ஹவானாவில் புகழ்பெற்ற நட்சத்திர விடுதியில் எரிவாயுக் கசிவால் பயங்கர வெடிவிபத்து, 22 பேர் உயிரிழப்பு..!

கியூபா தலைநகர் ஹவானாவில் உள்ள புகழ்பெற்ற நட்சத்திர விடுதியில், எரிவாயு கசிவால் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. நூற்றாண்டு பழமையான வரலாற்று சிறப்புமிக்க சரடோகா நட்சத்திர விடுதியில், நேற்று எரிவாயு கசிவின் காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஹோட்டலின் முன்பகுதி உருக்குலைந்து போனது. இடுபாடுகளில் சிக்கி இதுவரை 22 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ள அதிகாரிகள், 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளனர். இந்த விபத்தில் அருகிலிருந்த பள்ளிக் … Read more

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைனின் கடலோர நகரம் ஒடேசா மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்

கீவ்,  உக்ரைன் மீதான ரஷிய போர், உலகளவில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று (மே 7) இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-   6:00 Pm தெற்கு உக்ரேனில் உள்ள துறைமுக நகரமான ஒடேசா மீது இன்று(சனிக்கிழமை) ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக, அந்த பிராந்திய நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் செர்ஹி பிராட்சுக் தெரிவித்துள்ளார். முன்னதாக ஒடேசா நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் 4 ஏவுகணைகள் தாக்கியதாகவும், அதனைத் தொடர்ந்து ஒடேசா நகரின் … Read more

Bizarre Play: ஆணுறையில் ஓட்டை போட்டதற்காக ஜெயில் தண்டனை அனுபவிக்கும் பெண்

ஆண்களுக்கு மட்டும்தான் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறை தண்டனை கிடைக்குமா? பெண்களுக்கும் கிடைக்கும்…. ஆண் நண்பருடன் உடலுறவு வைத்தபோது திருட்டுத்தனம் செய்த பெண்ணுக்கு பைல்ஃபெல்ட் நகரில் உள்ள ஒரு பிராந்திய நீதிமன்றம்,  பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியது. மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த 39 வயது பெண் ஒருவர் கர்ப்பம் தரிப்பதற்காக தனது ஆண் துணையின் ஆணுறையில் திருட்டுத்தனமாக துளையிட்டதற்காக சிறையில் அடைக்கப்பட்டார். ஜெர்மனியின் Bielefeld நகரில் உள்ள ஒரு பிராந்திய நீதிமன்றம் அந்தப் பெண் தனது … Read more

டுவிட்டர் நிறுவனத்தின் ஆண்டு வருவாயை உயர்த்த எலன் மஸ்க் திட்டம்

டுவிட்டர் நிறுவனத்தின் ஆண்டு வருவாயை 2028ஆம் ஆண்டுக்குள் 26.4 பில்லியன் டாலராக உயர்த்த உலக பெரும் கோடிஸ்வரரான எலன் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி, டுவிட்டர் நிறுவனத்தின் பணப்புழக்கத்தை 2025ஆம் ஆண்டுக்குள்  3.2பில்லியன் டாலராகவும், 2028ஆம் ஆண்டுக்குள் 9.4பில்லியன் டாலராகவும் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், டுவிட்டர் நிறுவனத்தின் மொத்த வருவாயில் 45சதவீதத்தை விளம்பரம் மூலம் பெறவும் எலன் மஸ்க் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், டுவிட்டரில் அறிமுகமாகவுள்ள பணம் … Read more

ரஷ்யாவுக்கு எதிராக தடைகள் தொடரும்: அமெரிக்கா, கனடா உறுதி| Dinamalar

வாஷிங்டன்: ரஷ்யாவுக்கு எதிராக தடைகள் தொடருமென அமெரிக்கா, கனடா நாட்டுத் தலைவர்கள் உறுதியான முடிவெடுத்துள்ளனர். உக்ரைன் நாட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ரஷ்யப் படைகள் உக்ரைன் ராணுவத்துடன் போர் புரிந்து வருகின்றன. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்னதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உடன் தொலைபேசி வாயிலாக உரையாற்றினார். அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாடுகளும் ரஷ்யாவின் இந்த செயலை கண்டித்து ஏற்கனவே பல்வேறு பொருளாதார தடைகளை விதித்திருந்தன. போர் இன்னும் நீடிப்பதால் … Read more

