உக்ரைன் மீது மனிதர்களை ஆவியாக்கும் குண்டுகளை வீசும் ரஷ்யா

மனிதர்களை ஆவியாக்கும் ராக்கெட் குண்டுகளை உக்ரைன் மீது ரஷ்யா தொடர்சியாக ஏவும் வீடியோ வெளியாகி உள்ளது. உக்ரைனின் துறைமுகப் பகுதியான மரியுபோல் நகரத்தை நோக்கி நொடிக்கு ஒரு முறை இந்த குண்டுகள் வீசப்பட்டன. அப்போது தரையில் இருந்த புற்களும் பற்றி எரிந்தன. ஆவியாக்கும் குண்டுகள் மற்ற குண்டுகளை விட ஆபத்தானவை என்று கூறும் விஞ்ஞானிகள், இந்தக் குண்டுகள் வெடிக்கும் போது, ஒரு பெரிய தீப்பந்தத்தை உருவாக்க சுற்றியுள்ள பகுதியில் ஆக்ஸிஜனை உறிஞ்சுகின்றன. இதனால் அந்தப் பகுதியில் இருக்கும் … Read more

ஊபர் கார் டிரைவராக மாறிய மாஜி ஆப்கன் நிதி அமைச்சர்| Dinamalar

வாஷிங்டன் : ஆப்கானிஸ்தான் முன்னாள் நிதி அமைச்சர் காலித் பயெண்டா ‘ஊபர்’ கார் டிரைவராக அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ‘ஊபர்’ கார் டிரைவராக இருப்பவர் காலித் பயெண்டா. இவர் தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் முன்னாள் நிதி அமைச்சர்.கடந்த ஆண்டு ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றுவதற்கு ஒரு வாரம் முன் காலித் பயெண்டாவுக்கும் அப்போதைய பிரதமர் அஷ்ரப் கனிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஆக. 10ல் காலித் பதவி விலகினார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் … Read more

போராட்டத்தில் ஈடுபட்ட உக்ரைன் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டிய ரஷ்யப் படைகள்

உக்ரைன் கெர்சன் நகரை விட்டு வெளியேறுமாறு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது ரஷ்யப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. கெர்சன் நகர சாலையில் ரஷ்யப் படைகளின் ஆக்கிரமிப்பை கண்டித்து மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் திரண்ட மக்கள் மீது ரஷ்ய வீரர்கள் துப்பாக்கியில் சுட்டும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விரட்டி அடித்தனர். ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் நிலை குழைந்த மக்கள் அலறியடித்து ஓடினர். Source link

சீனாவில் டிஸ்னி பொழுதுபோக்கு பூங்கா மூடல்

பீஜிங் : அமெரிக்காவை சேர்ந்த டிஸ்னி நிறுவனத்தின் பொழுதுபோக்கு பூங்காக்கள் உலகம் முழுவதும் பிரபலமானவை. அந்த வகையில் சீனாவில் அதிக மக்கள் தொகையை கொண்ட பெரிய நகரமான ஷாங்காய் நகரில் பிரமாண்டமான டிஸ்னி பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இந்நிலையில், சீனாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதை தொடர்ந்து அங்கு பல்வேறு நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சீனாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே ஷாங்காய் நகரிலும் … Read more

சீனாவில் போயிங் விமானம் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது; 123 பயணிகள் உட்பட 132 பேர் உயிரிழப்பு: மீட்புப் படையினர் விரைவு: விசாரணைக்கு அதிபர் உத்தரவு

பெய்ஜிங்: சீனாவில் பயணிகள் விமானம் மலைகள் நிறைந்த வனப்பகுதியில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அப்பகுதிக்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள யுன்னான் மாகாண தலைநகர் குன்மிங்கில் இருந்து ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-800 ரக பயணிகள் விமானம், குவாங்டாங் மாகாண தலைநகர் குவாங்சூவை நோக்கி நேற்று மதியம் 1 … Read more

உக்ரைனுக்கு மேலும் 1 கோடி யுவான் மதிப்பில் மனிதாபிமான உதவிகள் வழங்கும் சீனா.!

ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் உருக்குலைந்துள்ள உக்ரைனுக்கு மேலும் 1 கோடி யுவான் மதிப்பில், மனிதாபிமான உதவிகளை வழங்க உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் Wang Wenbin, சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் உக்ரைனுக்கு கூடுதலாக 1 கோடி யுவான் மதிப்பில் மனிதாபிமான உதவியை வழங்கும் என தெரிவித்துள்ளார். முன்னதாக, மனிதாபிமான அடிப்படையில், உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் உள்பட 50 லட்சம் யுவான் மதிப்பிலான நிவாரண … Read more

சரணடைய உக்ரைன் மறுப்பு| Dinamalar

லீவ் : உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ‘மரியுபோல் நகரில் உள்ள மக்கள் வெளியேற வாய்ப்பளிக்கும் வகையில், உக்ரைன் ராணுவம் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும்’ என, ரஷ்யா கூறியுள்ளது. ஆனால், இதற்கு உக்ரைன் மறுத்துள்ளது.ஏவுகணை தாக்குதல்கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் உடனான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்து, அதன் மீது ரஷ்யா போர் தொடுத்துஉள்ளது. மூன்று வாரங்களைக் கடந்த பிறகும், உக்ரைனின் பல நகரங்களில் தொடர்ந்து போர் நீடித்து வருகிறது.தலைநகர் கீவ் நகருக்கு அருகில் … Read more

பயங்கரம்! விழுந்து நொறுங்கியது சீன பயணியர் விமானம் தேடுதல் வேட்டை தீவிரம்; 132 பேர் கதி என்ன?

பீஜிங் : சீனாவில், 132 பேருடன் சென்ற உள்நாட்டு பயணியர் விமானம், மலையில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணித்த பயணியர் அனைவரும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.சீனாவின், குன்மிங் நகரில் இருந்து குவாங்ஸோ என்ற இடத்துக்கு, ‘சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான, ‘போயிங் 737’ விமானம், 123 பயணியர் மற்றும் ஒன்பது விமான ஊழியர்களுடன், உள்நாட்டு நேரப்படி நேற்று மதியம் 1:10க்கு புறப்பட்டது. இந்த விமானம், மதியம் 2:52 மணிக்கு, குவாங்ஸோ சென்றடைய வேண்டும்.சமூக வலைதளங்கள்ஆனால், … Read more

உக்ரைன் ராணுவ வீர்கள் சரணடைய ரஷிய படைகள் கெடு

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷிய அந்நாட்டின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள ஒரு வணிக வளாகம் மீது ரஷிய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். அந்த வணிக வளாகத்தை உக்ரைன் ராணுவத்தினர் ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்டவற்றை சேமிக்க பயன்படுத்தி வருவதை அறிந்த ரஷிய படையினர் தாக்குதல் நடத்தியதாக  அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் தெரிவித்துள்ளார். இதனிடையே, … Read more

இந்திய வம்சாவளி மாணவி லண்டன் விடுதியில் கொலை| Dinamalar

லண்டன் : லண்டன் பல்கலையில் படித்த இந்திய வம்சாவளி மாணவி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, துனிசியா நாட்டை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான சபிதா தன்வானி, 19, லண்டன் பல்கலையில் படித்தார். அங்குள்ள ஆர்பர் ஹவுஸ் மாணவியர் விடுதியில் தங்கியிருந்தார்.கடந்த 19ம் தேதி, கழுத்தில் பலத்த காயங்களுடன், அவர் அறையில் இறந்து கிடந்தார். விசாரணை நடத்திய ‘ஸ்காட்லாண்ட் யார்டு’ போலீசார், வட ஆப்ரிக்க நாடான துனிசியாவை சேர்ந்த … Read more