அரியலூர் அருகே பரிதாபம்.! சிமெண்ட் லாரி மோதி தந்தை-மகன் உயிரிழப்பு.!

அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் லாரி மோதி தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் தெற்கு சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் விவசாயி சந்திரகாசன் (52). இவரது மகன் திருமாறன்(13) அரியலூரில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை சந்திரகாசன் தனது மகனை பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அப்பொழுது காட்டுக்கொட்டாய் அருகே சென்ற போது அவ்வழியாக சிமெண்ட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக … Read more

ரேஷன் பொருட்கள் விநியோகத்தில் நாட்டிலேயே தமிழகம் முதல் நிலை: அமைச்சர் ஐ.பெரியசாமி

கோவை: கோவையில் நேற்று நடந்த அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு கூட்டுறவுத்துறையின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக உள்ளன. தமிழக அரசின் எல்லா துறைகளும் சிறப்பாக செயல்படுகின்றன. இந்தியாவிலேயே ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்வதில் தமிழகம் முதல் நிலையில் இருக்கின்றது. கல்வித்துறைக்கும், கூட்டுறவுத் துறையின் மூலம் நிறைய உதவிகள் செய்துள்ளோம். கரோனா காலத்தில் ரூ.4 ஆயிரம் நிவாரணம் 99.9 சதவீதம் கூட்டுறவு … Read more

மணமேடையில் தாலிகட்டும் நேரத்தில் திருமணத்தை தடுத்து நிறுத்திய சிறுமி: திருவாரூர் அருகே பரபரப்பு

முத்துப்பேட்டை: மணமேடையில் தாலிகட்டும் நேரத்தில் திருமணத்தை மணப்பெண்ணான சிறுமி தடுத்து நிறுத்திய சம்பவம் திருவாரூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்த 30 வயதான வாலிபருக்கும், அவரது மாமா மகளான 17 வயது சிறுமிக்கும் திருமணம் செய்ய கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் திருமண நாளான நேற்று ஒரு தனியார் திருமண மண்டபத்தில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்தது. காலை … Read more

போலி ரசிகர்கள் அல்ல.. தன்னார்வலர் முதல் உணவு விற்பனையாளர் வரை.. கத்தார் கால்பந்து உலக கோப்பையில் இந்தியர்கள்!

போலி ரசிகர்கள் அல்ல.. தன்னார்வலர் முதல் உணவு விற்பனையாளர் வரை.. கத்தார் கால்பந்து உலக கோப்பையில் இந்தியர்கள்! Source link

3-வது முறையாக சென்னையில் 4 இடங்களில் என்ஐஏ சோதனை: ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்பா என விசாரணை

சென்னை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, ஐஎஸ்ஐஎஸ் சர்வதேச பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பில் இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், சென்னையில் 4 இடங்களில் என்ஐஏ, மாநகர போலீஸார் சோதனை நடத்தினர். கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக்.23-ம் தேதி கார் சிலிண்டர் வெடித்ததில், காரை ஓட்டி வந்த கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (25) என்பவர் உயிரிழந்தார். பின்னர், அவரது வீட்டில் வெடிபொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அவரது … Read more

அமைந்தகரை மேம்பால தடுப்பு சுவற்றில் பைக் மோதி மதுரை இன்ஜினியரிங் மாணவர் பலி: பிஇ மாணவர்கள் 2 பேர் கவலைக்கிடம்

அண்ணாநகர்: அமைந்தகரை மேம்பால, தடுப்பு சுவரில் பைக் மோதியதில் சென்னையில் இன்ஜினியரிங் படிக்கும் மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் பரிதாபமாக பலியானார். மேலும், வேலூர், விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 2 இன்ஜினியரிங் மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆலன் ஜெர்மான்ஸ்(21). வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தருண்குமார்(21) மற்றும் விருத்தாசலத்தை சேர்ந்தவர் பிரவின்குமார் (21). இவர்கள் 3 பேரும் சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்து, … Read more

மரக்காணம் அருகே மீனவ கிராமத்தில் இரு தரப்பினரிடையே மோதல்.. 4 பேருக்கு மண்டை உடைப்பு..!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே மீனவ கிராமத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில், கைப்பணி குப்பத்தைச் சேர்ந்த இளையராஜா என்பவர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இதுகுறித்து இளையராஜாவிடம் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் கேட்டதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இருதரப்பினரையே இன்று ஏற்பட்ட மோதலில், 4 பேருக்கு மண்டை உடைந்ததால் … Read more

விடுதலையான ஜெயக்குமாருக்கு திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை

திருச்சி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருந்து விடுதலையான முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாக சிறப்பு முகாம் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் அங்கு சென்று இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்ல அழைத்தனர். ஆனால் ராபர்ட் பயஸ் தனக்கு தொண்டை வலி மட்டுமே இருப்பதாகக் … Read more

கம்போடியாவில் சித்ரவதை அனுபவித்த ராமநாதபுரம் வாலிபர் மீட்பு மாடல் அழகி போல நடிக்கணும் முடிந்தளவுக்கு பணம் கறக்கணும்: சமூகவலைத்தள மோசடி கும்பல் குறித்து பகீர் தகவல்

ராமநாதபுரம்: மாடல் அழகி போல் அமெரிக்கர்களிடம் பேசி பணம் பறிக்க சொன்னார்கள் என்று, கம்போடியாவில் இருந்து மீட்கப்பட்ட ராமநாதபுரம் வாலிபர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் அருகே  பிரபுக்களூர் கிராமத்தை சேர்ந்தவர் நீதிராஜன். மெக்கானிக்கல் டிப்ளமோ முடித்துள்ளார்.   டேட்டா என்ட்ரி வேலை வாங்கி தருவதாக கடந்த ஜூன் மாதம் கம்போடியா அழைத்துச் செல்லப்பட்ட இவர், சைபர் கிரைம் கும்பலிடம் சிக்கி பரிதவித்தார். தன்னை மீட்கக் கோரி இமெயில் மூலம் புகார் அளித்தார். தமிழக அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாக, … Read more

டிராக்டருக்கு ரூ.5 லட்சம், வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க ரூ.10 லட்சம் மானியம்.. தமிழக அரசு அறிவிப்பு

டிராக்டருக்கு ரூ.5 லட்சம், வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க ரூ.10 லட்சம் மானியம்.. தமிழக அரசு அறிவிப்பு Source link