சசிகலாவுடன் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திடீர் சந்திப்பு

தஞ்சாவூர்: அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் என மீண்டும் பிரிவினை ஏற்பட்டுள்ள நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கமும், சசிகலாவும் சந்தித்துக் கொண்ட நிகழ்வு தஞ்சை அருகே நடந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே காவாரப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் இன்று காரில் சென்று கொண்டிருந்தார் .அப்போது மன்னார்குடியில் இருந்து ஒரத்தநாடு நோக்கி ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் மற்றொரு காரில் வந்து கொண்டிருந்தார். திடீரென இரண்டு கார்களும் … Read more

மருத்துவப் படிப்பு இல்லாவிடில் என்ன? மாணவர்களுக்கு வைகோ அட்வைஸ்!

மருத்துவப் படிப்பு இல்லாவிடில் இன்னும் எத்தனையோ படிப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்றை தேர்வு செய்து பயின்று வாழ்வில் உயர முயற்சிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். நீட் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் இது தொடர்பாக வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னை, சூளைமேடு பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநரான கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் தனுஷ் கடந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. … Read more

கோவை அருகே அதிகாலை விபத்து கார் கிணற்றில் பாய்ந்து கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி: ஓணம் பண்டிகை கொண்டாடி திரும்பியபோது சோகம்

தொண்டாமுத்தூர: கோவை அருகே  நேற்று அதிகாலை கிணற்றில் கார் கவிழ்ந்ததில் ஓணம் பண்டிகை கொண்டாட சென்ற கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள். கோவை வடவள்ளியை சேர்ந்தவர்கள் ரோஷன் (18), ஆதர்ஷ் (18), ரவி (18), நந்தனன் (18). இவர்கள் 4 பேரும் நண்பர்கள். கோவையில் வெவ்வேறு கல்லூரிகளில் படித்து வந்தனர். ரோஷன், நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் கோவை சிறுவாணி ரோட்டில் உள்ள ஒரு கிளப்பில் ஓணம் பண்டிகை கொண்டாட காரில் … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்: ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி … Read more

நீட் தற்கொலை: ஒரே கையெழுத்தில்… 'ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்' – ஈபிஎஸ் கண்டனம்

தேர்வை ஒழிப்பதாக திமுக பொய் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த நிலையில், அப்பாவி மாணவச் செல்வங்களின் தற்கொலைகள் தொடரும் அவலம் என எதிர்க்கட்சி தலைவர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் நடப்பது ஆட்சியா? காட்சியா? என்று தெரியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சி என்று கூறிக்கொண்டு, ஒரு காட்டாட்சி தர்பார் நடத்துவதன் கொடுமை தாங்காமல் வெந்து மடியும் மக்கள், இந்த விடியா திமுக ஆட்சி, என்று ஒழியும் என்று … Read more

வாலாஜாபாத் பேரூராட்சி 10-வது வார்டில் மூடி கிடக்கும் நியாய விலைக்கடை; பேரூராட்சி தலைவர் நேரில் ஆய்வு

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சி 10வது வார்டில் உள்ள பயன்பாடின்றி மூடி கிடக்கும் நியாய விலைக்கடையை பேரூராட்சி மன்ற தலைவர் இல்லாமல்லி நேற்று ஆய்வு செய்தார். வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சியின், 1வது வார்டு பகுதியில் 1300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அரசின் நியாயவிலை கடையில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, சக்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள நேரு நகர் பகுதிக்கு சென்று வந்தனர். … Read more

காரைக்கால் மாணவர் மரணம்: சிகிச்சையில் அலட்சியம் காட்டியதாக மருத்துவர்கள் இருவர் பணியிடைநீக்கம்

புதுச்சேரி: காரைக்கால் பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் அரசு மருத்துவர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உயிரைக் காக்கும் பணியில் அலட்சியம் காட்டாமல் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை தரவேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்தியுள்ளார். புதுவை மாநிலம் காரைக்காலை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பாலமணிகண்டன். 8-ம் வகுப்பு படிக்கும் பாலமணிகண்டன் வகுப்பிலும், போட்டிகளிலும் முதலிடம் பிடித்து வந்தார். இதனால் சக மாணவியின் தாயார் சகாயராணி விஷம் கலந்த குளிர்பானத்தை வாட்ச்மேனிடம் கொடுத்தனுப்பினார். இதை அருந்திய பாலமணிகண்டன் மயங்கிவிழுந்ததால் … Read more

வாய்ச் சவடால் விட்ட திமுக: எடப்பாடி பழனிசாமி தாக்கு!

நீட்டை ஒழிப்போம் என்று வாய்ச் சவடால் விட்டது தவறுதான் என்பதை ஒப்புக்கொண்டு, மாணவச் செல்வங்கள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டதற்கும், அவர்களை இழந்து பரிதவிக்கும் பெற்றோர்களின் துயரத்திற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் நடப்பது ஆட்சியா? காட்சியா? என்று தெரியாமல் மக்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சி என்று கூறிக்கொண்டு, ஒரு காட்டாட்சி தர்பார் நடத்துவதன் கொடுமை தாங்காமல் வெந்து மடியும் மக்கள், … Read more

பெரியபாளையம் அருகே 100 ஆண்டுகளுக்கு பிறகு அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

பெரியபாளையம்: முக்கரம்பாக்கம்  கிராமத்தில் பழமை வாய்ந்த கிராம தேவதை செல்லியம்மன் மற்றும் திரிபுரசுந்தரி சமேத முக்காண்டீஸ்வரர் ஆலயத்தில் 100 ஆண்டுகளுக்கு பிறகு  கும்பாபிஷேகம் நடந்தது. கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெரியபாளையம் அருகே  முக்கரம்பாக்கம் கிராமம் உள்ளது. இங்கு,  சுமார் 400 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த கிராம தேவதை செல்லியம்மன் மற்றும் திரிபுரசுந்தரி சமேத முக்காண்டீஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோயிலில் கடந்த 1925ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.  இதனையடுத்து கிராம மக்கள் பங்களிப்புடன் ஆலய புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 100 … Read more

‘ரேஷனே இல்லாத புதுச்சேரி… மாநில உரிமையை மீட்க செப்.20 முதல் 200 கி.மீ பிரசார நடைபயணம்’ – சிபிஎம்

புதுச்சேரி: “நாட்டிலேயே ரேஷனே இல்லாத மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ள சூழலில் தமிழக, கேரள மாநிலங்களில் ரேஷனில் வழங்கும் பொருட்களை வைத்து மாநில உரிமை மீட்க, வரும் செப்டம்பர் 20 முதல் 26 வரை 200 கி.மீ பிரசார நடைபயணம் மேற்கொள்ளப்படும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் இன்று கூறியது: ”சட்டப்பேரவைத் தேர்தலின்போது என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அளித்த வாக்குறுதிகளை … Read more