தென் தமிழக, டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

தென் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென் … Read more

அந்த வெற்றி… ரஹானே சொன்னது சரியா? மாறுபட்ட அஸ்வின்

cricket Tamil News: ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் சுற்றுப்பயணம் செய்திருந்த இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில், அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் களமிறங்கிய விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, முதல் இன்னிங்சில் 244 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 191 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்பிறகு நடந்த 2வது இன்னிங்சில் 36 ரன்னில் இந்தியா சுருண்டது. தொடர்ந்து வந்த … Read more

11ம் வகுப்பு மாணவியுடன் காதல்.. மாணவியின் உறவினர்கள் தாக்கியதில் இளைஞர் பரிதாப பலி..!

காதல் விவகாரத்தில் பெண்ணின் உறவினர்கள் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் மூங்கில்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ்.  பெயிண்டரான இவர் அந்த பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் பழகி வந்தது பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரியவந்தது. இதனை அடுத்து, வெங்கடேஷை மாணவியின் உறவினர்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 8-ஆம் தேதி இரவு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் வெங்கடேஷை மாணவியின் … Read more

திருநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் இளைஞர் ஒருவர் பலி; 50 பேர் காயம் <!– திருநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில்… –>

புதுக்கோட்டை மாவட்டம் திருநல்லூரில் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். ஐம்பதுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். முத்தாரம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த இருநூற்றுக்கு மேற்பட்ட காளைகளும் மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற காளை முட்டியதில் கீழப்பட்டியைச் சேர்ந்த பாண்டிமுருகன் என்கிற இளைஞர் உயிரிழந்தார்.  Source link

’மக்கள் காலில் விழுந்து விழுந்து கால் வலிக்கிறதா?’ – அதிமுக வேட்பாளர்களை கலாய்த்த செல்லூர் ராஜு

மதுரை: “பொதுமக்கள் காலில் விழுந்து விழுந்து கால் வலிக்கிறதா?” என்று வேட்பாளர்களை பார்த்து முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு நையாண்டி செய்ததால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. மதுரை கே.புதூர் மாநகராட்சியில், 100 வேட்பாளர்களை ஆதரித்து எதிர்கட்சித் தலைவர் கே.பழனிசாமி பிரச்சாரம் செய்தார். இந்த பொதுக் கூட்டத்திற்கு கே.பழனிசாமி வந்தபோது முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, கூட்டத்தினரைப் பார்த்து எழுந்து கரோஷம் போடும்படி கூறினார். அப்போது வேட்பாளர் பலர், அவர் நம்மைப் பார்த்து சொல்லவில்லையென்று மேடையில் அமர்ந்திருந்தனர். இதைப் … Read more

டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை – அதிகபட்சமாக கோடியக்கரையில் 8 செ.மீ மழைப்பதிவு

டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் எட்டு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. குமரிக்கடல் பகுதியில் கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாங்குடி, திருநெய்பேர், குன்னியூர், நல்லூர், கூடூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்துவருவதால், குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மாவட்டம் முழுவதும் பெய்து வரும் மழையினால், பல்வேறு இடங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த கதிர்கள் சாய்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் … Read more

கங்கனாவின் ட்வீட்டால் சர்ச்சை.. இவரது இயக்கத்தில் நடிக்க விரும்பிய நடிகை.. மேலும் சினிமா செய்திகள் உள்ளே

உதயநிதி படத்தின் டீசர் வெளியீடு கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் அடுத்து இயக்கியுள்ள படம் நெஞ்சுக்கு நீதி. இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ளார். கருப்பன் படத்தில் நடித்த தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆரி, ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், இளவரசன், மயில்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனுபவ் சின்ஹா இயக்கத்தில் தயாரான படம் ஆர்ட்டிகல் 15. இந்தப் படத்தின் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி. ஆர்ட்டிகல் 15 படத்தில் முன்னணி பாலிவுட் நடிகரா … Read more

வன்னியர் இடஒதுக்கீடு : விசாரணையை தள்ளிவைக்க வாய்ப்பே இல்லை – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்.!

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கிய தமிழகத்தின் பெருங்குடியான வன்னியர் இன மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் இன மக்கள் நடத்திய போராட்டம் காரணமாக, வன்னியர் இன மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கியது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 35க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இதன் காரணமாக வன்னியர் இட ஒதுக்கீடு … Read more