ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஏவப்படும் ஒன்வெப் நிறுவனத்தின் 36 இணைய சேவை செயற்கைக்கோள்கள்

சென்னை: நம் நாட்டுக்கு தேவையான செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகைராக்கெட்டுகள் மூலம் விண்ணில்நிலைநிறுத்துகிறது. இதில் வணிகரீதியான செயற்கைக்கோள்கள் பெரும்பாலும் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலமே விண்ணில் ஏவப்பட்டன. பிஎஸ்எல்வி ராக்கெட்டில் அதிகபட்சம் 1,750 கிலோ வரை மட்டுமே செயற்கைக்கோள்களை ஏவ முடியும். ஆனால், ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரை செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும். இதையடுத்து வர்த்தக செயற்கைக்கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-3 (எல்விஎம்-3) ராக்கெட் மூலம் செலுத்தும் … Read more

கருப்பசாமிக்கு சாராயத்தால் அபிஷேகம் செய்து கிடா வெட்டி வழிபாடு!

திண்டுக்கல் அடுத்த ரெட்டியார் சத்திரம் அருகே உள்ள இராமலிங்கம்பட்டியில் ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் 15 அடி உயரத்தில் காவல் தெய்வமான சங்கிலி கருப்பு, சிலை உள்ளது.  இந்த கோவிலில் ஒவ்வொரு அமாவாசை அன்று சங்கிலி கருப்புக்கு நள்ளிரவில் அபிஷேகமும், சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டு வருகிறது.  அதன் படி (21-3-23) நேற்று அமாவாசை முன்னிட்டு சிறப்பு வழிபாடு கோவிலில் நடைபெற்றது.   பால், தயிர், சந்தனம், மஞ்சள், குங்குமம் ஆகிய 5 நறுமணப் பொருட்கள் கொண்டு … Read more

கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி 3வது நாளாக பாலை தரையில் கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம்

மதுரை: கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பாலை தரையில் கொட்டி உற்பத்தியாளர்கள் 3வது நாளாக போராட்டம் நடத்திவருகின்றனர். விலையை ரூ.7 முதல் ரூ.10 வரை உயர்த்தக்கோரி உசிலம்பட்டி ஏழுமலை அருகே பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி: நேருக்கு நேர் மோதிக்கொண்ட கார்கள் – சாலை விபத்தில் 3 பேர் பலி

மாத்தூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சேலத்தில் இருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்ற காரும், காரைக்குடியில் இருந்து திருச்சி வழியாக வந்த காரும் திருச்சி மாவட்டம் மாத்தூர் அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் மகிஷா ஸ்ரீ (12), சுமதி (45) டிரைவர் கதிர் (47) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த மாத்தூர் போலீசார், … Read more

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எக்ஸ்.பி.பி. கொரோனா பாதிப்பு.. செயற்கை சுவாச கருவிகள் பொருத்தம்

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எக்ஸ்.பி.பி. கொரோனா பாதிப்பு.. செயற்கை சுவாச கருவிகள் பொருத்தம் Source link

நீலகிரி : சுடு தண்ணியில் விழுந்த குழந்தை – மருத்துவர் இல்லாததால் உயிரிழந்த சோகம்..!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். இவருடைய மகனுக்கு வருகிற 27ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதால், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர்களது உறவினர்கள் அனைவரும் வந்துள்ளனர்.  இந்த நிலையில், நேற்று இரவு திருமண வீட்டில் ஹீட்டர் மூலம் வாளியில் தண்ணீரை சுட வைத்து இருந்த போது மூன்று வயது சிறுமி ஒருவர் எதிர்பாராத விதமாக அந்த தண்ணீரில் தவறி விழுந்துள்ளார். இதைப்பார்த்த உறவினர்கள் சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து … Read more

வேளாண் பட்ஜெட் குறித்து ஓபிஎஸ் கருத்து..!!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளில் மிக முக்கியமானதாக கருதப்படும் வாக்குறுதிகளான நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும், கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் போன்றவை இந்த ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் இல்லாதது விவசாயிகளிடையே பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. தற்போதுள்ள விலைவாசியைக் கருத்தில் கொண்டு பார்த்தால், 2021ம் ஆண்டு திமுகவினால் வாக்குறுதி அளிக்கப்பட்ட நெல் … Read more

நம்மைக் காக்கும் தண்ணீரை நாம் காக்க வேண்டும்: உலக தண்ணீர் தினத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

சென்னை: ஆண்டுதோறும் மார்ச் 22ஆம் உலக தண்ணீர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் மக்களுக்கு தண்ணீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: உயிர் வாழ காற்று எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியமானது தண்ணீர். இப்பூவுலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையானது தண்ணீர். உலகம் எந்தளவுக்கு உயர்ந்தாலும், மாறினாலும், மாறுதலை அடைந்தாலும் தண்ணீரின் தேவை என்பது மாறாது. அதனால் தான் நீரின்றி அமையாது உலகு என்றார் அய்யன் … Read more

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நுரையீரல் பாதிப்பு! செயற்கை சுவாசம், தீவிர சிகிச்சை!

காங்கிரஸ் எம்எல்ஏ., ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதிபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை தெரிவித்து இருக்கிறது. கடந்த 15ம் தேதி நெஞ்சு வலி காரணமாக நெஞ்சுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட ஈரோடு கிழக்கு சட்டமன்ற … Read more