் அதற்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் பேசி வரும் நிலையில் நேற்று அவர் அறிவித்த காலை உணவுத் திட்ட விரிவாக்கம் என்பது, கல்வியையும், சுகாதாரத்தையும் உள்ளடக்கிய ஒன்று … Read more

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு – இன்று வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாகவும், 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சிகாரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஆக. 17)ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, நாளை … Read more

மாணவன் ஃபயாஸ்தின் யாருடைய கல்லூரியில் படிக்கிறார் தெரியுமா..? திடீரென டார்கெட் செய்த அண்ணாமலை

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவன் ஃபயாஸ்தின் குரல் கொடுத்து வரும் நிலையில், அவர் யாருடைய மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவேசமான மாணவன்நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவன் ஜெகதீஸ்வரனின் நண்பர் தான் இந்த ஃபயாஸ்தீன். நீட் தேர்வால் தனது நண்பனும், அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டதை ஜீரணிக்க முடியாத ஃபயாஸ்தீன், நீட் தேர்வுக்கு எதிராக ஆவேசமாக … Read more

மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் சுதந்திர தினத்தையொட்டி விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு தேநீர் விருந்து அளிக்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வல்லவன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு சிறுதானிய இனிப்பு உருண்டையை தியாகிகளுக்கு வழங்கி கவுரவித்தார். அப்போது அவர் பேசியதாவது: விடுதலை போராட்ட வீரர்கள் பல்வேறு துன்பங்களை எல்லாம் அடைந்து, தங்களது உயிரை துச்சமென எண்ணி பாடுபட்டு வாங்கி கொடுத்த சுதந்திரத்தை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். … Read more

ரஜினி ரசிகர்களுக்கு பிராக்கெட் போட்ட கடம்பூர் ராஜூ… அதிமுக மாநாட்டிற்கு கூட்டத்தை திரட்ட பலே பிளான்!

அதிமுகவின் பொன்விழா எழுச்சி மாநாடு வரும் 20 ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. மதுரை வளையங்குளம் பகுதியில் நடைபெறும் இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தடல்புடலாக நடைபெற்று வருகிறது. மாநாட்டிற்காக வளையங்குளத்தில் 5 லட்சம் சதுர அடியில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 300 ஏக்கரில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு வருகிறது. மாநாட்டுக்கான முன்னேற்பாடு பணிகளை முன்னாள் அமைச்சர்கள் பார்த்து பார்த்து செதுக்கி வருகின்றனர். மாநாட்டிற்கான அழைப்பிதழ்களை மதுரை மீனாட்சியம்மன், மதுரையில் உள்ள பள்ளி வாசல்கள், வேளாங்கண்ணி தேவாலயம் … Read more

பிரதமர் மோடி ஹாட்ரிக் வெற்றியை பெறுவார் – பாஜக தமிழக இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி நம்பிக்கை

தருமபுரி: பிரதமர் மோடி ஹாட்ரிக் வெற்றியை பெறுவார் என தருமபுரியில் நடந்த, ‘என் மண் என் தேசம்’ அமிர்த கலச சேகரிப்பு நிகழ்ச்சியின்போது பாஜக தமிழக இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பேசினார். இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் முடிவுற்றதை கொண்டாடும் வகையில் மத்திய அரசு, ‘அம்ரித் மகோத்சவ்’ என்ற விழாவை கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொண்டாடி வருகிறது. அதன் ஒருபகுதியாக தற்போது, ‘என் மண் என் தேசம்’ இயக்கம் மூலம் நாடு முழுக்க அமைந்துள்ள சுதந்திர … Read more

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர வேண்டுமா? உயர் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவது தொடர்பாகவும், முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாகவும் தமிழ்நாடு உயர் கல்வித்துறை முக்கிய இரு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இளநிலை பட்டபடிப்பு மாணவர் சேர்க்கை! தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24ஆம் ஆண்டிற்கான நடப்பு கல்வி ஆண்டில் இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை சேர்க்கை முடிவடைந்தது. இந்நிலையில், மேலும் சில அரசு கல்லூரிகளில் முழுமையாக … Read more