ஸ்டாலின் இப்படி செய்யலாமா? கொடுத்த வாக்கை மறந்துட்டீங்களே- குமுறும் ஆசிரியர்கள்!

சென்னையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்ற ஜாக்டோ – ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் , பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர பணியாளர்கள் 60 வயது வரை பணியாற்றவும், பணி மாறுதலும் வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பணி நிரந்தரம் என்ற விஷயத்தை முதல்வர் தவிர்த்து விட்டார். இதனால் பகுதி நேர ஆசிரியர்கள் மிகுந்த அதிருப்தி அடைந்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் … Read more

மு.க. ஸ்டாலின் வாழ்க – பாரதியார் நினைவு நாளில் இளையராஜா புகழாரம்

மகாகவி பாரதியாரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவைப் போற்றும் வகையில் பலரும் பாரதியாரின் கவிதைகளை பகிர்ந்து மரியாதை செலுத்திவருகின்றனர். இதற்கிடையே பாரதியார் இறந்தநாளான செப்டம்பர் 11ஆம் தேதி இனி மகாகவி நாள் என அழைக்கப்படுமென்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இந்நிலையில் இசையமைப்பாளர் இளைஞானி தனது ட்விட்டர் பக்கத்தில் பாரதியார் நினைவு நாளை மகாகவி நாளாக அறிவித்த தமிழ்நாடு அரசு வாழ்க. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்க என பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர் … Read more

ஒரே மேடையில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர், மாணவர்

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பன்னாள் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் மோகனசுந்தரம் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 1992ம் ஆண்டு ஆசிரியராக பணியில் சேர்ந்து 8 பள்ளிகளில் கணித ஆசிரியராக பணியாற்றி 7,000 மாணவர்களுக்கு கணிதத்தை எளிமையாக கற்று கொடுத்து அரசு தேர்வில் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சியடைய வைத்து சாதனை படைத்தார். இதனால் தலைமை ஆசிரியர் மோகனசுந்தரத்துக்கு தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தது. நல்லாசிரியர் சான்றிதழுடன் அரசு வழங்கிய … Read more

'விடுதலை போராட்டம் to ஒடுக்கப்பட்டோரின் உரிமை குரல்' – யார் இந்த இம்மானுவேல் சேகரன்?

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் 65-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். யார் இந்த இமானுவேல் சேகரன்? ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் செல்லூர் எனும் கிராமத்தில் 1924ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி அன்று பள்ளி ஆசிரியரான வேதநாயகம் – ஞானசவுந்தரி ஆகியோரின் மூத்த மகனாகப் பிறந்தார் இம்மானுவேல் சேகரன்.  இளம் வயதிலேயே இந்திய சுதந்திரத்துக்காக குரல் கொடுக்கத் துவங்கினார் … Read more

பெரியார் மண்ணை விட்டு செல்வதில் வருத்தம் : கேரளா சென்றார் ராகுல்

சோகத்துடன் பெரியார் மண்ணில் இருந்து பிரிந்து செல்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமை யாத்திரையை  கன்னியாகுமரியில் தொங்கிய ராகுல் காந்தி தொடர்ந்து 4 நாட்களாக தமிழகத்தில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு கேரள மாநிலத்திற்குச் சென்றார். தமிழகத்தில் தனது  யாத்திரை நிறைவு செய்த அவர்  தமிழக எல்லையான தளச்சான் விளையில் இறுதி உரையாற்றினார்.  அப்போது பேசிய அவர் பாஜக நாட்டை பிளவுபடுத்தி வருகிறது. ஊடகங்களையும் இது கையில் எடுத்துள்ளது என்று கூறினார் மேலும் பேசிய அவர் பெரியார் … Read more

நடிகர்களுக்கு எல்லாம் தெரியும் என நினைக்காதீர்கள் – நடிகர் சத்யராஜ்

ஈரோட்டில், உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி, மனதின் மையம் அறக்கட்டளை சார்பில் நேசம் என்ற தற்கொலை தடுப்பு மையம் தொடங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக நடிகர் சத்தியராஜ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில், தற்கொலைகள் குறித்து செய்தியாளர்கள் சத்தியராஜிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு சத்யராஜ், நடிகர்களுக்கு எல்லாம் தெரியும் என நினைக்காதீர்கள். சமூகத்தில் மிகப்பெரிய தவறே நடிகர்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பதுதான் என்ற அவர், நடிகர்களுக்கு சாப்பாடு போடுங்கள், தலையில் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள் … Read more

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தெற்கு ஒடிசா பகுதிகளில் நிலவுகிறது என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இன்றும் நாளையும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் ஒரு சில பகுதிகளில் … Read more

மதுரையில் மூன்றாம் தர தக்காளி கிலோ ரூ.50: காய்கறிகள் விலை உயர்வால் மக்கள் தவிப்பு

மதுரை: தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாகவும் கர்நாடக மாநிலத்தில் கொட்டித் தீர்த்து வரும் கனமழையாலும் காய்கறிகள் வரத்து குறைந்ததால் அத்தியாவசிய காய்கறிகள் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. மதுரையில் நேற்று தக்காளி கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரையும், கேரட் ரூ.100க்கு நேற்று விற்பனையானது. தமிழகத்தில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு அடுத்து மதுரை பரவை காய்கறி மார்க்கெட், மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் போன்றவை மிகப்பெரிய சந்தைகளாக திகழ்கின்றன. பரவையில் மொத்த கொள்முதலுக்கு மட்டுமே காய்கறிகள் விற்பனை … Read more

செந்தில் பாலாஜிக்கு செக்மேட்… ஸ்டாலினுக்கு தெரியலயா? புரியலயா? பாஜக பளீர்!

முதல்வர் தலைமையிலான திமுக அரசின் மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜிக்கு எதிரான பண மோசடி வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டரில், அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து 2019ல் அன்றைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளை உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு உறுதி செய்துள்ளது இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தெரியவில்லையா? புரியவில்லையா? தெரிந்திருந்தால், புரிந்திருந்தால் இந்நேரம் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து … Read more

கோத்தகிரி: 2 சிறுத்தைகள் 2 கருஞ்சிறுத்தைகள் உலா வந்த சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு

கோத்தகிரியில் ஒரே நேரத்தில் இரண்டு சிறுத்தைகள் இரண்டு கருஞ்சிறுத்தைகள் உலா வந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளன. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள அரவேனு பகுதியில் இருந்து கோட்டாஹால் செல்லும் சாலையில் குடியிருப்பு பகுதியில் நீண்ட நேரமாக உலா வந்த இரண்டு சிறுத்தைகள், இரண்டு கருஞ்சிறுத்தைகளின் காட்சி அப்பகுதி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. இரண்டு கருச்சிறுத்தைகள் ஒரே நேரத்தில் அப்பகுதியில் சுற்றி வந்த சிசிடிவி காட்சிகளின் பதிவுகள் அரவேனு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. … Read more