சீனாவின் குவாட் எதிர்ப்புக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் பதிலடி| Dinamalar

மெல்பர்ன்,;”இந்தோ – பசிபிக் கடற் பிராந்தியத்தின் அமைதிக்கு உருவாக்கப்பட்ட, ‘குவாட்’ அமைப்பை சாதாரணமாக கருத வேண்டாம்,” என சீனாவுக்கு நம் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பதிலடி தந்துள்ளார். இந்தோ – பசிபிக் கடற் பிராந்தியத்தில் சீனாவின் அத்துமீறலை தடுத்து, பாதுகாப்பான கப்பல் போக்குவரத்துக்காக குவாட் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் இணைந்து உருவாக்கிய குவாட் அமைப்புக்கு,துவக்கம் முதல் சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கூட்டம் இந்நிலையில், நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவில் … Read more

உக்ரைனை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை; ரஷ்யாவை எச்சரிக்கும் ஜோ பைடன்

உக்ரைனின் எல்லைப் பகுதியில் ரஷ்யா போர் வீரர்களையும் ஆயுதங்களையும் குவித்துவரும் நிலையில், எந்த நேரமும் போர் மூளலாம் என்பது போன்ற பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ரஷ்யாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுப்பட்டு வருகின்றன என்றாலும், யாருடைய பேச்சையும் ரஷ்யா கேட்கும் நிலையில் இல்லை.  இந்நிலையில், உக்ரைனில் நிலவும் பதற்றங்களை தணிக்கும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை எச்சரித்துள்ளார். படையெடுப்பு நடந்தால், அதற்கான விலையை ரஷ்யா கொடுக்க வேண்டியிருக்கும் … Read more

பசிபிக் கடலில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலை ரஷ்யா விரட்டியடித்ததாக தகவல் <!– பசிபிக் கடலில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலை ரஷ்யா விரட்டியட… –>

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா ரஷ்யா இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், பசிபிக் கடலில் அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பலை ரஷ்யா விரட்டியடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறுகையில், வடக்கு பசிபிக் கடலில் குறில் தீவுக்கு அருகே ரஷ்யாவின் போர்க்கப்பல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அமெரிக்கா கடற்படையின் விர்ஜீனியா வகை நீர்மூழ்கி கப்பலை கண்டறிந்ததாக தெரிவித்துள்ளது. அந்த இடத்தைவிட்டு செல்லுமாறு தாங்கள் விடுத்த கோரிக்கையை அந்த நீர்மூழ்கி கப்பல் ஏற்க மறுத்ததால், … Read more

வேற்று கிரகங்களில் ஏலியன்கள் இல்லை- விஞ்ஞானிகள் தகவல்

விண்வெளியில் பிற கோள்களில் ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் பரவுகிறது. ஏலியன்கள் தொடர்பான ஹாலிவுட் படங்களும் வெளிவந்துள்ளன. இதனால், மக்களின் மனதில் வேற்று கிரகவாசிகள் இருப்பதாகவே கருதப்பட்டு வந்தன. இந்நிலையில், ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் வேற்று கிரகவாசிகள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அதில், மிக சக்தி வாய்ந்த ரேடியோ டெலஸ்கோப் மூலம் ஆய்வு செய்தனர். இதன் முடிவில், ஏலியன்கள் இருப்பதற்கான எந்த ஆதரமும் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கூறப்பட்டுள்ளதாவது:- … Read more

எதிரொலி கேட்டான்.. வானொலி படைத்தான்… – இன்று உலக வானொலி தினம் –

ஐ.நா.வின் கல்வி , அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ )ஆண்டு தோறும் பிப்ரவரி 13-ம் தேதியை உலக வானொலி தினமாக கடைபிடிக்கிறது. கடந்த 2011-ம் ஆண்டு ஐ.நா. 36-வது பொதுச்சபை கூட்டத்தில் முதன்முதலாக ஸ்பெயின் , நவம்பர் 3-ம் தேதியை உலக வானொலி தினமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியது.அதன் பின்னர் பிப்ரவரி 13-ம் தேதியை உலக வானொலி தினமாக யுனெஸ்கோ அறிவித்தது..நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல் , ஸ்மார்ட்போன், ஐ.பேட், இன்டர்நெட் … Read more

14 வயது சிறுமிக்கு வலை விரித்த கேரள மாணவர் – பொறி வைத்து பிடித்த லண்டன் போலீஸ்

திருவனந்தபுரம்: இங்கிலாந்து நாட்டில் 14 வயதான சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தது. இதில் ஈடுபடுவோர், சிறுமிகளுக்கு சமூக வலை தளங்கள் மூலம் அழைப்பு விடுப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர். இது பற்றியும் போலீசாருக்கு தகவல்கள் சென்றன. இதன் அடிப்படையில் வலைதளங்களில் சிறுமிகளை செக்ஸ்-க்கு அழைப்போரை லண்டன் சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வந்தனர். இதில் கேரளாவில் இருந்து லண்டனுக்கு மேற்படிப்புக்கு வந்த வாலிபர் ஒருவர் சிறுமிகளை செக்சுக்கு அழைத்தது … Read more

டுவிட்டர் சமூக வலைதளம் திடீர் முடக்கம்| Dinamalar

புதுடில்லி-உலகம் முழுதும் பல மணி நேரம் முடங்கிய ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு விட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகமான டுவிட்டர், பல்வேறு தகவல்கள், படங்கள் ஆகியவற்றை உலகம் முழுதும் உள்ளோருடன் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.நேற்று முன்தினம் டுவிட்டர் தளம் திடீரென முடங்கியது. இதனால் உலகளவில் டுவிட்டரில் தகவல்களை அனுப்ப முடியாமல் கோடிக்கணக்கானோர் தவித்தனர். பல மணி நேரம் நீடித்த இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

பிரேசிலில் நடந்த கொடூரம்; மனைவியை கொன்று கூறு போட்டு சமைத்து சாப்பிட்ட நபர்!

தில்லியை உலுக்கிய தந்தூரி கொலை வழக்கு பலருக்கு நினைவில் இருக்கலாம் . தில்லியின் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுஷில் சர்மா, தனது மனைவி நைனா சாஹ்னியைக் கொன்றுவிட்டு, உணவகத்தின் தந்தூரி அடுப்பில் அவரது உடலை எரித்து விட்டார். இந்த வழக்கில் சர்மாவுக்கு 2003 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.  அதே போன்ற சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரேசிலைச் சேர்ந்த மௌரோ சம்பீட்ரி, முதல் மனைவியை இரண்டாவது திருமணத்திற்கு தடையாக இருந்த, மனைவியை … Read more

பசிபிக் கடலில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலை விரட்டிய ரஷ்ய போர் கப்பல்

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா-ரஷ்யா இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வரும் நிலையில் அமெரிக்க நீர் மூழ்கி கப்பலை ரஷ்ய போர் கப்பல் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் கூறியதாவது:- பசிபிக் கடலில் உள்ள குறில் தீவுகளுக்கு அருகே ரஷ்யாவின் போர் கப்பல் பயிற்சியில் ஈடுபட்ட போது அமெரிக்க கடற்படையின் வர்ஜினியா வகை நீர்மூழ்கி கப்பலை ரஷ்ய கடல் பகுதியில் கண்டுபிடித்தது. அந்த நீர்மூழ்கி கப்பல் தாங்கள் விடுத்த கோரிக்கையை … Read more