சூரிய புயலில் சிக்கியதால் 40 செயற்கைகோள்கள் வளிமண்டலத்தில் எரிந்தன

கேப்கெனவெரல்: பூமியின் சுற்று வட்டபாதையில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் சுமார் 2 ஆயிரம் ஸ்டார்லிங்க் செயற்கை கோள்கள் சுற்றி வருகின்றன. அவற்றின் மூலம் உலகின் தொலை தூர இடங்களுக்கு இணைய வழி சேவையை வழங்கி வருகிறது. இந்த செயற்கைகோள்கள் பூமியை 340 மைல்களுக்கும் அதிகமான உயரத்தில் சுற்றி வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பிய 40 செயற்கைகோள்கள் சூரிய புயலில் சிக்கியதால் எரிந்தன. கடந்த 4-ந்தேதி வளி மண்டலத்தில் சூரியபுயல் ஏற்பட்டது. இந்த … Read more

நான்காவது டோஸ் தடுப்பூசி – அமெரிக்கா சொல்வது என்ன?

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபௌசி, கோவிட்-19 மாறுபாடான ஓமிக்ரானுடன் போரிட, அமெரிக்காவில் நான்காவது டோஸ் பூஸ்டர் டோஸ் தேவைப்படலாம் என்றும், பூஸ்டர் டோஸ் வயது மற்றும் நபரின் உடல்நிலையின் அடிப்படையில் செலுத்தப்படலாம் என்றும் கூறினார்.  “மீண்டும் மற்றொரு பூஸ்டர் டோஸ் தேவைப்படலாம். இந்த விஷயத்தில், எம்ஆர்என்ஏ பெறும் ஒரு நபருக்கு நான்காவது புஸ்டர் டோஸ் தேவைப்படலாம். இது வயது மற்றும் தனி நபரின் அடிப்படை நிலைமைகளின் அடிப்படையில் இது போடப்படலாம்” என்று … Read more

ஹிஜாப் விவகாரம்: இந்திய தூதரக அதிகாரிக்கு பாகிஸ்தான் சம்மன்!

கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்ததற்கிடையே, இந்து மாணவர்கள் சிலர் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையாகியுள்ளது. மாநிலத்தில் பதற்றத்தை தவிர்க்கும் பொருட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. மேலும், பெங்களூரில் கல்வி நிறுவனங்களுக்கு அருகே போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஹிஜாப் விவகாரம் சர்வதேச அளவில் … Read more

அதிவேக இணைய சேவைக்காக நிலைநிறுத்தப்பட்ட ஸ்டார் லிங்க் நிறுவனத்தின் 40 செயற்கைக்கோள்கள் மின் காந்தப் புயல் காரணமாக சேதம் <!– அதிவேக இணைய சேவைக்காக நிலைநிறுத்தப்பட்ட ஸ்டார் லிங்க் நிற… –>

விண்வெளியில் ஏற்பட்ட மின் காந்தப் புயல் காரணமாக எலான் மஸ்கின் ஸ்டார் லிங்க் நிறுவனம் அதிவேக இணைய சேவைக்காக விண்ணில் நிலை நிறுத்திய 40 செயற்கைக்கோள்கள் சேதமடைந்தன. சூரியனின் மேற்பரப்பில் இருந்து கரோனல் மாஸ் எஜெக்ஷன் என்ற ஒரு மாபெரும் உமிழ்வு வெளியேறி, பூமியின் வளிமண்டலத்துக்கு மிக அருகே புவி காந்த புயலாக உருவெடுத்தது. இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் உள்ள புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்ட 49 ஸ்டார் … Read more

மோசடி புகார் காரணமாக இலங்கை அழகியின் பட்டம் பறிப்பு

கொழும்பு: ‘திருமதி இலங்கை 2021’ அழகி போட்டியில் பட்டம் வென்றவர் புஷ்பிகா டி சில்வா. இவர் கடந்த மாதம் அமெரிக்காவின் லாஸ் வேகாவில் நடந்த ‘திருமதி உலக அழகி’ போட்டியில் பங்கேற்றார். இந்த பட்டத்தை வெல்ல திருமணமான பெண்கள் மட்டுமே போட்டியிட்டனர். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த ஷைவின் போர்டு ‘திருமதி உலக அழகி’ பட்டத்தை வென்றார். இந்த போட்டியில் நடுவர்கள் முறைகேடாக செயல்பட்டதால்தான் தனக்கு வெற்றி கிட்டவில்லை என்று புஷ்பிகா டி சில்வா சமூக வலைதளங்களில் குற்றம் … Read more

