அவசரநிலை சட்டம் ரத்து – கனடா பிரதமர் அறிவிப்பு

ஒட்டாவா: கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது. பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.    அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. லாரி டிரைவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம். தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து லாரி  டிரைவர்கள் ஒட்டாவாவில் உள்ள முக்கிய சாலைகளில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.    … Read more

மலிவு விலையில் கொரோனா தடுப்பூசி இந்தியாவை பாராட்டிய பில் கேட்ஸ்

வாஷிங்டன்:உலக நாடுகளுக்கு மலிவு விலையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் இந்திய நிறுவனங்களை, ‘மைக்ரோசாப்ட்’ இணை நிறுவனர் பில் கேட்ஸ் பாராட்டி உள்ளார்.சுகாதாரம் தொடர்பான இந்திய – அமெரிக்க கூட்டு நடவடிக்கை வளர்ச்சிக்காக, நம் துாதரகம் ஏற்பாடு செய்த, ‘ஆன்லைன்’ கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும், ‘மைக்ரோசாப்ட்’ இணை நிறுவனருமான பில் கேட்ஸ் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:இந்திய தடுப்பூசி தயாரிப்பாளர்கள், கடந்த ஆண்டு 15 கோடி ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசிகளை, 100க்கும் … Read more

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கனமழை வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு <!– ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கனமழை வெள்ளத்த… –>

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கனமழை வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 10 பேர் மாயமாகி உள்ளனர். தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள சன்ஷைன் கடலோர பகுதிகளில் புயல் காற்று வீசி வருவதன் எதிரொலியாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. சில இடங்களில் 4.6 அடி உயரம் வரை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் வீட்டை விட்டு வெளியே செல்லமுடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். வாகன போக்குவரத்தும் வெகுவாக பாதிப்படைந்துள்ளது. மீட்புப்படையினர் … Read more

உக்ரைனில் அவசர நிலை பிரகடனம் – ஒப்புதல் அளித்தது பாராளுமன்றம்

கியூ: நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா சுமார் 1.5 லட்சம் படை வீரர்களை உக்ரைன் எல்லையில் குவித்துள்ளது. இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் எச்சரித்து வருகின்றன.  இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக ரஷ்யா நேற்று முன்தினம் அங்கீகரித்தது. அங்கு படைகளை களமிறக்க அதிபர் புதின் உத்தரவிட்டதால் ரஷ்யா … Read more

கொலம்பியாவில் கருக்கலைப்புக்கு சட்டப்பூர்வ அனுமதி <!– கொலம்பியாவில் கருக்கலைப்புக்கு சட்டப்பூர்வ அனுமதி –>

கொலம்பியாவில் கருத்தரித்த பெண்கள், 24 வாரத்திற்குள் கருக்கலைப்பு செய்துக் கொள்ள சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொலம்பியாவில் மூன்று சூழ்நிலைகளில் மட்டுமே சட்டப்பூர்வமாக கருக்கலைப்பு செய்துக் கொள்ள முடியும். பெண்ணின் உயிருக்கு ஆபத்து இருக்கும் போதோ, கருவில் குறைபாடுகள் இருந்தாலோ, பாலியல் வன்கொடுமையால் கருவுற்றாலோ கருக்கலைப்பு செய்துக் கொள்ளலாம். இந்த சூழ்நிலைகளுக்குப் புறம்பாக கருவை கலைக்க முற்படும் பெண்கள், 54 மாதங்கள் வரை சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். இந்த சட்டத்தை நீக்கக்கோரி பல ஆண்டுகளாக பெண்ணிய இயக்கங்கள் … Read more

உலகின் அழகிய எதிர்கால அருங்காட்சியகம் கட்டடம் திறப்பு| Dinamalar

துபாய்::துபாயில் மிகப் பிரமாண்டமான ‘எதிர்கால அருங்காட்சியகம்’ திறக்கப்பட்டுள்ளது. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த துபாயில், ‘புர்ஜ் கலிபா’ என்ற உலகின் மிக உயரமான வர்த்தக கட்டடம் உள்ளது. இதையடுத்து, உலகிலேயே மிக அழகான கட்டடம் என்ற சிறப்பை எதிர்கால அருங்காட்சியகம் பெற்றுள்ளது.ஷான் கில்லா என்ற கட்டடக் கலை வல்லுனர் வடிவமைத்த இந்த அருங்காட்சியகத்தை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீம் அல் மக்தும் திறந்து வைத்தார். திறப்பு விழாவின்போது வாண … Read more

உலகம் தற்போது அமைதி, பாதுகாப்பு அச்சுறுத்தலை சந்தித்துள்ளது – ஐ.நா.தலைவர்

ஜெனீவா, முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன. இதற்கிடையில், கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக ரஷியா அங்கீகரித்தது.  இதனை தொடர்ந்து … Read more

உக்ரைனுக்கு படைகளை அனுப்பியதால் ரஷ்யா மீது ஜப்பான் பொருளாதார தடை விதிப்பு <!– உக்ரைனுக்கு படைகளை அனுப்பியதால் ரஷ்யா மீது ஜப்பான் பொருளா… –>

உக்ரைனில் செயல்பட்டு வரும் ரஷ்ய ஆதரவு பிரிவினை வாதிகளுக்கு உதவியாக படைகளை அனுப்பிய ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து அந்நாட்டின் மீது ஜப்பானும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. உக்ரைனை நோக்கிய ரஷ்யாவின் நகர்வுகள் அந்நாட்டின் இறையாண்மை மற்றும் சர்வதேச விதிகளை மீறும் செயல் என ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார். அவர் அறிவித்துள்ளதன்படி, ரஷ்ய கடன்பத்திரங்களை ஜப்பானுக்குள் விநியோகிக்கவும், ஜப்பானுக்கு ரஷ்யர்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யர்கள் சிலரின் சொத்துக்களும் முடக்கப்பட்டிருக்கின்றன. உக்ரைனை நோக்கிய நகர்வுகளை … Read more

பொருளாதார தடை உலகளாவிய மார்க்கெட்டை பாதிக்கும்- ரஷியா சொல்கிறது

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த இருப்பதாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் எச்சரித்து வந்தன. ஆனால், அமெரிக்கா குற்றச்சாட்டை ரஷியா மறுத்து வந்தது. இந்த நிலையில்தான் உக்ரைனில் உள்ள கிழக்கு பகுதியில் இரண்டு நகரங்களை தனிப்பகுதியாக ரஷியா அங்கீகரித்தது. மேலும், உக்ரைன் கிழக்கு பகுதியில் உள்ள ரஷியாவுக்கு ஆதரவான பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட வெளிநாட்டிற்கு ரஷியாவின் ராணுவத்தை அனுப்ப அந்நாட்டு பாராளுமன்றம் அனுமதி வழங்கியது. இதனால் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுப்பது ஏறக்குறைய உறுதி … Read more