என்னை எப்படா கழுதைன்னு சொன்னேன், டங் ஸ்லிப்பாயிடுச்சோ: வைரலாகும் இம்ரான் கான்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இடம் பெற்றுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அவருடன் கழுதை புகைப்படங்களும் இணைந்து வைரலாகிறது.  பல பிரச்சனைகளில் சிக்கித் தவித்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தற்போது நெட்டிசன்களில் ட்ரோல்களுக்கு இடையில் மாட்டிக் கொண்டு சிரிக்க வைக்கும் பேசுபொருளாகியிருக்கிறார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், உள்ளடக்க உருவாக்குநர்களான ஜுனைத் அக்ரம், முஸம்மில் ஹாசன் மற்றும் தல்ஹா ஆகியோருடன் சமீபத்தில் போட்காஸ்டில் இடம்பெற்றார். மேலும் படிக்க | 26/11 சூத்திரதாரி … Read more

ரஷ்ய அதிபருடன் தொடர்புடைய சொகுசுக் கப்பலை பறிமுதல் செய்தது இத்தாலி அரசு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 5400 கோடி ரூபாய் மதிப்புடைய சொகுசுக் கப்பலை இத்தாலி அரசு பறிமுதல் செய்துள்ளது. 6 தளங்களும், 2 ஹெலிகாப்டர் இறங்குதளங்களும் கொண்ட இந்த சொகுசுக் கப்பல் ரஷ்ய அதிபர் புடினுக்குச் சொந்தமானது என்பதற்கான சான்றுகளை அலெக்சி நவல்னியால் நிறுவப்பட்ட அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தக் கப்பலில் ஒரே நேரத்தில் விருந்தினர்கள் 18 பேரும், மாலுமி பணியாளர்கள் 40 பேரும் தங்க முடியும். ரஷ்ய எண்ணெய் நிறுவனமான ரோஸ்னப்டின் முன்னாள் தலைவர் … Read more

போர் நிறுத்தம் குறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் – ஜெலன்ஸ்கி

போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூறியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, படையெடுப்புக்கு முந்தைய நிலையை ரஷ்யா உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், ரஷ்யா படைகளை முழுமையாக திரும்பப் பெறுவதோடு, போருக்கு முன் இருந்த நிலைகளுக்கு செல்ல வேண்டும் எனவும், பிப்ரவரி 23-ந் தேதிக்கு முன் உக்ரைன் இருந்த நிலைமையை மீட்டெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்த சூழலில், நாளைய தினம் காணொலி வாயிலாக நடைபெறும் ஜி … Read more

இலங்கையில் மீண்டும் இசைக்கப்படுமா தமிழில் தேசிய கீதம்?

இலங்கையின் தேசிய கீதத்துக்கு மிக நீண்ட வரலாறு இருக்கிறது. 1951-ம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்ட முதல் அமைச்சரவையால் சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய கீதத்தை, புகழ்பெற்ற இந்தியக் கவிஞரான ரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் எழுதிக் கொடுக்க, அவரது சாந்தி நிகேதனில் கல்வி கற்ற இலங்கையைச் சேர்ந்த சிங்கள இசைக் கலைஞரான ஆனந்த சமரகோன் சிங்களத்தில் மொழிபெயர்த்தார். 1952-ல் அந்தப் பாடல் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அறிஞரும் பண்டிதருமான புலவர் மு.நல்லதம்பியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. அன்று முதல் தமிழில் பாடப்பட்டுவந்த … Read more

இலங்கை நெருக்கடி | பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறாரா மகிந்த ராஜபக்சே?

கொழும்பு: பொருளாதார நெருக்கடி ஒருபுறம், அரசியல் நெருக்கடி மறுபுறம் என இலங்கை தேசம் ஊசலாடிக்கொண்டிருக்க அந்நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்சே அவரது பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டில் நடந்த சிறப்பு கேபினட் கூட்டத்தில், பிரதமர் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தான் பதவி விலகுவது மட்டும்தான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு என்றால் அதைச் செய்ய தான் தயாராக … Read more