ஹாங் காங்கில் ஒருநாள் கொரோனா பாதிப்பு உச்சம் – கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு <!– ஹாங் காங்கில் ஒருநாள் கொரோனா பாதிப்பு உச்சம் – கடும் கட்ட… –>

ஹாங் காங்கில் ஒருநாள் கொரோனா எண்ணிக்கை ஆயிரத்து 100ஐ கடந்து புது உச்சம் தொட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதையடுத்து கடும் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளன. பொது இடங்களில் கூடுவதற்கு இருவருக்கு மட்டும் அனுமதி, கோவில்கள், ஷாப்பிங் மால், திரையரங்குகள், பல்பொருள் அங்காடிகளுக்குள் பொது மக்கள் நுழைய தடுப்பூசி சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பரிசோதனை மேற்கொள்ள மறுப்பவர்களுக்கு இரட்டிப்பு அபராதங்கள் விதிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. சலூன்கள் 2 வாரங்களுக்கு மூட உத்தரவிடப்பட்டதால் கடைகளின் முன் மக்கள் நீண்ட வரிசையில் … Read more

கொரோனாவை அழிக்க 4-வது தவணை பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படலாம் – அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் தகவல்

வாஷிங்டன்: உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பரவி வருகிறது. கடந்த நவம்பர் மாதம் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டதில் இருந்து உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சம் பேர் இறந்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோபைடனின் உயர்மட்ட மருத்துவ ஆலோசகர் தெரிவித்தார். அமெரிக்காவில் மட்டும் 1 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் கொரோனாவை முழுமையாக அகற்ற 4-வது தவணை பூஸ்டர் தடுப்பூசி தேவைப்படலாம் என்று அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக … Read more

கேஸ் சிலிண்டர் விலை வரலாறு காணாத உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி!

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல, மெல்ல தளர்த்தப்பட்டு வருவதையடுத்து பிரிட்டனில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இதனால் அங்கு சமையல் எரிவாயுவின் தேவை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக, வரலாறு காணாத அளவுக்கு எரிவாயு சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு (2021) துவக்கித்தில் விற்பனை செய்யப்பட்டதைவிட 300% அளவுக்கு சமையல் சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளதாக பிரிட்டன் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்ரன. அத்துடன் பொதுமக்களின் மின்சாரம், … Read more

கனடாவில் லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தினால் பொருளாதார பாதிப்பு ஏற்படும்… அமெரிக்கா எச்சரிக்கை <!– கனடாவில் லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தினால் பொருளாதார பாத… –>

கனடாவில் லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தினால் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. எல்லை தாண்டி செல்லும் லாரி டிரைவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்கிற அரசின் உத்தரவை எதிர்த்து, ட்ரக் ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் ஒட்டாவாவில் தொடங்கிய போராட்டம் தற்போது பல்வேறு பகுதிகளுக்கும் பரவி உள்ளது. விவசாயப் பொருட்களுக்கான விநியோகப் பாதையான அம்பாசிடர் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் அமெரிக்கா, கனடா இடையே கார் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள இரு … Read more

புதிய வகை கொரோனா உருவாக வாய்ப்பு- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனீவா: சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 2 ஆண்டுகள் முடிந்து 3-வது ஆண்டாக உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஒமைக்ரான் என தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. இதையொட்டி உலக சுகாதார அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கேள்வி-பதில் நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அந்த அமைப்பின் கொரோனா தொழில்நுட்பக்குழுவின் தலைவர் மரியா வான்கோவ் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா வைரஸ் பற்றி நிறைய தெரிந்துகொண்டுள்ளோம். ஆனால் … Read more